Idhayam Matrimony

அனைத்து உண்மைகளும் வெளிப்படும் வரை நெருக்கடிகளை உறுதியோடு எதிர்கொண்ட கெஜ்ரிவால், சிசோடியாவுக்கு பாராட்டுகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2026      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, உண்மை வெளிப்படும் வரை அனைத்து நெருக்கடிகளையும் உறுதியோடு எதிர்கொண்ட மதிப்பிற்குரிய நண்பர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியாவுக்கு எனது பாராட்டுகள் என்றும் மத்திய பா.ஜ.க அரசு குறுகிய கால அரசியல் லாபங்களுக்காக விசாரணை அமைப்புகளின் மாண்பை அடகு வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கெஜ்ரிவால் விடுதலை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் கல்வி அமைச்சர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரை, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நேற்று விடுவித்தது. இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘நான் ஊழல்வாதி அல்ல. கெஜ்ரிவாலும் மணீஷ் சிசோடியாவும் முற்றிலும் நேர்மையானவர்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது. உண்மை வெற்றி பெறும் என்று நாங்கள் எப்போதும் கூறி வந்தோம். இந்திய சட்ட அமைப்பின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

அமித் ஷாவும் மோடியும் சேர்ந்து ஆம் ஆத்மி கட்சியை ஒழித்துக்கட்ட மிகப் பெரிய சதித்திட்டத்தை தீட்டினார்கள். ஆம் ஆத்மி கட்சியின் 5 பெரிய தலைவர்களை சிறையில் அடைத்தார்கள். முதல்வர் பதவியில் இருந்த ஒருவர், வீட்டில் இருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒவ்வொரு செய்தி சேனலிலும் நாங்கள் ஊழல்வாதிகள் என்று அழைக்கப்பட்டோம். கெஜ்ரிவால் ஊழல்வாதி அல்ல. நான் என் வாழ்க்கையில் நேர்மையை மட்டுமே சம்பாதித்துள்ளேன்.  கெஜ்ரிவாலும், மணீஷ் சிசோடியாவும், ஆம் ஆத்மி கட்சியும் நேர்மையானவர்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. நமது அரசியலமைப்புச் சட்டத்தையும், அத்தகைய ஒரு அரசியலமைப்பை நமக்கு வழங்கிய பி.ஆர். அம்பேத்கரையும் நினைத்து நாங்கள் மீண்டும் பெருமைப்படுகிறோம். உண்மை மீண்டும் வென்றுள்ளது’’ என தெரிவித்தார்.

இதற்கிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மத்திய பா.ஜ.க அரசு குறுகிய கால அரசியல் லாபங்களுக்காக விசாரணை அமைப்புகளின் மாண்பை அடகு வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். சிறிதேனும் வெட்கம் கொள்ளுங்கள். நீதிமன்றத் தீர்ப்பின் வாயிலாக உண்மை வெளிப்படும் வரை அனைத்து நெருக்கடிகளையும் உறுதியோடு எதிர்கொண்ட மதிப்பிற்குரிய நண்பர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியாவுக்கு எனது பாராட்டுகள்’ எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து