முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சிறிய சாதனம்

‘ராஸ்பெர்ரி பை’ என்பது மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மிகச்சிறிய கணினி ஆகும். இதை அடிப்படையாகக் கொண்டு, நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியக்கூடிய ‘ராஸ்பெர்ரி ஷேக் 4டி’  என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளனர். நிலநடுக்கத்தின்போது உருவாகும் கண்ணுக்குத் தெரியாத அசைவுகளைப் பார்ப்பதற்கும் இது உதவுகிறது. இதனால் நிலநடுக்கம் ஏற்படுவதை முன்பே நாம் கணிக்க முடியுமாம்.

நீண்ட சேவை

சீனா, தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு நேரடி சரக்கு ரயிலை அறிமுகம் செய்துள்ளது. சீனாவின் ஸெஜியாங் மாகாணத்தில் உள்ள யுவூ நகரிலிருந்து லண்டன் மாநகருக்கு இந்த சரக்கு ரயில் சேவை துவங்கப்பட்டு இருக்கிறது.இதன்மூலம், கஜகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய பல தேசங்களை கடந்து லண்டன் மாநகரை அந்த ரயில் அடையும். யுவூ மற்றும் லண்டன் நகரங்களுக்கு இடையிலான கிட்டத்தட்ட 12,000 கிமீ தூரத்தை 18 நாட்களில் கடக்க இருக்கிறது இந்த சரக்கு ரயில்.

VoIP

நமது ஸ்மார்ட் போன்களில் உள்ள சிம் கார்டில் நெட்வொர்க் கவரேஜ் முற்றிலும் இல்லாத நேரங்களிலும், குறைவாக உள்ள நேரங்களிலும்  WiFi காலிங் அம்சத்தை பயன்படுத்தி சிரமமின்றி பேசலாம்.  எப்படி தெரியுமா... நாம் பயன்படுத்துகின்ற சிம் கார்டின் மூலமாகவே குரல் வழி (Voice Call) அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதற்கு தேவை WiFi இணைப்பு மட்டுமே.  ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடாபோன் ஐடியா என இந்தியாவின் மூன்று டெலிகாம் நிறுவனங்கள் இந்த WiFi காலிங் அம்சத்தை பயன்படுத்த அனுமதிக்கிறது.  VoLTE-க்கு மாற்றாக VoIP (voice over Internet protocol) மூலம் இந்த WiFi காலிங் வசதியை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் இயங்கு தளம் கொண்ட போன்களில் இந்த வசதியை பயன்படுத்தலாம். சந்தையில் பெரும்பாலான புதிய ஸ்மார்ட் போன்களில் இந்த வசதி உள்ளது. பழைய போனை பயன்படுத்துபவர்கள் செட்டிங்ஸ் சென்று இந்த சேவையை Enable செய்து கொள்ளலாம். 

உலகம் முழுவதும் எத்தனை புத்தகங்கள் உள்ளன தெரியுமா?

கூகுள் அளிக்கும் தகவல்படி 2010 ஆம் ஆண்டு வரை  வெளியிடப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை 129,864,880 மில்லியன் புத்தகங்கள் என கூறப்படுகிறது. இது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் அதிக எண்ணிக்கையிலானதாகும். எனவே இனி யாரும் எனக்கு படிக்க ஒரு நல்ல புத்தகம் கூடி கிடைக்கவில்லை என்று சொல்ல முடியாதல்லவா.

வரிக்குதிரையை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

உடலில் கருப்பு வெள்ளை கோடுகளை கொண்டுள்ளதால் இதை வரிக்குதிரை என்கிறார்கள். இவை சுமார் 30 ஆண்டுகள் உயிர் வாழும் பாலூட்டிகள். மனிதர்களுக்கு கை ரேகை போல இவற்றுக்கு வரிக்கோடுகள் ஒவ்வொரு குதிரைக்கும் மாறுபட்டே காணப்படும். இவை நின்றபடியே உறங்கக் கூடியவை. ஒரு வரிக்குதிரையின் கழுத்தின் மீது, மற்றொன்று தன்னுடைய கழுத்தை சாய்த்தபடி நின்று தூங்கும். சுமார் 2 மீ உயரம், 3 மீட்டர் நீளம், 250 முதல் 500 கிலோ எடையுடையதாக இவை காணப்படும். மணிக்கு 55 கிமீ வேகத்தில் ஓடும். நாள் ஒன்றுக்கு சுமார் 80 கிமீ வரை நடக்கும். இவை கூட்டமாகத்தான் வாழும். இவற்றை தனியே பார்க்க இயலாது. இதன் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம் என்னவென்றால் வரிக்குதிரையை பழக்க முடியாது என்பதுதான். அதற்கான பல முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக விலங்கியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். இது மிகவும் ஆச்சரியமானது தானே...

அழிவின் விளிம்பில் இந்திய ஓநாய்கள்

அழிந்து வரும் உயிரினங்களில் பட்டியலில் தற்போது இந்திய ஓநாய்களும் இடம் பெற்றுள்ளன. முன்பு நம்பப்பட்டு வந்ததை காட்டிலும் சற்று விரைவாகவே அவற்றின் எண்ணிக்கை சரிவடைந்து வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பரிணாம வரலாற்றில் மிகவும் முந்தையதாக இந்திய ஓநாய்கள் கணிக்கப்பட்டுள்ளன. இந்திய ஓநாய்கள் எனப்படுபவை இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற பிராந்தியங்களில் காணக் கூடியவை. தற்போது பாகிஸ்தானில் அவை குறித்த கணக்கெடுப்புகள் எதுவும் இல்லை. தற்போது இந்தியாவில் அவற்றின் எண்ணிக்கை 2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய இந்திய புலிகளின் நிலையைப் போலவே ஓநாய்களின் நிலைமையும் உள்ளது. அமெரிக்காவில் இதே போன்று அழியும் நிலையில் இருந்த சிவப்பு ஓநாய்கள் தற்போது ஓரளவுக்கு மீட்கப்பட்டதை போல, இந்தியா மற்றும் பாகிஸ்தானை வாழ்விடங்களாக கொண்ட இந்திய ஓநாய்களை காக்க வேண்டும் என்பதே ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago