எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகத்துக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதையட்டி ரூ. 2 கோடி செலவில் யாகசாலைக்கு பிரமாண்மான பந்தல் அமைக்கப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி கடந்த ஆண்டு ஜனவரி 26ந் தேதி பாலாலயத்துடன் தொடங்கியது. கடந்த ஆண்டு இறுதியில் முழுமையடையும் என எதிர்பார்க்கப்பட்ட திருப்பணிகள் பல்வேறு காரணங்களால் தாமதமானது. அதைத் தொடர்ந்து பணிகள் விரிவுபடுத்தப்பட்டது. தொல்லியல் துறையின் வழிகட்டுதலோடு திருப்பணிகள் தற்போது முழுடையடையும் நிலையில் உள்ளது. பிரதான கோபுரங்கள், பிரகாரங்கள், கோவிலுக்குள் அமைந்துள்ள சன்னதிகள் ஆகியவை புதுபொலிவு பெற்றுள்ளன. வண்ணம் தீட்டும் பணியும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வருகிற பிப்ரவரி மாதத்தில் 3 தேதிகள் பொருத்தமாக இருக்கிறது. கோவில் சிவாச்சாரியார்கள் முடிவு செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பினர். அதனைத் தொடர்ந்து மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி ஆலோசனையின்பேரில் பிப்ரவரி 6ந் தேதி கும்பாபிஷேகம் நிறைவேற்ற கடந்த ஆகஸ்டு மாதம் ஒப்புதல் பெறப்பட்டது. எனவே கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதற்கான பந்தல் முகூர்த்தம் கடந்த மாதம் 20ந் தேதி நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் திட்டமிட்டப்படி பிப்ரவரி 6ந் தேதி கும்பாபிஷேக நிறைவேற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேதியை மாற்ற வேண்டுமாமமென இந்துசமய அறநிலையததுறை முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கும்பாபிஷேகதிற்கான யாக சாலை பூஜைகள் நடைபெறும். அம்மணிஅம்மன்கோபுரத்தையட்டி அமைந்துள்ள 5ம் பிரகாரத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகிறது. எளிதில் தீப்பற்றாத வகையில் இரும்பு தகடுகள் பயன்படுத்தி பந்தல் அமைக்கப்படுகிறது. கொடையாளர்கள் மூலம் ரூ. 2 கோடி செலவில் யாக சாலை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. பந்தல் அமைக்கும் பணி முடிவடைநததும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகத்திற்ககான தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மத்திய-மாநில உறவு குறித்த உயர்நிலைக் குழுவின் முக்கிய பரிந்துரைகள்
19 Feb 2026சென்னை, பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தக்கூடாது உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகள் மத்திய-மாநில உறவு குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கையில்
-
அசாம், காமாக்யா கோவிலில் பிரியங்கா காந்தி வழிபாடு
19 Feb 2026டெல்லி, காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி காமாக்யா கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
-
சீனாவில் பட்டாசு கடையில் திடீர் தீவிபத்து - 12 பேர் பலி
19 Feb 2026பெய்ஜிங், சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோக நிகழ்வாக பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
-
'தி கேரளா ஸ்டோரி - 2' திரைப்படத்தை தடை செய்ய கேரள முதல்வர் வலியுறுத்தல்
19 Feb 2026திருவனந்தபுரம், கேரள முதல்வர் பினராயி விஜயன் தி கேரளா ஸ்டோரிக்கு எதிராக தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
-
வருகிற மார்ச் 12-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த தஞ்சாவூர் பொதுக்கூட்டம் ரத்து
19 Feb 2026திருச்சி, திருச்சியில் வரும் மார்ச் 11-ம் தேதி பிரதமர் பங்கேற்க விருக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேரை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
இலவசங்களை அறிவிப்பது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
19 Feb 2026புதுடெல்லி, தேர்தலுக்காக இலவசங்களை அறிவிப்பது இன்னும் எத்தனை காலத்திற்கு தொடரும் என்று இலவசங்கள் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்கேள்வி எழுப்பியுள்ளது.
-
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க என்ற பெயரில் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி தொடக்கம்
19 Feb 2026சென்னை, எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கினார்.
-
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா புதிய கட்சித் தொடங்குகிறார்
19 Feb 2026ஐதராபாத், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியைத் தொடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
-
எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரம்: பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் சகோதரர் ஆண்ட்ரூ கைது
19 Feb 2026லண்டன், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில், பிரிட்டன் அரசர் சார்ல்ஸின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.


