முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெகா கூட்டணிக்கு தயாராக லல்லு பிரசாத் அழைப்பு

திங்கட்கிழமை, 12 ஜூன் 2017      அரசியல்
Image Unavailable

பாட்னா, பிகார் தலைநகர் பாட்னாவில் எண் 10, சர்குலர் சாலையில் முன்னாள் முதல்வரும் லல்லுவின் மனைவியுமான ரப்ரி தேவியின் வீடு உள்ளது. அந்த வீட்டில் லல்லுவின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் நேற்று நடைபெற்றன.

குடும்பத்தினர் முன்னிலையில் நள்ளிரவில் 70 பவுண்ட் எடை கொண்ட பிரம்மாண்ட ராட்சத கேக்கை லல்லு வெட்டி மனைவி, பிள்ளைகள், பேரக் குழந்தைகளுக்கு ஊட்டினார். அதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் கட்சியின் மூத்த தலைவர்கள் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் நேரில் சென்று லல்லுவுக்கு வாழ்த்து கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியபோது, பிகார் அரசியல், சமுதாயத்துக்கு லல்லுவின் பங்களிப்பு அதிகம் என்று புகழாரம் சூட்டினார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் சமூக வலைதளங்கள் மூலம் லாலுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து லல்லு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டெல்லியில் மகா கூட்டணிக்கு தயாராகுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 2015-ல் நடந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின. அதேபாணியில் மத்தியில் மெகா கூட்டணி அமைக்க வேண்டியது அவசியம் என்று லல்லு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து