எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் 1426 பசலி ஆண்டு நிலவரி கணக்கு முடிப்பு பற்றிய ஆய்வு (ஜமாபந்தி) முதல் நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்தில் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் டி.பி.ராஜேஷ், ஜமாபந்தியினை தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து பல்வேறு வகையான கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
ஜமாபந்தி தொடக்கம்
மேலும், கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், பண்ருட்டி வட்டத்தில் கடலூர் சார் ஆட்சியர், சிதம்பரம் வட்டத்தில் கடலூர் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்), புவனகிரி வட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர், விருத்தாச்சலம் வட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், திட்டக்குடி வட்டத்தில் கடலூர் தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்), வேப்பூர் வட்டத்தில் விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் இன்று 25.05.2017 முதல் சில தாலுக்காவில் 06.06.2017 வரையிலும் சில தாலுக்காவில் 09.06.2017 வரையிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
நலத்திட்ட உதவிகள்
கடலூர் வட்டத்தில் கலெக்டர் டி.பி.ராஜேஷ், இன்று ஜமாபந்தியினை தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து பல்வேறு வகையான கோரிக்கை மனுக்களைப் பெற்றார். இன்று வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்களில் தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாலா, ஜெ.பாலச்சந்திரன், நடுவீரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாந்திமதி, பாதிரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலெக்டர் அவர்களிடம் பட்டா மாறுதல் கோரி அளிக்கப்பட்ட மனுக்களின்பேரில் உடனடி தீர்வு காணப்பட்டு 5 நபர்களுக்கும் பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், 2 நபர்களுக்கு முதியோர் ஓய்வூதியத்தொகைக்கான ஆணைகளையும் இன்று நடைபெற்ற ஜமாபந்தியில் கலெக்டர் டி.பி.ராஜேஷ், வழங்கினார்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
ஜமாபந்தியில் தொண்டாமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஜெ.பாலச்சந்திரன் என்பவர் பட்டா மாறுதல் கோரி மனுவினை கலெக்டர் அவர்களிடம் வழங்கியதில் கடந்த ஐந்து வருடங்களாக பட்டா மாறுதல் கோரி மனு அளித்ததன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை எனக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையினை வழங்காத நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற ஜமாபந்தியில் அளிக்கப்பட்ட மனுவின்மீது உடனடி தீர்வு காணப்பட்டு அரை மணிநேரத்தில் கலெக்டர் அவர்களிடமிருந்து பட்டா மாறுதலுக்கான ஆணை பெறப்பட்டதில் நானும் எனது குடும்பத்தாரும் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக கலெக்டர் அவர்களிடம் நேரில் தெரிவித்தார்
மனுமீது நடவடிக்கை
ஜமாபந்தியில் திருவந்திபுரம் குறுவட்டம் தொண்டமாநத்தம், கோதண்டராமாபுரம், பாதிரிக்குப்பம், கருப்படித்துண்டு, கூத்தப்பாக்கம், நடுவீரப்பட்டு, சேடப்பாளையம், செம்மங்குப்பம் ஆகிய கிராமங்களுக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்று அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காண்பதற்காக சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் னுக்களை அளித்தார்.
இன்று நடைபெறும் இடங்கள
இன்று திருவந்திபுரம் குறுவட்டம், ராமாபுரம், கெங்கமநாயக்கன் குப்பம், அன்னவல்லி, சென்னப்பநாயக்கண் பாளையம், அரிசிபெரியாங்குப்பம், வெட்டுக்குளம், மாவடிப்பாளையம், குமாரப்பபேட்டை, வெள்ளக்கரை ஆகிய கிராமங்களிலும், மே-29ம் நாள் திருவந்திபுரம் குறுவட்டம் வானமாதேவி (வடக்கு), விலங்கல்பட்டு, வானமாதேவி(தெற்கு), திருமாணிக்குழி, திருவந்திபுரம், ஓட்டேரி, ஆகிய கிராமங்களிலும், மே-30ம் நாள் ரெட்டிச்சாவடி குறுவட்டம் பில்லாலி, குணமங்கலம், வரக்கால்பட்டு, காராமணிக்குப்பம், வெள்ளப்பாக்கம், குண்டு உப்பலவாடி, பெரியகங்கணாங்குப்பம், சின்னகங்கணாங்குப்பம், உச்சிமேடு, சுபஉப்பலவாடி, அழகியநத்தம் ஆகிய கிராமங்களிலும், மே-31ம் நாள் ரெட்டிச்சாடி குறுவட்டம் களையூர், இரண்டாயிரவிளாகம், திருப்பணாம்பாக்கம், கரைமேடு, உள்ளேரிப்பட்டு, மலையபெருமாள் அகரம், பள்ளிப்பட்டு, நல்லாத்தூர், மேலக்குப்பம், தூக்கனாம்பாக்கம், தென்னம்பாக்கம் ஆகிய கிராமங்களிலும், ஜுன்-1ம் நாள் ரெட்டிச்சாவடி குறுவட்டம் கீழ்குமாரமங்கலம், ஒடலப்பட்டு, மேலழிஞ்சிப்பட்டு, கீழ் அழிஞ்சிப்பட்டு, நாகப்பனூர், மதலப்பட்டு, புதுக்கடை, வடபுரம் கீழ்பாதி, சிங்கிரிக்குடி, கிளிஞ்சிக்குப்பம், செல்லஞ்சேரி, காரணப்பட்டு ஆகிய கிராமங்களிலும், ஜுன்-2 ம் நாள் மஞ்சக்குப்பம் குறுவட்டம் காயல்பட்டு, ஆண்டார்முள்ளிப்பள்ளம், ஆலப்பாக்கம், கம்பளிமேடு, தியாகவல்லி, திருச்சோபுரம், பச்சையாங்குப்பம், பொன்னியாங்குப்பம் ஆகிய கிராமங்களிலும், ஜுன்-5ம் நாள் மஞ்சக்குப்பம் குறுவட்டம் மருதாடு, செஞ்சிகுமாரபுரம், தோட்டப்பட்டு, நத்தப்பட்டு, காரைக்காடு, குடிகாடு, கடலூர் முதுநகர் (முனிசிபல் அல்லாதது) ஆகிய கிராமங்களிலும், ஜுன்-06ம் நாள் மஞ்சக்குப்பம் குறுவட்டம் செல்லங்குப்பம், கடலூர் முதுநகர் (முனிசிபல்) திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம், வில்வராயநத்தம், உதரமாணிக்கம், வன்னியர்பாளையம், தேவனாம்பட்டினம், கோண்டூர் (முனிசிபல்), கேண்டூர் (முனிசிபல் அல்லாதது), வெளிச்செம்மண்டலம், கரையேறவிட்டகுப்ப்ம (முனிசிபல்), கரையேறவிட்டகுப்பம் (முனிசிபல் அல்லாதது) ஆகிய கிராமங்களிலும் கலெக்டர் அவர்களால் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படவுள்ளது.
