முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முடி உதிர்வதை தடுக்க எளிய டிப்ஸ்

 

முடி உதிர்தல் என்பது ஒரு நோய் கிடையாது.

நமது உடலில்  ஏற்படும் தட்ப வெப்ப நிலை நிலையில்  ஏற்படும் மாறுதல் காரணமாக முடி உதிர்கிறது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முடி உதிர்வதில் பல்வேறு மாறுபட்ட காரணங்கள் உள்ளது.

ஆண்களுக்கு தூக்கமின்மை,அதிக எண்ணெய் கலந்த துரித உணவுகளை உண்பது, மற்றும் இரண்டு சக்கர வாகணங்களை அதிக நேரம் பயன்படுத்துதல் காரணமாக முடி உதிர்கிறது.

பெண்களுக்கு தலையில் அதிக அழுக்கு சேர்வதாலும், உடல் சூட்டினாலும்,அதிக கொழுப்பு உள்ள பதார்த்தங்களை உண்பதாலும் முடி உதிர்கிறது.

ஆண்கள் காலை எழுந்த உடன் நல்லெண்ணெய்  5  சொட்டு மற்றும் தேங்காய் எண்ணெய்  5  சொட்டு எடுத்து இரண்டையும் கலந்து தலையின் மயிர் கால்களில் மற்றும் மண்டை ஓட்டில் படும்படி சிறிதளவு எண்ணெய் யை ஊற்றி தேய்த்து மசாஜ் செய்து பின்னர் குளித்து வர முடி உதிர்வதை தடுக்க முடியும்.

பெண்கள் குளித்த பின்னர் தலை ஈரம் காயாமல் இருந்தாலும் முடி உதிரும்.எனவே,குளித்த பின்னர் தலையை நன்கு துவட்டிக்கொள்ளவேண்டும்.

ஆண்களுக்கு முடி உதிர்ந்தால் மீண்டும் வளர வாய்ப்புள்ளது,ஆனால் பெண்களுக்கு மீண்டும் முடி வளர்வது கடினம்.

பெண்களுக்கு தட்ப வெப்ப நிலை மாறுபாட்டினாலும், புரோட்டின் சத்து குறைவதாலும் முடி உதிர்கிறது.

பெண்கள் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்யக்கூடாது அதனாலும் முடி உதிரும்.

ஆலிவ் எண்ணெய் 100 மில்லி,நல்லெண்ணெய் 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 100 மில்லி எடுத்து மூன்று எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து தலையின் மயிர் கால்களில் மற்றும் மண்டை ஓட்டில் படும்படி சிறிதளவு எண்ணெய்யை ஊற்றி தேய்த்து மசாஜ் செய்து வர முடி உதிர்வதை தடுக்க முடியும். புதிய முடிகள் நன்கு வளரும்.

வாரத்திற்கு 2 முறை தலைக்கு குளித்தாலும்,தினமும் இந்த எண்ணெய்யை தலையில் தடவி மசாஜ் செய்து  வர வேண்டும்.

இப்படி செய்யும் போது சில பலமில்லாத முடிகள் உதிர்ந்தாலும் பின்னர் கருமையாகவும்,அடர்த்தியாகவும் முடி நன்கு வளரும்.

வெப்பாலை இலைகள் சிறிதளவு,மருதாணி இலைகள் சிறிதளவு எடுத்து, ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்யில் கலந்து ஒரு நாள் வெயிலில் வைக்கவேண்டும், பின்னர்,அந்த எண்ணெய்யை தலைக்கு பயன்படுத்தி வர முடி நன்கு வளரும்.

வெப்பாலை தைலத்தை தோல்வியாதி உள்ளவர்களுக்கு பயன்படுத்துவார்கள்,தொடர்ந்து இந்த எண்ணெய்யை பயன்படுத்த மயிர் கால்கள் பலப்பட்டு முடி நன்கு வளரும்.

வெப்பாலை தைலத்தை பயன்படுத்தும் போது வாரம் 2 முறை சீயக்காய் போட்டு தலைக்கு குளிக்க வேண்டும்,ஏன் என்றால் வெப்பாலை தைலம் திக்கானது அதிக பிசு பிசுப்பு தன்மை உள்ளதால் தலையில் அழுக்கு சேர வாய்ப்புள்ளது.

வாரம் ஒருமுறை நாம் அனைவரும் நல்லெண்ணெய்யை தலைக்கு ஊற்றி குளிப்பதால் உடல் சூடு குறைந்து, முடி நன்கு வளரும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!