எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, - மதுரை சமூக அறிவியல் கல்லூரியின் பொன்விழா ஆண்டு துவக்கவிழா நேற்று நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார்.
மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள மதுரை சமூக அறிவியல் கல்லூரி ஒரு தன்னாட்சி கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையமாகும். இந்த கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவருகிறது. இந்திய தேசிய தரக்கட்டுபாடு நிறுவனத்தால் (நாக் கமிட்டி) முதல்தரம் ஏ கிரேடு பெற்ற கல்லூரியாகும். இந்த கல்லூரி 1969 ம் ஆண்டு காந்திஜெயந்தி தினமான அக்டோபர் 2 ம் தேதி டாக்டர் கேப்டன் டி.வி.பி.ராஜா என்பவரால் தொடங்கப்பட்டது. உலக அமைதி முன்னேற்றத்தை உறுதிபடுத்தவும், மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த கல்லூரி தொடங்கப்பட்டது.
சமூகத்தின் கீழ்நிலையில் உள்ள மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக இந்த சமூக அறிவியல் கல்லூரி உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ம் தேதி முன்னாள் மாணவர்கள் இந்த கல்லூரியில் ஒன்றுகூடி தற்போது படித்துகொண்டிருக்கும் மாணவர்களுடன் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இந்தாண்டு மதுரை சமூக அறிவியல் கல்லூரியின் பொன்விழா ஆண்டு துவக்கவிழா, கல்லூரி நிறுவனர் நாள் விழா, முன்னாள் மாணவர்கள் சங்க ஆண்டுவிழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நேற்று காந்திஜெயந்தி அன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எம்.லெட்சுமணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டி.ஜேனட்வசந்த குமாரி வரவேற்று பேசினார். கல்லூரியின் நிறுவனர் கேப்டன் டி.வி.பி.ராஜா கல்லூரியன் பொன்விழாவினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது கல்லூரியின் 50 ஆண்டு கால வளர்ச்சியையும், அதற்காக தான் எதிர்கொண்ட சிரமங்களையும் அவர் எடுத்துகூறினார்.
இந்த முப்பெரும் விழாவில் மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் படித்து முதுகலை பட்டம் (எம்.எஸ்.டபிள்யூ) பெற்ற கல்லூரியின் முன்னாள் மாணவரும், தமிழக வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தன்னோடு படித்த முன்னாள் மாணவர்களையும், தற்போது படித்து கொண்டிருக்கும் மாணவர்களையும் சந்தித்து தனது மலரும் நினைவுகளை கல்லூரியில் படித்த நாட்களில் நடந்த சம்பவங்களை எடுத்துக்கூறி அவர்களோடு பகிர்ந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கே.மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ.கே.தமிழரசன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் சமூக அறிவியல் கல்லூரியில் படித்து பல்வேறு உயர்ந்த நிலைகளில் பணியாற்றி வரும் மாணவர்களும், முன்னாள், இன்னாள் மாணவர்களும், கல்லூரி நிறுவனர் கேப்டன் டி.வி.பி.ராஜாவிற்கு 81 வது பிறந்த நாளை முன்னிட்டு சால்வை அணிவித்து அவரிடம் ஆசிபெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் எஸ்.முருகேசன் தலைமையில் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். விழா முடிவில் கல்லூரியின் செயலாளர் டி.வி.தர்மசிங் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்த டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ் எத்தனை இடம்
23 Dec 2025சென்னை, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்த டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்ட இடம் வருமாறு.
-
எட்டு மாவட்டங்களுக்கு புதிய த.வெ.க. நிர்வாகிகளை நியமனம் செய்தார் விஜய்
23 Dec 2025சென்னை, த.வெ.க.வில் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் விஜய் தெரிவித்தார்.
-
நன்னிலம், மயிலாடுதுறை உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
23 Dec 2025சென்னை, நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன்’ சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
-
சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரண் தி.மு.க. அரசு: கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Dec 2025சென்னை, சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க.
-
இலங்கை கடற்பைடையால் கைதாகும் தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
23 Dec 2025சென்னை, இலங்கைக் காவலில் உள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீண்டகால பிரச்சினைக்கு ஒரு நிரந்த
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள்
23 Dec 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 75 ஆயிரம் வாக்கு சாவடிகளில் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் வருகிற டிச.
-
6500 கி. எடையுள்ள ’புளு பேர்ட்-6' செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட்
23 Dec 2025பெங்களூரு, 6500 கி. எடையுள்ள அமெரிக்காவின் ’புளுபேர்ட்-6′ செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட்.
-
வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
23 Dec 2025சென்னை, சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தமிழக தேர்தல் பா.ஜ.க.
-
விஜய் ஹசாரே தொடரில் விளையாடும் கோலி ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு
23 Dec 2025பெங்களூரு, விஜய் ஹசாரே தொடரில் விளையாடும் கோலி ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
-
ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
23 Dec 2025மெல்போர்ன், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு:பியூஷ் கோயலிடம் பட்டியலை கொடுத்த எடப்பாடி பழனிசாமி: பொங்கல் முடிந்ததும் அறிவிப்பு வெளியாகிறது
23 Dec 2025சென்னை, தொகுதி பங்கீடு குறித்து பியூஷ் கோயலிடம் பட்டியல் கொடுத்த எடப்பாடி பழனிசாமி பொங்கல் முடிந்ததும் தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும்.
-
பிரதமருடன் நீரஜ் சோப்ரா சந்திப்பு
23 Dec 2025புதுடெல்லி, டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை, தடகள வீரர் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது மனைவி ஹிமானி மோர் ஆகியோர் நேரில் சந்தித்து உரையாடினார்.
-
முதல் முறையாக ஐ.சி.சி. தரவரிசையில் தீப்தி சர்மா முதலிடம்
23 Dec 2025துபாய், ஐ.சி.சி.யின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.
-
சட்டசபைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து இ.பி.எஸ். - பியூஷ் கோயல் ஆலோசனை
23 Dec 2025சென்னை, தமிழக சட்டசபைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - தமிழக பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-12-2025.
24 Dec 2025 -
நாகையில் அதிர்ச்சி சம்பவம்: மதுபோதையில் மனைவி கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர்..!
24 Dec 2025நாகை, நாகையில் மதுபோதையில் மனைவியின் கையை வெட்டி குளத்தில் வீசிய கணவரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றி: விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
24 Dec 2025புதுடெல்லி, எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றியை அடுத்து விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் : ரயில்கள் விவரம் வெளியீடு
24 Dec 2025சென்னை, வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கதத்தில் நின்று செல்லும் ரயில்களின் விவரங்ளை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு: இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டம்
24 Dec 2025சென்னை, ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு - இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டமிட்டுள்ளது.
-
100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம்: தமிழ்நாட்டில் தி.மு.க.-கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
24 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் தொடர்பாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..! வெள்ளி விலை புதிய உச்சம்
24 Dec 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா: அரசியல் பேச்சுக்கு தடை விதித்த மலேசியா போலீஸ்
24 Dec 2025கோலாலம்பூர், ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியாக பேசுவதற்கு மலேசியா போலீஸ் தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு
24 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மீட்டெடுக்க தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர் என
-
சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க நாம் உறுதியேற்போம்: பெரியாரின் நினைவு நாளில் இ.பி.எஸ். பதிவு
24 Dec 2025சென்னை, தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி தந்தை பெரியார் என்று எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.


