முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு சார்பில் விழா: ரூ. 858.92 கோடியில் நலத்திட்ட உதவிகள்: 3,12,082 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

புதன்கிழமை, 25 பெப்ரவரி 2026      தமிழகம்
CM-2-2026-02-25

சென்னை, தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று (25.2.2026) கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில், 632 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலவிலான 1,217 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 294 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 1,237 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 3,12,082 பயனாளிகளுக்கு 858 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- கன்னியாகுமரி மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள் வருமாறு.,  நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், அஞ்சுகிராமம், அழகப்பபுரம், சுசீந்திரம், மண்டைக்காடு, விலவூர், உண்ணாமலைக்கடை, திருவிதாங்கோடு, கடையால், அருமணை மற்றும் ஆற்றூர் ஆகிய பேரூராட்சிகளில் 140 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள், குழித்துறை நகராட்சி – மார்த்தாண்டத்தில் 14 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் நவீன தினசரி சந்தை, கிள்ளியூர் மற்றும் பூதப்பாண்டி பேரூராட்சிகளில் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையங்கள், பத்மாபுரம் நகராட்சியில் 6 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம், நாகர்கோவில் மாநகராட்சியில் சர்.சி.வி.ராமசாமி பூங்காவில் 3 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் அறிவியல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கோதநல்லூர் பேரூராட்சியில் 73 லட்சம் ரூபாய் செலவில் தினசரி சந்தை, அஞ்சுகிராமம் மற்றும் திங்கள் நகர் பேரூராட்சிகளில் உள்ள பள்ளிகளில் 1 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைகள், வேம்பனூர் தேரூர் குளத்தில் 1 கோடி ரூபாய் செலவில் பறவைகள் சரணாலயம் மற்றும் அபிவிருத்திப் பணிகள், 1 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட தெங்கம்புதூர் பால்குளம் மற்றும் ஆளூர் சமஞ்சான்குளம், நாகர்கோவில் மாநகராட்சியில் 85 லட்சம் ரூபாய் செலவில் உலர் குப்பைகள் பலவகையாக தரம் பிரிக்கும் மறுசுழற்சி மையம், குளச்சல் நகராட்சியில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் சாலைப் பணிகள், 11 லட்சம் ரூபாய் செலவில் உரக்கிடங்கில் அமைக்கப்பட்ட கூரை மற்றும் 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட பிரதான குழாய்கள், குளச்சல் நகராட்சியில் 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் சிறுபாலம், கொல்லங்கோடு நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் 6 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் சாலைப் பணிகள், பத்மநாபபுரம் நகராட்சி மருந்துகோட்டை உரக்கிடங்கு வளாகத்தில் 1 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் 20 கே.எல்.டி. கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பத்மநாபபுரம் மற்றும் குழித்துறை நகராட்சிகளில் 4 கோடியே 6 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் சாலைப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், நீரோடி – இரயுமன்துறை சாலையில் 35 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள T வடிவ Groynes மற்றும் 10 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சாந்தபுரம் சாலை, கோட்டார் - தர்மபுரம் சாலை, அஞ்சுகிராமம் சாலைகள், இடை வழி தடத்திலிருந்து இரு வழித் தடமாக உறுதிப்படுத்தப்பட்டு அகலப்படுத்தப்பட்ட நாகர்கோவில் கடற்கரை சாலை, ஒரு வழி தடத்திலிருந்து இடை வழி தடமாக மாற்றி உறுதிபடுத்தப்பட்ட புதிய வீராணமங்களம் சாலை, வெள்ளமடம் -சுசீந்திரம் சாலையில் மேம்படுத்தப்பட்ட ஓடுதளம், ஒரு வழி தடத்திலிருநுது இடைவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தப்பட்டு சிறுபாலம் கட்டப்பட்டுள்ள ஈத்தாமொழி சந்திப்பு - பெரியகாட்டுத்துறை சாலை, குளச்சல் -திருவட்டார் சாலையில் மேம்படுத்தப்பட்ட ஓடுதளம், ஆரல்வாய்மொழி -நெடுமங்காடு சாலையில் கட்டப்பட்டுள்ள சிறு பாலம், மேம்படுத்தப்பட்ட தேனாம்பாறை சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 66 கோடியே 52 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், சிறப்பு உதவி திட்டம், முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், தேசிய ஊரக வளர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பசுமை தமிழ்நாடு இயக்கம், பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதி திட்டம், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம், நம்ம ஊரு நம்ம அரசு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களில் கீழ் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடங்கள், சாலைப் பணிகள், தெருவிளக்குகள், சமுதாய நலக்கூடங்கள், சிமெண்ட் சாலைகள், பொது நூலகங்கள், எரிவாயு தகனமேடைகள், அங்கன்வாடி மையங்கள், உணவு தானிய கிடங்குகள், மரக்கன்றுகள், சிறு பாசன குளங்கள் புனரமைப்பு, பள்ளிக் கட்டிடங்கள், பொது விநியோகக் கட்டிடங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், பள்ளிகளில் சத்துணவு சமையலறைகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட 595 முடிவுற்றப் பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் கன்னியாகுமரி மற்றும் பேச்சிப்பாறையில் 50 லட்சம் ரூபாய் செலவில் மதி அனுபவ அங்காடிகள் என மொத்தம், 632 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1,217 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதல்வர்  நேற்று திறந்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து