முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆபாசம் வன்முறை

மதுப்பழக்கத்தைத் தூண்டும் காரணங்களில் ‘சமூக வலைதளங்களில் பரவும் ஆபாசம் மற்றும் வன்முறை சார்ந்த வீடியோக்கள் இளம்பருவத்தினரிடம் மதுப்பழக்கத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது’ என்று இங்கிலாந்தின் உளவியல் நிபுணரான ஜோன் க்ரான்வெல் கண்டறிந்துள்ளார்.

தானியங்கி பைக்

மின்சாரத்தில் இயங்கக்கூடிய சைக்ளோட்ரான் என்ற தானியங்கி பைக்கில், ஒரே சமயத்தில் இரண்டு பயணிகள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சைக்ளோட்ரான் தானியங்கி பைக்கில் இரு பயணிகளும் நேருக்கு நேர் அமர்ந்து கொண்டு செல்லலாம். எல்லா காலங்களிலும், அதாவது, குளிர்காலம், வெயில்காலம், மழைகாலத்திலும் இந்த வாகனத்தை இயக்கலாம்.

நட்சத்திரம் புதிது

நாசாவின் பெர்மி காமா கதிர் ஸ்பேஸ் டெலஸ்கோப் நடத்திய ஆய்வில் நட்சத்திரம் ஒன்று காமா கதிர்களை வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த காமா கதிர்களுக்கு LMC P3 எனப் பெயரிட்டுள்ளனர். கதிர்களை வெளியிடும் நட்சத்திரம் பூமியிலிருந்து 163000 ஒளியாண்டு தூரத்தில் காணப்படுவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

வந்திருச்சு புதுசு

எவர்லாஸ்ட் நோட்புக் மூலம் எழுதுவதை டிஜிட்டலாக சேமிக்க வசதி வந்தாச்சு. இந்த நோட்புக்கில், எழுதலாம், பதிவு செய்து வைக்கலாம். கூடுதலாக, ஸ்மார்ட் போன் உள்ளிட்டவற்றிலும் பகிரலாம். க்ளவுட் முறையில் கூகுள் ட்ரைவ் உள்ளிட்டவற்றில் கோப்புகளை சேமிக்கவும் வசதியுண்டு.

சாகோன் நாகரீகம்

1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சாகோன்கள் இன்றைய நியூ மெக்சிகோ பகுதிகளில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சாகோன்கள் 100க்கும் அதிகமான அறைகள் கொண்ட லாவிஷ் கற்களால் ஆன வீடுகளில் வசித்து வந்துள்ளனர். மேலும், இங்கு பெண்களே ஆட்சி செய்ததாகவும், அவர்கள் தங்களது சக்திகளை தங்களின் மகள்களுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

பிரிட்டன் அரச குடும்பத்துக்கு வின்சர் என்ற பெயர் எப்படி வந்தது?

இங்கிலாந்தில் உள்ள வின்சர் கோட்டைக்கு ஹவுஸ் ஆப் வின்சன் என பெயரிடப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதன் பின்னணி என்ன தெரியுமா.. 1917 இல் தான் ஹவுஸ் ஆப் வின்சர் உருவானது. அதன் சாக்ஸ்-கோபர்க்-கோதெ என்ற ஜெர்மானிய சாயல் கொண்ட அந்த வரலாற்றுப் பெயருக்கு மாற்றாக, ஐந்தாம் ஜார்ஜ் அரசரின் ஆணையின் மூலம் அந்த பெயர் மாற்றப்பட்டு, ஹவுஸ் ஆப் வின்சர் என்பது இங்கிலாந்து அரச குடும்பத்தின் அதிகாரப் பூர்வ பெயராக இடம் பெற்றது. அது தற்போதைய அரச குடும்பத்தின் பெயராகவே மாறிவிட்டது. தற்போதை ராணி ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான அரச குடும்பங்களுடன் குடும்ப உறவுகளை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago