எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, நவ.- 29 - இந்திய அரசியல் முறையில் ஊழல் மலிந்துகிடக்கிறது. இந்த ஊழலை அகற்ற இப்போதுள்ள இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகனுமான ராகுல்காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், நாட்டின் இப்போதைய அரசியல் முறையில் ஊழல் மலிந்துகிடக்கிறது என்றும் இந்த அரசியல் முறையை மாற்றி அமைக்க அதிகமான இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நாட்டிலுள்ள மக்கள் எல்லோரும் இப்போது ஊழலைப் பற்றியே பேசுகிறார்கள். ஆனால் அந்த ஊழல் இப்போதைய அரசியல் முறையில்தான் அதிகமாக மண்டிக்கிடக்கிறது. இந்த ஊழலை ஒழிக்கவும், அரசியல் முறையை மாற்றி அமைக்கவும், அதிகமான இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நாட்டிலுள்ள ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு இளைஞர் காங்கிரசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் நன்மைக்காக பாடுபட வேண்டும் என்று ராகுல்காந்தி கேட்டுக்கொண்டார். ஏழைகளிடமும் நலிவடைந்த மக்களிடமும் இதர பின்தங்கிய மக்களிடமும் இளைஞர் காங்கிரசார் சென்று அவர்களின் கரங்களை பிடித்து அவர்களின் பிரச்சனைகளை என்னவென்று கேட்டறியுங்கள். பிறகு அவர்களின் பிரச்சனைகளுக்காக போராடுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஏழைகள் நல்ல வாழ்க்கைத்தரத்தை பெற்றால் மட்டுமே இந்த நாடு முன்னேற்றமடையும் என்றும் அவர் கூறினார்.
நம்மிடம் இளைஞர் காங்கிரஸ் பிரிவில் சுமார் ஒரு கோடி இளைஞர்கள் இருக்கிறார்கள். நாட்டிலேயே அதிகமான இளைஞர்களை கொண்ட அமைப்பு இளைஞர் காங்கிரஸ்தான். கடந்த 3 ஆண்டுகளில் இந்த சாதனையை இளைஞர் காங்கிரஸ் நிகழ்த்தியிருக்கிறது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் பிரதிநிதிகள்தான் இப்போது இங்கே இந்த மாநாட்டில் கூடியிருக்கிறார்கள். இந்த இளைஞர் காங்கிரஸ் பதவிகளுக்கு யாரும் தன்னிச்சையாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். இந்த இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 8 ஆயிரம் இளைஞர் காங்கிரஸ் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ராகுல்காந்தி தற்போது இளைஞர் காங்கிரஸ் விவகாரங்களை பொறுப்பேற்று கவனித்து வருகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
41 பேரை காப்பாற்ற முடியாதவர் 7 கோடி மக்களை எப்படி காப்பாற்றுவார்? விஜய்க்கு அமைச்சர் பெரியசாமி கேள்வி
03 Feb 2026திண்டுக்கல், திண்டுக்கல்லில் பேரறிஞர் அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
-
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் அமெரிக்காவின் கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சியடையும்: விவசாயத்துறை செயலர்
03 Feb 2026நியூயார்க். புதிய ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய சந்தைக்கு அதிகப்படியான அமெரிக்க விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யும்.
-
தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள்: மத்திய அரசை கண்டித்து பிப்ரவரி 12-ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்: 12 முக்கிய தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
03 Feb 2026சென்னை, தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
-
தி.மு.க.வை விஜய் விமர்சிப்பது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்
03 Feb 2026திருச்சி, த.வெ.க. தொண்டர்களை உற்சாகப்படுத்தவே தி.மு.க.வை விமர்சனம் செய்து விஜய் பேசியுள்ளார் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
-
கனடாவில் துப்பாக்கிச்சூடு: இந்தியர்கள் 3 பேர் கைது
03 Feb 2026ஓஸ்லோ, கனடா நாட்டில், தனி நபர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று இந்தியர்களை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
திருப்பூரில் விபத்து: 2 பேர் பலி
03 Feb 2026திருப்பூர், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: ஈரான் அதிபர் பெசாஸ்கியன்
03 Feb 2026தெக்ரான், அமெரிக்கா உடன் நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஈரான் அதிபர் பெசாஸ்கியன் வலியுறுத்தியுள்ளார்.
-
விஜய்யைப் பார்த்து எங்களுக்கு பயமில்லை: நிர்மலா சீதாராமன்
03 Feb 2026புதுடெல்லி, விஜய்யைப் பார்த்து தி.மு.க.தான் பயப்பட வேண்டும் என்றும் எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
இந்திய நாட்டின் சட்டங்களை பின்பற்றப்படாவிட்டால் உடனே நாட்டை விட்டு வெளியேறலாம்: மெட்டா நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
03 Feb 2026புதுடெல்லி, தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்திய நாட்டின் சட்டத்திற்கு இணங்க வேண்டும் என்றும் நாட்டின் சட்டங்கள் பின்பற்றப்படாவிட்டால் நீங்கள் வெளியேறலாம் என்றும் மெட்டா நிறு
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.


