எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி:- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நேற்று “சர்வதேசமகளிர் தினம்” கொண்டாடப்பட்டது. மகளிரியல் துறை மற்றும் மகளிரியல் மையம் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தது.
அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறை பேரா.கா.மணிமேகலை தமது வரவேற்புரையில ,உலக ம
களிர் தின நாளை ஆணாதிக்க சமூகத்தில், பெண்களின் உழைப்பிற்கான மரியாதையை வென்றெடுத்தநாள் இது என குறிப்பிடவேண்டும் என்றார். “கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமோ? பெண்களறிவை வளர்த்தால் வையம் பேதமையற்றிடுங் காணீர்!”என்று பாரதியின் கூற்றுக்கிணங்க பாலின சமத்துவசமுதாயம் அமைய வேண்டும் என்றார். பாரதி கண்டகனவை நனவாக்குவதற்கும், சமூகத்தில் பெண்கள் உயரியநிலையை அடைவதற்கும் ,உரிமைகளைகேட்டு பெறுவதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா.சொ.சுப்பையாஅவர்கள் தமது தலைமை உரையில், மகளிர் தினம் என்பது ஆண்களை சாடுவதற்காக அல்ல. புhலின சமத்துவத்தையும் சமநீதியையும் உறுதிப் படுத்துவதற்காகவே கொண்டாடப்படுகிறதுஎன்றார். ஆண்களை மதிக்கக்கூடிய பெண்கள் தான் சமூகத்தில் உயர்ந்துள்ளனர் என்றும், பெண்களைமதிக்கக் கூடிய ஆண்கள் தான் வளர்ந்திருக்கி
ன்றனர் என்றும் குறிப்பிட்டார். பெண்கள் வெற்றி பெரும் போது முதலில் அதை பாராட்டக் கூடியவர்வர்கள் ஆண்களாகத்தான் இருக்க வேண்டும். ஒரு பெண் தன்னுடைய வளர்ச்சிக்கு ஆண்களின் பங்கை பயன்படுத்துவது மிகவும் அவசியமானது. ஆண்களுக்குப் பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் மதிப்பு அளிக்க கூடியவர்களாக இருக்கவேண்டும். நமதுகலாச்சாரமும், பண்பாடும், வரலாறும் பெண்களை மதிக்கிறது. அதனால், நமது கலாச்சாரத்தையும் ,பண்பாட்டையும் சேதப்படுத்தாமல் கிடைக்கின்ற வளர்ச்சியே உண்மையான நிலையான வளர்ச்சிஎன்றார்.
ஒரு ஆணின் வெற்றியிலும் பெண்ணின் பங்களிப்பு உள்ளது.
ஆகவே ஒரு ஆண் பெண்ணையோ, பெண் ஆணையோ எதிரியாக பார்க்கக் கூடிய கருத்து முற்றிலும் மாறவேண்டும். தன்னுடைய வளர்ச்சிக்கு ஆண்களை பயன்படுத்திய பெண்களே முழுமையான முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். அதுதான் ஒரு ஆரோக்கியமான வெற்றியாகவும், முன்னேற்றமாகவும் இருக்கமுடியும். மேலும் அவர்குறிப்பிடுகையில், வாழ்க்கை என்பது எத்தனைவருடம் வாழ்கிறோம் என்பது முக்கியமில்லை, எத்தனைநாட்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என்பதே முக்கியம். தன்னுடைய மகிழ்ச்சியை ஆணும், பெண்ணும் பகிர்ந்துகொண்டால் இச்சமூகம் ஆரோக்கியமாக இருக்கும். யார் ஒருவர் சமூகத்தோடு ஒத்துபோகிறார்களோ, மேலும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்களோ அவர்களே வெற்றியைக் காண்கிறார்கள். அழகப்பாபல்கலைக்கழகத்தில் பெண்களுக்கு ஒவ்வொருதுறையிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது என்று அவர் தெரிவித்தார்.
மகளிர் தினத்தை முன்னிட்டுபல்கலைக்கழக மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
மகளிரியல் மையத்தின் உதவிப் போராசிரியை முனைவர். வீ.வீரமணி நன்றி கூறினார். இவ்விழாவில் 600-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழகத்தின் உறுப்புகல்லூரி மாணவமாணவிகள் ,பேராசியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவ,மாணவிகள், கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
ஜன நாயகன் திரைப்படத்தை திரையிட தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்ப்பா..? மதுரையில் வைகோ பேட்டி
08 Jan 2026மதுரை, ஜன நாயகன் படத்தை திரையிட தி.மு.க. அரசு கூட்டணி கட்சிகள் எதிர்க்கவில்லை என்று வைகே கூறினார்.
-
ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகள்: மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை
08 Jan 2026சிட்னி, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
-
தை பிறந்தால் வழிபிறக்கும்: கூட்டணி குறித்து ஓ.பி.எஸ். விளக்கம்
08 Jan 2026சென்னை, ஓ.பன்னீர் செல்வம் கூட்டணி குறிதது தைபிறந்தால் வழிபிறக்கு என்று கூறினார்.
-
ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா அணி
08 Jan 2026சிட்னி, ஆஷஸ் தொடரில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.
-
9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு பிறகு மொத்தம் 6.5 கோடி பேரின் பெயர்கள் நீக்கம்..!
08 Jan 2026புதுடெல்லி, எஸ்.ஐ.ஆர்.
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: இ.பி.எஸ். - நயினார் ஆலோசனை
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-01-2026
09 Jan 2026 -
தமிழக அரசியலில் பரபரப்பு: தி.மு.க. ஆட்சிக்கு ராமதாஸ் பாராட்டு
09 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தி.மு.க. ஆட்யை பாராட்டியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜன. 23-ல் மதுரையில் பொதுக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்
09 Jan 2026மதுரை, மதுரையில் வருகிற 23-ம் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்த விஜய்
09 Jan 2026சென்னை, தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
மக்களின் கனவுகளை கேட்டறிந்து செயல்படுத்த 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
09 Jan 2026சென்னை, உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.9) தொடக்கி வைத்தார்.


