முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது

செவ்வாய்க்கிழமை, 19 டிசம்பர் 2017      திருநெல்வேலி

குற்றாலம் திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

திருவாதிரை திருவிழா

நெல்லை மாவட்டம் குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோவிலில் திருவாதிரை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும், இந்த ஆண்டு திருவாதிரை திருவிழா வரும் 24 ம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு அபிN~க, அலங்கார தீபாராதனை, இரவில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடராஜபெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. 27 ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 28 ம் தேதி காலை 9 மணிக்கு நடராஜர் மற்றும் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெறுகிறது. 31 ம் தேதி காலை 10 மணிக்கு சித்ரசபையில் நடராஜமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டதீபாராதனையும், ஜன.2ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சித்ரசபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், மாலை 5 மணிக்கு திருக்கோவில் திரிகூடமண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோவில் இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சாத்தையா, கோவில் செயல் அலுவலர் செல்வகுமாரி மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து