முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோமாளிபட்டி கிராமத்தில் 10க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கால் பாதிப்பு: கலெக்டர் ஆய்வு

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      சிவகங்கை
Image Unavailable

    சிவகங்கை,- சிவகங்கை வட்டம் இடையமேலூர் ஊராட்சிக்குட்பட்ட கோமாளிபட்டி கிராமத்தில்  10-க்கும் மேற்பட்டவர்கள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், நேரில் சென்று பாதிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்த மக்களை பார்வையிட்டு உரிய சிகிச்சை வழங்க அறிவுறுத்தியதுடன் மேலும் பொது சுகாதாரத்துறை அலுவலர் மூலம் இந்தப் பகுதியில் மருத்துவக் குழு நியமித்து குடிதண்ணீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஒவ்வொரு வீடுகளிலும் குடிநீர் கையாளும் முறையினை பார்வையிட்டு சுகாதாரமான முறையில் குடிதண்ணீரை பயன்படுத்த அறிவுறுத்துவதுடன் அலுவலர்கள் குளோரினேசன் செய்யப்பட்டு குடிதண்ணீர் வழங்குவதை அவ்வப்போது உறுதி செய்ய கொள்ள வேண்டும். அதேபோல் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்குள்ளவர்களை கண்டறியப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்குவதுடன் தேவைப்பட்டால் முழு பரிசோதனை செய்வதற்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் தொடர்ந்து இப்பகுதியில் முழுமையாக கண்காணிப்பதுடன் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் ஊராட்சிப் பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதுடன் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மழைக்காலம் துவங்கியதால் குடிதண்ணீரை காய்ச்சி பயன்படுத்த வேண்டும். காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு வந்தால் மருத்துவரின் ஆலோசனைகளை உடனடியாகப் பெறவேண்டும். காலதாமதம் இருக்கக்கூடாது. அதேபோல் மருத்துவர்களின் ஆலோசனைகள் இல்லாமல் மருந்து மாத்திரைகள் வெளியில் வாங்கி சாப்பிடக்கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், அறிவுரை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து