எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, நவ.16 - கடந்த 3 ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.80 அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதற்கு நாடுமுழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலையை குறைப்பதாக எண்ணை நிறுவனங்கள் அறிவித்தன. இந்த விலை குறைப்பு நேற்று இரவு முதலே அமுலுக்கு வந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை நிலவரத்திற்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலையை எண்ணை நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதன்படி கடந்த 3 ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.80 உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பெட்ரோல் விலை சுமார் ரூ.10 அதிகரித்துவிட்டது. கடந்த ஜனவரி மாதம் 63 ரூபாய்க்கு விற்ற ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ஒரு லிட்டர் 73 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் பெட்ரோலைப் போலவே பெட்ரோலிய பொருட்களான டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணை விலைகளும் உயர்த்தப்படலாம் என்று எண்ணை நிறுவனங்கள் தெரிவித்து வந்ததால் பொதுமக்களிடம் பெரும் அதிருப்தி ஏற்பட்டது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் மம்தா பேனர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேலும் இதுபோன்று ஒரு விலை உயர்வை அறிவித்தால் கூட்டணியில் இருந்து விலகிவிடுவோம் என்றும் அறிவித்தது. இப்படி பல்வேறு தரப்பிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை கணிசமான அளவில் குறைந்துள்ளதாலும் பெட்ரோல் விலையை குறைக்க எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்தன. மேலும் சுத்திகரிப்பு வரி உள்பட ஏனைய செலவினங்களும் குறைந்ததால் இந்த முடிவை எண்ணை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
முதலில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 1 குறைக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது லிட்டருக்கு ரூ. 2 வரை குறைக்க எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து எண்ணை நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் கடந்த 3 ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.80 உயர்த்தப்பட்டபோது கச்சா எண்ணை விலை பேரலுக்கு 121 டாலராக இருந்தது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணை விலை ரூ. 115 ஆக உள்ளது. மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சராசரியாக 49.20 ஆக உள்ளது. இது கடந்த அக்டோபர் மாதம் இருந்ததை விட குறைவாகும். இத்தகைய காரணங்களால் பெட்ரோல் விலையை குறைக்க முடிந்தது என்று தெரிவித்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு பெட்ரோல் விலை குறைய இருப்பது இதுவே முதல்முறையாகும். பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வருகிற 22 ம் தேதி துவங்கவுள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பெட்ரோல் விலை உயர்வு பிரச்சனையை எழுப்ப தயாராக இருந்தன. இந்நிலையில்தான் பெட்ரோல் விலையை எண்ணை நிறுவனங்கள் குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை (இன்று) முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிரடியாக நேற்று நள்ளிரவு முதலே இந்த விலைக் குறைப்பு அமுலுக்கு வருவதாக எண்ணை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
25 Feb 2026சென்னை, முதுபெரும் அரசியல் தலைவரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) சென்னையில் நேற்று காலமானார்.
-
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு சார்பில் விழா: ரூ. 858.92 கோடியில் நலத்திட்ட உதவிகள்: 3,12,082 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
25 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.2.2026) கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில், 632 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ச
-
தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள்: மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை
25 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை நடத்துகிறார்.
-
தமிழக காவல் துறைக்கு ரூ.124 கோடியில் புதிய மென்பொருள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
25 Feb 2026சென்னை, தமிழக போலீஸ் துறைக்கு ரூ.124.37 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மென்பொருளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
-
குமரியில் ரூ. 30 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
25 Feb 2026கன்னியாகுமரியில் மினி டைடல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
25 Feb 2026கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
மக்களின் உரிமைகளுக்காக பேராடியவர்: நல்லகண்ணுவுக்கு விஜய் புகழஞ்சலி
25 Feb 2026சென்னை, மக்களின் உரிமைகளுக்காக பேராடியவர் நல்லகண்ணு என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
என்னுடைய சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன்: தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இருப்பேன்: நாகர்கோவில் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
25 Feb 2026நாகர்கோவில், என்னுடைய சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இ
-
அதானி நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்கும் தமிழக அரசு
25 Feb 2026சென்னை, அதானி நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு மின்சாரம் வாங்கியது.
-
தனக்கென வாழாமல் பிறர்காகவே வாழ்ந்தவர்: நல்லகண்ணுவுக்கு இ.பி.எஸ். இரங்கல்
25 Feb 2026சென்னை, சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு மறைவுக்கு அ.தி.மு.க.
-
யாருடன் கூட்டணி என்பது குறித்து ராமதாஸ் இன்று முக்கிய முடிவு
25 Feb 2026திண்டிவனம், பா.ம.க. கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் இன்று முடிவு செய்கிறார்.
-
இலவச வாக்குறுதிகளை தடைசெய்ய கோரி வழக்கு: தேர்தலுக்கு பிறகு விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி அறிவிப்பு
25 Feb 2026புதுடெல்லி, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது அவச
-
ராமதாஸ் தொடர்ந்த வழக்கு: அன்புமணி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
25 Feb 2026சென்னை, ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் அன்புமணி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாக்., பிரதமர் ஷெரீப் இறந்திருப்பார்: அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேச்சு
25 Feb 2026நியூயார்க், போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இறந்திருப்பார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது மீண்டு
-
இன்றைய நாள் எப்படி?
25 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
25 Feb 2026- ஆழ்வார் திருநகரியில் மாசி உற்சவாரம்பம்.
- கோவை கோணியம்மந் கிளி வாகனம்.
- திருச்செந்தூர் முருகன் கோ ரதம், இரவு சுவாமி வெள்ளி சப்பரம். அம்பாள் இந்திர வாகனம்.


