முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னுடைய சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன்: தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இருப்பேன்: நாகர்கோவில் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

புதன்கிழமை, 25 பெப்ரவரி 2026      தமிழகம்
Stalin 2022 12 29

நாகர்கோவில், என்னுடைய சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்,  தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இருப்பேன் என்றும் அவர் நாகர்கோவிலில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கினார்.  விழாவில் பங்கேற்று முதல்வர்  மு.க.ஸ்டாலின் கூறியதாவது: தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமை தொகையை நிறுத்த முயற்சி மேற்கொண்டனர். பா.ஜ.க. என்கிற டப்பா எஞ்சினை நம்பி அ.தி.மு.க. உள்ளது.  அ.தி.மு.க. என்கிற மூழ்கும் கப்பலை நம்பி பா.ஜ.க. இருக்கிறது.

பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான், ராஜ்ஜியம் கிடைக்காது. பா.ஜ.க. இருக்கும் மாநிலத்தில் வளர்ச்சி இருக்காது, வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருந்தால் அங்கு பா.ஜ.க. இருக்காது. குஜராத் மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு தமிழ்நாடு மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் தரவில்லை. மத்திய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டிற்கு எதையும் செய்யவில்லை. 

எப்போது தான் வன்முறையை விட்டு வளர்ச்சியை பற்றி பா.ஜ.க.வினர் பேசுவார்கள்?  நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை முடிவெடுக்க இவர்கள் யார்? தமிழ்நாட்டை குறை சொல்லி பேச பா.ஜ.க.வினருக்கு தகுதி இருக்கிறதா? தமிழ்நாட்டு மீனவர்கள் நலனுக்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?  தமிழ்நாடு சென்னையில் இருந்து ஆளப்பட வேண்டும், டெல்லியில் இருந்து அல்ல. வாய்க்கு வந்தபடி எல்லாம் வடை சுட்டுக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒருவர் ரூ.15 லட்சம் தரேனு வடை சுட்டமாதிரி, இப்போ வெரைட்டி வெரைட்டியா இ.பி.எஸ். வடை சுட்டுட்டு இருக்கிறார். ஆனால் இந்த வடைகளை நம்ப மக்கள் தயாராக இல்லை.

சிலர் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை வட்டமடிப்பார்கள். தமிழ்நாட்டுக்கு தேர்தல் வருவதால் பிரதமர் மோடி அடிக்கடி வருவார்.  பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகம் வருகிறாரோ அவ்வளவு வித்தியாசத்தில் என்.டி.ஏ. கூட்டணி தோற்கும்.  இந்த தேர்தல் என்பது தமிழ்நாடு மர்றும் என்.டி.ஏ.-க்கு தான். 

தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கி உள்ளது திராவிட மாடல் அரசு. 50 ஆண்டுகள் தொடர் உழைப்பால் தி.மு.க.வின் தலைவர் என்ற இடத்தை அடைந்துள்ளேன். தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இருப்பேன். என்னுடைய சக்திக்கு மீறி உங்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன். தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் நாங்கள் தான் என்பதை தினந்தோறும் செயல்களால் நிரூபிக்கிறோம். தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உழைத்துக்கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து