எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, பிப்.24 - பிரதமர் மன்மோகன்சிங்கை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி நேற்று சந்தித்து பேசினார். அப்போது நெசவாளர்களின் பிரச்சனை குறித்து அவர் எடுத்துக்கூறினார். இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர். பருத்தி நூல், பட்டு நூல் ஆகியவற்றின் விலை உயர்வினால் இவர்கள் தங்களுடைய தொழிலை செய்வதில் இன்னல்ளை அடைந்துவருகின்றனர். இவர்களின் இன்னலை போக்கும் வகையில் இந்த பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கிடம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி எடுத்துக் கூறினார். ராகுல்காந்தியுடன் உ.பி. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரீட்டா பகுகுணா ஜோஷி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பிரதமரை சந்தித்தனர். நெசவாளர்களின் கடன்கள் ரூ. 3,400 கோடி இருப்பதாக கூறப்படுகிறது. கடுமையான விலை உயர்வு காரணமாக இந்த கடன்களை அடைக்க முடியாமல் நெசவாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அவர்களுடைய கஷ்டத்தை போக்கும் வகையில் அவர்களுடைய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பிரதமரை ராகுல்காந்தி கேட்டுக்கொண்டதாக ரீட்டா பகுகுணா தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், உ.பி. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரம்மோத் திவாரி மற்றும் இதர காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோரும் இந்த பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்று இருந்தனர். நெசவாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் அறிவிப்பை வரும் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்று ராகுல் தலைமையிலான பிரதிநிதிகள் குழு பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்: மத்திய பட்ஜெட்டிற்கு இ.பி.எஸ். வரவேற்பு
01 Feb 2026சென்னை, 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து சாதனை படைத்துள்ள நிர்மலா சீதாராமனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
-
வரி தாக்கலின் போது பொய் கணக்கு காட்டினால் 100 சதவீதம் அபராதம்: பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
01 Feb 2026புதுடெல்லி, வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரிசட்டம் நடைமுறைக்கு வரும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி தாக்
-
வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு: பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2026டெல்லி, வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.1.27 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற்றிலும் புறக்கணிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
01 Feb 2026சென்னை, மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு ஜனாதிபதியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
01 Feb 2026டெல்லி, 2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு ஜனாதிபதி திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார்.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன் நிதியமைச்சக குழுவினருடன் நிர்மலா சீதாராமன் புகைப்படம்
01 Feb 2026டெல்லி, எதிர்வரும் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட், பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
-
முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்வி வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு
01 Feb 2026டெல்லி, மின்சார வாகனங்களை ஊக்குவிக்க லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –02-02-2026
02 Feb 2026


