முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராமங்களில் கழிவறை வசதி: இந்திய இளைஞருக்கு விருது

வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், அக்.10 - கிராமங்களில் குறைந்த செலவில் கழிவறை வசதிகள் ஏற்படுத்தித் தந்தமைக்காக இந்திய இளைஞர் அனூப் ஜெயினுக்கு `குளோபல் சிட்டிசன்' விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுடன் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் ரொக்கப் பரிசும் அளிக்கப்பட்டுள்ளது.

இவர் 2011ம் ஆண்டு பிஹாரில் `ஹியூமேன்யூர் பவர்' எனும் அமைப்பைத் தொடங்கி, அதன் மூலம் இந்தியக் கிராமங்களில் சுகாதாரமான கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தரத் தொடங்கினார். கடந்த வாரம் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி குளோபல் சிட்டிசன் விழாவின்போது 2019ம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து வீடுகள் மற்றும் பள்ளிகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்துவது தனது இலக்கு என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே தனது அமைப்பு மூலம் சுமார் 17,000 பயனாளர்களுக்குக் கழிவறை வசதிகள் ஏற்படுத்தித் தந்துள்ளார் அனூப் ஜெயின். குடியுரிமை, புதிய கண்டுபிடிப்பு, புதிய கண்டுபிடிப்பின் பயன் மற்றும் அக்கண்டுபிடிப்பின் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் வாக்களித்து இறுதியில் அனூப் ஜெயின் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago