முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

நீர் எரிச்சல், நீர் கடுப்பு குணமாக, நீரடைப்பு சரியாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-5

 

நீரடைப்பு சரியாக ;-- கோவை கஷாயம் குடித்து வரலாம்.

நீர்கட்டை உடைக்க ;--சிறுபூளை வேரை சிதைத்து கஷாயம் செய்து 2 வேளை குடிக்கலாம்.

தக்காளி ஜூஸ் சாப்பிடும்போது விதைகளை தவிர்த்தல் ;-- சிறுநீரகக் கோளாறு வராது.

நீர்த்தாரை எரிச்சல் தீர ;-- பூசணி சாறை,செம்பருத்தி பூவுடன் சாப்பிட்டு வரவும்.

முத்திரக்கடுப்பு தீர ;--அன்னாசிப்பழச்சாறை சாப்பிடவும்.

எரிச்சல் குணமாக ;--மாதுளம் பழ தோலை வறுத்து பொடியாக்கி விளக்கெண்ணையில் கலந்து ஆசன வாயில் தடவலாம்.

துர்நீர் கழிய ;--நீர் முள்ளி விதை,நெருஞ்சில் விதை,வெள்ளரி விதை ஆகியவற்றை சிதைத்து கஷாயம் செய்து பனங்கற்கண்டுடன் சேர்த்து குடிக்கலாம்.

நீர்கடுப்பு,நீர்சுருக்கு குணமாக ;-- நன்னாரி வேர்  5 கிராம் அரைத்து பசும்பாலில் சாப்பிட்டு வரலாம்.

சிறுநீர் பெருக ;-- குறுஞ்செம்பை  இலை சாறு 10 மில்லி சாப்பிட்டு வரலாம்.

சிறுநீர் தடை நீங்க ;--சங்கிலை வேர் பட்டை சாறு 20 மில்லி வெள்ளாட்டுப் பாலில் குடித்து வரலாம்.

நீர்க்கோர்வை காய்ச்சல் தீர ;-- சந்தன தூளை கஷாயம் செய்து குடிக்கலாம்.

பித்த நீர் நீங்க ;--சீதேவி செங்கழுநீர் சமூலம் குடிநீராக்கி சாப்பிடலாம்.

ஈரல் வீக்கம்,நீர் கட்டு தீர ;-- செம்பரத்தை பூவை எலுமிச்சம் பழ சாறு விட்டு அரைத்து பனங்சர்க்கரை பாகில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வரலாம்.

நீர் தாரை குற்றங்கள் ;-- முள்ளங்கி சாறு 30 மில்லி காலை,மாலை சாப்பிடவும்.

வீக்கம்,நீர் கட்டு ;-- மூக்கிரட்டை வேர்,அருகம்புல் மிளகு கீழாநெல்லி ஆகியவற்றை கஷாயம் செய்து 2 வேளை சாப்பிடலாம்.

நீர் சுருக்கு சரியாக ;-- பசும்பாலில், பனங்கற்கண்டு போட்டு கலந்து சாப்பிட்டு வரலாம்.

தேவையில்லாத கெட்ட நீர்,சிறுநீர் வழியாக வெளியேற;-- தினமும் பப்பாளிக்காய்யைச் சாப்பிட்டு வரலாம்.

நீரழிவு நோய் கட்டுப்பட;--  வாழைப்பூவை வேகவைத்து  அல்லது பொரியல் செய்து சாப்பிட்டு வரலாம்,அஜீரணம் அகலும்,

நீர்க்கடுப்பு குணமாக ;-- புளியங்கொட்டையின் தோலை எடுத்து நன்கு உலர்த்தி பொடி செய்து பசும்பாலில் அரை கரண்டி போட்டு குடித்து வரலாம்.

சிறுநீர் கோளாறு நீங்க ;--முலாம்பழம் சாப்பிட்டு வரலாம்.

சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் அகல ;--கல்யாண பூசணிக்காய்யை  சமைத்து சாப்பிட்டு வர குணமாகும்.

நீர் நன்றாக பிரிய ;-- வெள்ளரிக்காய்யை அதிகம் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு தானாக விலகும், நீர் பிரியும்.

நீரழிவு அலர்ஜி குணமாக ;-- சிரியாநங்கையை சாப்பிடலாம்.

சிறுநீரில் உள்ள கற்களை அகற்ற ;-- மாதுளம் பழத்தின் விதைகளை சாப்பிடலாம்.

அதிமூத்திரம் தீர ;-- இளம் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்த நீரை 100 மில்லி குடித்து வரலாம்.

அதிமூத்திரம், நீர்தடை வாதம் வீக்கம் தீர ;-- முள்ளங்கியை சமைத்து உண்ணலாம்.

வாத நீர் வெளியேறி குத்தல் வலி போக ;-- விழுதி இலை,மிளகு,பூண்டு,சீரகம் ஆகியவற்றை விளக்கெண்ணையில் தாளித்து ரசம் வைத்து சாப்பிடலாம்.

மிகுதியாக சிறுநீர் கழித்தல் ;-- முருங்கை பிசினை பொடி செய்து பாலில் அரைக்கரண்டி போட்டு சாப்பிடலாம்.

அதிமூத்திரம் குறைய ;-- கசகசாவை பொடி செய்து காலை மற்றும் மாலை உணவுக்கு முன் அரைக்கரண்டி சாப்பிடலாம்.

சிறுநீரக வியாதி ;-- சுரைக்காய் சாறு மற்றும் எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து அருந்தலாம்.

இரவில் உறக்கத்தில் நீர் பிரிதல் பிரச்சனை தீர ;-- பாலுடன் அஸ்வகந்த லேகியத்தை காலை மற்றும் மாலை என இரு வேளை சிறு உருண்டை சாப்பிட்டு வரலாம்.

சிறுநீருடன் குருதி போக்கு சரியாக;-- அம்மான் பச்சரிசி மூலிகை இலையை அரைத்து பசும்பாலில் சாப்பிடலாம்.

சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல்  சரியாக ;-- ஆவாரம் பட்டையை பொடியாக்கி கஷாயம் செய்து சாப்பிட்டு வரலாம்.

மூத்திர கடுப்பு ;-- அன்னாச்சி பழச்சாறு சாப்பிடலாம்.

சொட்டு மூத்திரம் தீர ;-- செம்பருத்தி பூவை,பூசணி சாறுடன் சாப்பிட்டு வரவும்.

சிறுநீரக கற்கள் கரைய ;-- சிறு பூனை சமூலத்தை கஷாயம் செய்து காலை மற்றும் மாலை 50 மில்லி அளவு  குடிக்கவும்.

சிறுநீரகம் பலமாக ;--ரோஜாப்பூ,கற்கண்டு மற்றும் தேன் கலந்து வெயிலில் வைத்து ஒரு கிராம் அளவு சாப்பிடவும்.

நீரழிவு அலர்ஜி குணமாக;-- சிறியாநங்கை சாப்பிட குணமாகும்.

வெள்ளை நீர் எரிச்சல் தீர ;-- விளாமரபிசின் பொடி ஒரு சிட்டிகை அளவு வெண்ணையில் போட்டு கலந்து சாப்பிட்டு வர  வெள்ளை நீர் எரிச்சல் தீரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்