முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஸ்வீட் பொட்டேட்டோ ப்ரை

Cooking time in minutes: 
20
Ingredients: 

ஸ்வீட் பொட்டேட்டோ ப்ரை செய்யத்தேவையான பொருட்கள்.

 1. சர்க்கரை வள்ளிக் கிழங்கு - முக்கால் கிலோ.
 2. அரிசி மாவு  - 1 கப்.
 3. மஞ்சள் புட் கலர் - சிறிதளவு.
 4. எண்ணெய் - சிறிதளவு.
 5. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;--  

 1. ஒரு தட்டில் முக்கால் கிலோ சர்க்கரை வள்ளிக் கிழங்கை எடுத்து அதன் தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
 2. அடுப்பில் கடாயை  வைத்து சிறிதளவு தண்ணீர்  ஊற்றி அதில் ஒரு பாத்திரத்தை வைத்து தோலை சீவிய  சர்க்கரை வள்ளிக் கிழங்கை வரிசையாக வைத்து கடாயை மூடி போட்டு மூடி 15 நிமிடங்கள் நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
 3. 15 நிமிடங்கள் கழித்து வேக வைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக மசித்து வைத்துக்கொள்ளவும்.
 4. இதனுடன் ஒரு கப் அரிசி மாவு,மஞ்சள் புட் கலர் சிறிதளவு மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பின்னர் வட்டமாக தட்டி வைத்துக் கொள்ளவும்.
 5. அடுப்பில் தவாவை வைத்து சிறிதளவு  எண்ணெய்யை ஊற்றி பரப்பி விடவும்.
 6. எண்ணெய்  சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள சர்க்கரை வள்ளிக் கிழங்கு உருண்டைகளை ஒவ்வொன்றாக தவாவில் வைத்து அதன் மேல் சிறிதளவு எண்ணெய்யை ஊற்றி நன்றாக வேக விடவும்.
 7. திருப்பி திருப்பி போட்டு நன்றாக வேக விடவும்.
 8. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
 9. சுவையான ஸ்வீட் பொட்டேட்டோ ப்ரை ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்