முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபாமா தம்பதியை கேலி செய்து வீடியோ வெளியிட்ட ட்ரம்ப்..!

சனிக்கிழமை, 7 பெப்ரவரி 2026      உலகம்
Trump 2023-04-13

வாஷிங்டன், ஒபாமா தம்பதியை கேலி செய்து வீடியோ வெளியிட்ட நிலையில் அதிபர் ட்ரம்ப், இவ்விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் 2020-ம் ஆண்டு தேர்தலில் தனது வெற்றியை திருடுவதற்கு நிறுவனம் ஒன்று உதவியது என்று தெரிவித்தார். மேலும் அந்த வீடியோவில் முன்னாள் அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஆகியோரின் முகத்தை குரங்குகளின் உடலில் பொருத்தி பாடுவது போன்ற காட்சி இருந்தது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து அந்த வீடியோ நீக்கப்பட்டது.

இந்த நிலையில் இவ்விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ட்ரம்ப் தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, வாக்குப்பதிவு இயந்திர மோசடி குற்றச்சாட்டுகள் பற்றி நான் பேசிய தொடக்கப் பகுதியை மட்டுமே பார்த்தேன். அதை நான் பகிர்ந்தேன். அது சரிபார்க்கப்பட்டிருக்கும் என்று கருதினேன். ஆட்சேபனைக்குரிய பகுதி பற்றி எனக்கு தெரியாது. நான் எந்த தவறும் செய்யவில்லை. இதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து