முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் உறுப்பினர் விவகாரம்: பிரதமருடன் மோதல்

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2014      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, பிப். 5 - லோக்பால் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கமிட்டியில் 5_வது உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் பா.ஜ. க. தலைவர் சுஷ்மா சுவராஜுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. பிரதமர் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்பவர்களையும் விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்கான சட்டத்துக்கு கடந்த குளிர்கால கூட்ட தொடரில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின்னர் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. லோக்பால் சட்டப்படி அதன் தலைவரை தேர்ந்தெடுக்க பிரதமர் தலைமையில் 5 நபர் கமிட்டி அமைக்கப்பட வேண்டும். 

இந்த கமிட்டியில் பிரதமர், மக்களவை சபாநாயகர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்படும் நீதிபதி இடம் பெறுவர். 

இவர்கள் 4 பேரும் சேர்ந்து 5_வது உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும். 5_வது உறுப்பினராக நீதிபதி பி.பி. ராவ் பெயரை பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்தார். 

இதற்கு மக்களவை சபாநாயகர் மீராகுமார் மற்றும் தலைமை நீதிபதி சதாசிவம் ஆகியோர் ஒப்புதல் அளித்தனர். ஆனால் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பி.பி. ராவை லோக்பால் கமிட்டி உறுப்பினராக நியமிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 

பி. பி.ராவ் காங்கிரஸ் ஆதரவாளர் என குற்றம் சாட்டினார். பி.பி. ராவுக்கு பதிலாக பிரபல வக்கீல்கள் ஹரீஸ் சால்வே அல்லது பராசரன் பெயரை அவர் பரிந்துரை செய்தார். 

இதனை பிரதமர் ஏற்றுக் கொள்ளவில்லை. 4 உறுப்பினர்களில் 3 பேர் ஆதரவு பி.பி. ராவுக்கு இருப்பதன் அடிப்படையில் பா.ஜ. . எதிர்ப்பையும் மீறி 5_வது உறுப்பினராக பி.பி. ராவ் நேற்று முன் தினம் நியமிக்கப்பட்டார். 

நாடாளுமன்ற தொடர் துவங்கிய நிலையில் லோக்பால் கமிட்டி உறுப்பினர் விவகாரத்தில் மத்திய அரசுக்கும் , பா.ஜ.க. வுக்கும் இடையே புதிய கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago