எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
த்ரிஷா இல்லனா நயன்தாரா டிரைலர் வெளியீட்டு விழா
த்ரிஷா இல்லனா நயன்தாரா டிரைலர் வெளியீட்டு விழா
Cameo Films CJ ஜெயகுமார் தயாரிப்பில் GV பிரகாஷ் குமார், கயல் ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் , VTV கணேஷ் ஆகியோர் நடித்துள்ள த்ரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைபுலி S தாணு, இயக்குனர்கள் AR முருகதாஸ், பார்த்திபன், விஜய், கொம்பன் இயக்குனர் முத்தையா , பாடலாசிரியர் நா.முத்துகுமார். தயாரிப்பாளர்கள் KE ஞானவேல் ராஜா, திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட் CV குமார், 2D எண்டர்டெய்ன்மென்ட் ராஜசேகர் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.
படத்தை பற்றி தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு கூறும்பொழுது “ இயக்குனர் ஆதிக் மிகவும் திறமைசாலி, த்ரிஷா இல்லனா நயன்தாரா கதையை சில வருடங்களுக்கு முன் என்னிடம் கூறினார். அப்பொழுது என் நிறுவனத்தின் கீழ் சில படங்கள் தயாரித்து வந்ததால் என்னால் இப்படத்தை தயாரிக்க இயலவில்லை. இப்படத்தை Cameo Filmsஜெயகுமார் தயாரிக்க முடிவு செய்தது மிக நேர்த்தியான முடிவு என்றார்.
பங்கேற்கும் நிகழ்ச்சியை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும் வகையில் ஒரு குட்டி கதையுடன் ஆரம்பித்த இயக்குனர் பார்த்திபன் கூறுகையில் “GV பிரகாஷை இப்படி பார்க்க மிக ஆச்சர்யமாய் உள்ளது. பல ஐட்டங்களை உள்ளடக்கியிருக்கும் GV பிரகாஷ் ஒரு ‘Item’” என்று கிண்டல் செய்தார். “ நடிப்பு, இசை என GVபிரகாஷ் மிகவும் பக்குவம் பெற்றுவிட்டார். இரண்டிற்கும் நேரத்தை சரியாக கடைப்பிடிக்கிறார் அவருக்கு என் வாழ்த்துக்கள்” என வாழ்த்தினார் இயக்குனர் விஜய்.
இயக்குனர் முருகதாஸ் பேசுகையில் “வெவ்வேறு துறைகளை கடந்து செல்லும் GV பிரகாஷுக்கு எனது வாழ்த்துக்கள். முதலில் என்னுடைய தயாரிப்பில்தான் அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்த எண்ணினேன். எனினும் என் தயாரிப்பில் GV பிரகாஷ் கண்டிப்பாக நடிப்பார்” எனக் கூறினார்.
டார்லிங் படத்தில் கதாநாயகனாய் அறிமுகம் செய்ததற்கும், இப்பொழுது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை ஸ்டுடியோ க்ரீன் வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக் கூறினார் தயாரிப்பாளர் KE ஞானவேல் ராஜா தயாரிப்பாளர்கள் CV குமார், ராஜசேகர், இயக்குனர் முத்தையா மற்றும் பாடலாசிரியர் த்ரிஷா இல்லனா நயன்தாரா குழுவினருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
படத்தின் டிரைலரை இயக்குனர் முருகதாஸ் வெளியிட இயக்குனர் ஆதிக்கின் அப்பா ரவி கந்தசாமி பெற்றுக் கொண்டார். பல வருடங்கள் உதவி இயக்குனராய் பணிபுரிந்து இப்படத்தில் இணை இயக்குனராய் பணி புரிந்திருக்கும் ரவி கந்தசாமியை கௌரவப் படுத்தும் வகையில் நடந்த இந்நிகழ்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் நெகிழ செய்தது. படத்தின் கதாநாயகனும், இசையமைப்பாளருமனா GV பிரகாஷ் குமார் டீசர் வெளியீட்டு விழாவை சிறப்பித்த அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆப்கானிஸ்தான் எல்லையில் பாக்., நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு 80 ஆக உயர்வு
23 Feb 2026இஸ்லாமாபாத், ஆப்கனிஸ்தானுக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-க்கும் மேலாக அதிகரி
-
தங்கம் விலை உயர்வு
23 Feb 2026தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,18,880-க்கு விற்பனையானது.
-
நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி
23 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
23 Feb 2026- திருச்செந்தூர் முருகன் தங்க முத்துகிடா வாகனம், அம்பாள் வெள்ளி அன்னவாகனம்.
- மதுரை கூடலழகர் கஜேந்திர மோட்சம், இரவு சேசவாகனம்.
- காரமடை ரெங்கநாதர் விழா தெடக்கம்,
-
இன்றைய நாள் எப்படி?
23 Feb 2026


