முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ரோபோ தொழில்நுட்பம்

நோயாளியின் தொண்டை பகுதியில் நுழைந்து அறுவை சிகிச்சை செய்யும் ரோபா நவீன கருவியை உருவாக்கியுள்ளனர். வளையத்தக்க தன்மை கொண்ட இந்த கருவி, குறைந்த அளவில் துளையிட்டு அறுவை சிகிச்சை செய்யவும் மற்றும் நுழையக்கூடிய முடியாத மிகவும் கடினமான மனிதனின் தொண்டை பகுதியில் நுழையும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கேமரா, ஒரு ஜாய்ஸ்டிக் பொருத்தப்பட்டுள்ளது.

உடலுக்கு நன்மை

வசம்புவை விளக்கெண்ணெயில் துவைத்து, விளக்கில் கரித்து, பொடியாக்கி பாலில் இழைத்து குழந்தையின் நாவில் தடவினால், வயிற்று வலி சரியாகும். ஞாபக சக்தி கூடும். வலியை போக்கும். பதட்டத்தை தணிக்க கூடியது. நரம்புகளுக்கு பலத்தை கொடுக்கும் வசம்பு, இதய ஓட்டத்தை சீர் செய்யும். சிறுநீரக கோளாறை போக்கும். ரத்தத்தை சுத்தப்படும்.

ஒரு கிலோ டீத்தூள் ரூ.99999 கேட்டால் அசந்து போவீங்க

இந்தியாவில் அதுவும் அசாம் மாநிலத்தில் விளைவிக்கப்படும் டீத்தூள்தான் தற்போது சுமார் ரூ.1 லட்சத்துக்கு அதாவது ரூ.99999 க்கு விற்பனையாகியுள்ளது. அசாம் மாநிலத்தில் திப்ருகார் மாவட்டத்தில் அமைந்துள்ள மனோகரி டீ எஸ்டேட்டில் விளையும் மனோகரி கோல்ட் டீத்தூள்தான் தற்போது ஏலத்தில் கிலோவுக்கு ரூ.99999 க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. அதற்கு முன்னதாக அதிக பட்ச விலையாக கோல்டன் பட்டர்ஃபிளை டீத்தூள்தான் ரூ.75 ஆயிரத்துகு விற்று சாதனை படைத்தது. தற்போது அதை மனோகரி டீத்தூள் முறியடித்துள்ளது.

ஆக்கிரமிக்கும் செயலிகள்

இன்றைய டெக் உலகில் ஒரு நாளின் அன்றாட வேலைகள் பெரும்பாலவற்றை செல்போன் செயலிகள் மூலமே முடித்து விடமுடியும். செயலிகளால் வேலைகள் எளிதாக முடிந்தாலும், ஸ்மார்ட்போன்களின் வேகத்தைக் குறைப்பதில் இவை முக்கியமான பங்காற்றுகின்றன. ரேம் மெமரி மட்டுமல்லாது, இன்பில்ட் மெமரியிலும் கணிசமான இடைத்தை செயலிகள் ஆக்கிரமித்துக் கொள்வதுண்டு. ஃபேஸ்புக், உபர், ஜிமெயில் மற்றும் ஸ்நாப் சாட் போன்ற செயலிகளே மெமரியை அதிகம் பயன்படுத்திக் கொள்வதாக சமீபத்திய ஒரு ஆய்வு கூறுகிறது. ஃபேஸ்புக் செயலியை கடந்த மே 2013ல் ஐபோனில் 32 எம்.பி. இடத்தைப் பிடித்த ஃபேஸ்புக் செயலி, தற்போது 388 எம்.பி. இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அதாவது 12 மடங்கு அதிகமான இடத்தினை ஃபேஸ்புக் செயலி எடுத்துக் கொள்கிறது. அதேபோல 2013ல் 4 எம்பி சைஸில் இருந்த ஸ்நாப்சாட் செயலி தற்போது, 203 எம்பி சைஸ் கொண்டதாக மாறியுள்ளதாக சென்சார் டவர் கூறியுள்ளது.

மிகவும் சிறியது

கோஸ்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம், நானிட் மைக்ரோ என்ற உலகின் மிகச்சிறிய அதாவது 1.8 அங்குல அளவே உயரம் உடைய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் இதில், கால், மெசெஜ், வாய்ஸ் ரெக்கார்ட், கேமரா, புளூ டூத், ஹெட்போன்கள் போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஸ்மார்ட் வாட்சாகவும் பயன்படுத்த முடியும்.

இஞ்சியின் மகிமை

தலைமுடி அதிகம் உதிர்ந்தால், ஒரு இஞ்சி துண்டை நேரடியாக ஸ்கால்ப்பில் சிறிது நேரம் தேய்க்க வேண்டும். பின் 10-15 நிமிடம் கழித்து தலைமுடியை அலச வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால், தலைமுடி உதிர்வது முற்றிலும் நின்றுவிடும். மேலும், ஸ்கால்ப்பில் தொற்றுகளால் பொடுகு ஏற்படுவதை இது தடுக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்