நடவடிக்கை
ஜமாபந்தியில் பட்டாமாற்றம் கோரி 81 மனுக்களும், முதியோர் உதவித்தொகை கோரி 26 மனுக்களும், குடும்ப அட்டை, சான்றிதழ் கோரி மற்றும் இதர மனுக்கள் உள்ளிட்ட 41 மனுக்களும் ஆகமொத்தம் 148 மனுக்களை கலெக்டர் அவர்களால் பெறப்பட்டு சம்மந்தப்பட்டு துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பலர் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) எம்.டி.கிருபாகரன், உதவி இயக்குநர் (நிலஅளவை) எஸ்.ரவி, கடலூர் வருவாய் வட்டாட்சியர் பி.பாலமுருகன், வட்டாட்சியர் (ச.பா.தி) எஸ்.சிவா, கலெக்டர் அலுவலக மேலாளர் பி.தேவனாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுரேஷ்குமார், கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் பார்கவி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
25 Feb 2026சென்னை, முதுபெரும் அரசியல் தலைவரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) சென்னையில் நேற்று காலமானார்.
-
தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள்: மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை
25 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை நடத்துகிறார்.
-
குமரியில் ரூ. 30 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
25 Feb 2026கன்னியாகுமரியில் மினி டைடல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
-
என்னுடைய சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன்: தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இருப்பேன்: நாகர்கோவில் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
25 Feb 2026நாகர்கோவில், என்னுடைய சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இ
-
தனக்கென வாழாமல் பிறர்காகவே வாழ்ந்தவர்: நல்லகண்ணுவுக்கு இ.பி.எஸ். இரங்கல்
25 Feb 2026சென்னை, சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு மறைவுக்கு அ.தி.மு.க.
-
யாருடன் கூட்டணி என்பது குறித்து ராமதாஸ் இன்று முக்கிய முடிவு
25 Feb 2026திண்டிவனம், பா.ம.க. கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் இன்று முடிவு செய்கிறார்.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
25 Feb 2026கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
மக்களின் உரிமைகளுக்காக பேராடியவர்: நல்லகண்ணுவுக்கு விஜய் புகழஞ்சலி
25 Feb 2026சென்னை, மக்களின் உரிமைகளுக்காக பேராடியவர் நல்லகண்ணு என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
ராமதாஸ் தொடர்ந்த வழக்கு: அன்புமணி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
25 Feb 2026சென்னை, ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் அன்புமணி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு சார்பில் விழா: ரூ. 858.92 கோடியில் நலத்திட்ட உதவிகள்: 3,12,082 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
25 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.2.2026) கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில், 632 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ச
-
தமிழக காவல் துறைக்கு ரூ.124 கோடியில் புதிய மென்பொருள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
25 Feb 2026சென்னை, தமிழக போலீஸ் துறைக்கு ரூ.124.37 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மென்பொருளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
-
அதானி நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்கும் தமிழக அரசு
25 Feb 2026சென்னை, அதானி நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு மின்சாரம் வாங்கியது.
-
இலவச வாக்குறுதிகளை தடைசெய்ய கோரி வழக்கு: தேர்தலுக்கு பிறகு விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி அறிவிப்பு
25 Feb 2026புதுடெல்லி, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது அவச
-
போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாக்., பிரதமர் ஷெரீப் இறந்திருப்பார்: அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேச்சு
25 Feb 2026நியூயார்க், போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இறந்திருப்பார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது மீண்டு
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
25 Feb 2026- ஆழ்வார் திருநகரியில் மாசி உற்சவாரம்பம்.
- கோவை கோணியம்மந் கிளி வாகனம்.
- திருச்செந்தூர் முருகன் கோ ரதம், இரவு சுவாமி வெள்ளி சப்பரம். அம்பாள் இந்திர வாகனம்.
-
இன்றைய நாள் எப்படி?
25 Feb 2026


