முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக தேர்தலுக்காக ராகுலின் பிரச்சார பேருந்து பெங்களூரு வந்தது

செவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 2018      அரசியல்
Image Unavailable

பெங்களூர், கர்நாடகத்தில் வரும் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்துக்காக, குஜராத் சட்டப் பேரவை தேர்தலின் போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி பயன்படுத்திய பேருந்து பெங்களூருக்கு வருகை தந்துள்ளது.

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ராகுல் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியா விட்டாலும், கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்குகளைப் பெற்று கூடுதல் தொகுதிகளில் வென்றது. இது அவரது செல்வாக்கை உயர்த்தியது. இந்த நிலையில், பிரச்சாரத்தில் ராகுல்காந்தி பயன்படுத்திய சொகுசு பேருந்து, கர்நாடகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்துவதற்காக பெங்களூருக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

டெல்லி  மாநில பதிவெண் கொண்ட இந்தப் பேருந்தில் 4 இருக்கைகள், கூட்ட அறை, ஓய்வறை, கழிவறை உள்ளிட்ட வசதிகள்உள்ளன. குஜராத்தில் இருந்து பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டுள்ள பிரச்சாரப் பேருந்து, அரண்மனை மைதானத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்தின் பாதுகாப்பு பொறுப்பு கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் கிருஷ்ணம் ராஜூவிடம் அளிக்கப்பட்டுள்ளது. பேருந்து பாதுகாப்புக்கு 4 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பேருந்தை அழகுப்படுத்தி மெருகேற்றும் பொறுப்பு பெங்களூரு வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜிடம் தரப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிப்ரவரி 11-ம் தேதியில் இருந்து ஈடுபட ராகுல்காந்தி திட்டமிட்டிருக்கிறார். இதற்காக பிரசாரத் திட்டம் தயாராகி வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து