முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மனிதர்களை போல...

குரங்களால் மனிதர்களைப் போல பேசவும், சிரிக்கவும் முடியாது. ஆனால், மக்காகிவ் வகைக் குரங்குகளுக்கு மனிதர்களைப் போலவே குரல் வளை உள்ளிட்ட குரல் எழுப்பும் உறுப்புகள் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ஒலி சைகைகளை குரலாக மாற்றும் அளவுக்கு இவைகளுக்கு மூளை வளர்ச்சியடையவில்லையாம்.

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் சில சிறப்பு அம்சங்கள்

தஞ்சை மாவட்டத்திலுள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கி.பி 1167இல் கட்டப்பட்டது. கோயிலில் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் நடனக்காட்சிகள், போர்க்காட்சிகள், மதநிகழ்வுகள், ரிஷிகள், விலங்குகள், கற்பனை உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.இக்கோயிலின் சிறப்பானது சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தில் சிறப்பிக்கப்படும் அறுபத்துமூன்று நாயன்மார்களைச் சிற்பங்களாகச் செதுக்கி வைத்துள்ளதே ஆகும். அநபாயச்சோழன் என்று அழைக்கப்படும் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் சேக்கிழாரைக் கொண்டு அறுபத்துமூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் பெரியபுராணத்தை இயற்றினார். அவரது மைந்தனான இரண்டாம் இராஜராஜ சோழன் அவர்களைச் சிற்பங்களாக இக்கோயிலில் செதுக்கிவைத்துள்ளார். தமிழகச் சைவக் கோயில்களில் தாராசுரத்தில் மட்டுமே அறுபத்துமூன்று நாயன்மார்களின் சிற்பங்கள் முழுத்தொகுப்பாக காணப்படுகின்றன. தாராசுரம் தமிழனின் கலை, கலாச்சாரம், பண்பாட்டினைப் பறைசாற்றும் எத்தனயோ சின்னங்களில் இதுவும் ஒன்று. 

இதய பிரச்சனை தீர

‘ம்ருத்யூ’ என்றால் மரணம். ‘சஞ்சீவி’ என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, ‘மரணமில்லாதப் பெருவாழ்வு’ என்பது இந்த முத்திரையின் பெயர். உயிர் காக்க உதவும் இந்த முத்திரை. மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற சந்தேகம் தோன்றிய உடனேயே, இம்முத்திரையைச் செய்யத் தொடங்கினால், வலி, படபடப்பு, நெஞ்சு எரிச்சல் குறையும்.

'சோடா' எச்சரிக்கை

சோடாவை தினமும் குடிப்பதால் 50% இதய நோய்கள் உருவாகும். தொடர்ந்து ஒருவருடம் குடித்தால் உடல் பருமன் இரட்டிப்பாகும் . சோடாவிலுள்ள மூலப்பொருட்களால் நரம்பு மண்டலம் விரைவில் பலமிழந்து போய்விடும். இதனால் நரம்புத் தளர்ச்சி உருவாகும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக முதுமையில் அல்சீமர் நோய் வரும் ஜாக்கிரதை.

புதிய அவதாரம்

கலை,விஞ்ஞானம்,அறிவியல், என இருந்துவரும் ரோபோக்களின் சேவை தற்போது விவசாயத்திலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் விதை விதைத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுதல், களையெடுத்தல், அறுவடை செய்தல் என அனைத்து விவசாய பணிகளையும் ரோபோவே செய்துள்ளது. இதற்கான சாதனையை இங்கிலாந்தின் ஹார்பர் ஆடம்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி ஜோனாதன்கில் தலைமையிலான குழுவினர் படைத்துள்ளனர். இந்த ரோபோக்கள் பார்லியை விதைத்து சமீபத்தில் அறுவடை செய்தது. இவை பீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ரோபோக்கள் மூலம் அதிகளவில் உணவு உற்பத்தியை பெருக்க முடியும். இதன்மூலம் உணவு பஞ்சம் இல்லாத உலகை உருவாக்க முடியுமாம்.

176 ஏக்கரில் அலுவலகம்

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் கனவு திட்டமான ஸ்பேஸ்ஷிப் கேம்பஸ் 2, கலிஃபோர்னியாவில் சுமார் 2.8 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமையவுள்ளது. இதன் ஒட்டு மொத்த கட்டுமான செலவு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இங்கு 176 ஏக்கர் பரப்பளவில் கண்ணாடிகளால் ஆன பெரிய சுவர்கள் கட்டமைக்கப் பட்டுள்ளன. பெரிய அலுவலகங்களில் ஒன்றாகவும் கருதப்படும் இந்த வளாகத்தில் 14,200 ஊழியர்கள் பணிபுரிய முடியும். இதன் தூரம் மட்டும் ஒரு மைலுக்கும் அதிகமாம். இந்த வளாகத்தின் முதன்மை கட்டிடத்தின் உள்கட்டமைப்புகளுக்கு மட்டும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. 300,000 சதுர அடியில் இரு பெரிய கட்டிடங்கள் இந்த வளாகத்தினுள் ஆய்வு மற்றும் தயாரிப்பு பணிகளுக்காக கட்டமைக்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்