முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் தி.மு.க.வுடன் கூட்டணி பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2026      தமிழகம்      அரசியல்
Pramalatha 2025-08-29

சென்னை, தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு விடையாக தி.மு.க.வுடன் கூட்டணி என தெரிவிக்கிறோம். நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பத்தின் பேரில் இந்த கூட்டணி அமைத்துள்ளது என்று தி.ம.க.வுடன் கூட்டணி அமைத்தது தொடர்பாக தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

அதி.மு.க. கூட்டணியில் இருந்து வந்த தே.மு.தி.க., கடைசி நேர திருப்பமாக, தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளது. பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து தே.மு.தி.க. போட்டியிட உள்ளது. இந்நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

”தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்ற கேள்விக்கு இன்று (நேற்று) அதிகாரப்பூர்வமாக பதில் வழங்கியுள்ளோம். தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் விருப்பத்தின் பேரில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளோம். விஜயகாந்த் இருக்கும்போதே 2016-ல் அமைய வேண்டிய கூட்டணி இது. பழம் நழுவிப் பாலில் விழுந்தது என்று அப்போது கருணாநிதி கூறினார். தற்போது விஜயகாந்த் இல்லாத நிலையில், தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

தே.மு.தி.க. சார்பில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு குழு அமைத்து தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இரு கட்சி நிர்வாகிகளும் ஆலோசித்த பிறகு, தே.மு.தி.க.வுக்கு எத்தனை இடங்கள், எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து அண்ணன் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார். இன்றிலிருந்து தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்பதை உறுதி செய்துள்ளோம். எங்களின் கூட்டணி 200 க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை இடம் வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் எனத் தெரிவித்தார்.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினுடனை சந்தித்த புகைப்படங்களை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் பிரேமலதா பதிவிட்டிருப்பதாவது: முத்தமிழறிஞர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவர் நமது தலைவர் ‘கேப்டன்’ விஜயகாந்த். திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்! வெல்வோம் ஒன்றாக!” எனப் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து