Idhayam Matrimony

தி.மு.க.வில் இணைந்த ஓ.பி.எஸ்.க்கு அ.தி.மு.க. கண்டனம்

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2026      தமிழகம்
OPS 2023-10-25

சென்னை, ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்திருப்பதன் மூலம் தமிழக அரசியலில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அ.தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு சார்பில் எக்ஸ் வலைதளத்தில் காரசாரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:- "ரோஸி டீக்கடை" நடத்திட்டு இருந்த உங்களை, ஆளாக்கி, அமைச்சராக்கி, ஏன் முதலமைச்சராகவே ஆக்கியது இந்த இயக்கம். அம்மா வளர்த்த இயக்கத்திற்கு ஏ-பார்ம், பி-பார்ம் கையெழுத்து போடும் பெருமையைக் கொடுத்து அழகு பார்த்தார்கள் அண்ணா தி.மு.க.தொண்டர்கள். ஆனால் நீங்களோ, உள்ளே இருந்தும், உ.பி.யாகவே இருந்தீர்கள்.

எம்.ஜி.ஆர். மாளிகையில் கருணாநிதி வசனப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தீர்கள். உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது போல், வளர்த்த இயக்கத்தின் வாயிற்கதவை எட்டி உதைத்தீர்கள். பாவம் சும்மா விடுமா? அரசியல் அனாதையாக, இனி நீங்கள் அ.தி.மு.க. வேட்டியைக் கூட கட்ட முடியாத நிலைக்கு தள்ளினர் ரத்தத்தின் ரத்தமான தொண்டர்கள். பசுத்தோல் போர்த்திக் கொண்டு நீங்கள் நடத்திய நாடகமெல்லாம் அம்பலப்பட்டு நின்றதும், வேறு வழியே என்றதும், ஓனர் வாசப்படிக்கே போயாச்சோ? இனி உம்மைப் போன்ற பச்சோந்திக்கு அம்மா எல்லாம் சும்மா தானே. இந்த கருமத்துக்கு தர்ம யுத்தம் 1.ஓ, 2.ஓ ன்னு வேற... உங்களையும் நம்பி வந்து ஏமாந்த அந்த சில தொண்டர்களின் பாவம் தலைமுறைக்கும் தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து