எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும் மூலிகைகள் இருக்கும். தற்போது, பெருநகரங்களில் குடியிருப்பதற்கே சிறிய வீடுதான். இடப்பற்றாக்குறை காரணமாக மூலிகை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனால், மக்கள் நினைப்பது போலச் செடிகளை வளர்ப்பதற்கு வீட்டின் முன்பாகவோ அல்லது பின்புறத்திலோ நிறைய இடவசதி தேவை இல்லை. சாதாரணப் பூந்தொட்டிகளில்கூடச் சில முக்கியமான மூலிகைகளை வளர்க்க முடியும். காய்ச்சல், தலைவலி, சிறிய காயம் போன்ற சின்னச் சின்ன உபாதைகளுக்கு ஆஸ்பத்திரிக்கு ஓட வேண்டிய அவசியம் இருக்காது. அதனால் வீட்டுக்கு ஒரு மூலிகையாவது இருந்தால் நோய்களில் இருந்து தப்ப முடியும்.
மஞ்சள் கரிசலாங்கண்ணி : பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடித்த மூலிகை இது. மஞ்சள்காமாலைக்கு மிகச் சிறந்த மருந்து. வாரத்துக்கு இரண்டு நாள் இந்தக் கீரையில் சட்னி அல்லது துவையல் அரைத்து சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தி அதிகரிக்கும். சிறந்த கிருமிநாசினியும்கூட. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். கல்லீரலைப் பலப்படுத்தும். குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுத்திணறல், சளித்தொல்லை, ஆஸ்துமா போன்றவற்றையும் போக்கக்கூடியது. கீரையை நன்றாகக் கழுவி, உலரவைத்து பொடி செய்து சிறிது சாப்பிட்டு வந்தால், உடல் பொன்நிறமாக மாறும். இலையைக் காய்ச்சி சாறு எடுத்துத் தலையில் தடவி வந்தால், இளநரை மறையும்.
வல்லாரைக் கீரை : வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்பு உள்ளிட்ட தாது உப்புக்கள் இதில் அதிகம். மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்தத்தைச் சுத்திகரிக்கும் செயலைச் செய்யும் சக்தி இந்தக் கீரைக்கு இருப்பதால், ஞாபக சக்திக்கு முக்கியப் பங்காற்றுகிறது. உடல் புண்களைக் குணமாக்குவதுடன், மூளை சோர்வைப் போக்கும். நரம்புத் தளர்ச்சிக்கும், இதயத்தைப் பலப்படுத்தவும், தாது விருத்திக்கும் நல்லது. வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால், குடல் புண், குடல் நோய், வாய்ப்புண்கள், வாய் நாற்றம் போன்றவை நீங்கும். கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக் கூடாது.
பிரம்மி : கொடி வகையைச் சேர்ந்த மூலிகை. இதன் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை. நரம்பு மண்டலத்தைத் தூண்டி சோர்வை நீக்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். சாஃப்ட்வேர் தொழிலில் பணிபுரிபவர்கள் இந்த மூலிகையை நிச்சயம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதனைச் சாறு எடுத்து நெய் சேர்த்து சாப்பிட்டுவந்தால், நினைவாற்றல் அதிகரிக்கும். இலைகளைக் கசாயம் செய்து குடித்தால், மலச் சிக்கல் தீரும். இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டுவந்தால், குரல் வளம் பெருகும். வேரை அரைத்துக் கொதிக்கவைத்து நெஞ்சில் பூசினால், நாள்பட்ட சளி சரியாகும்.
நிலவேம்பு : சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சலை சரிப்படுத்துவதிலும் மூலிகை முதல் பங்கு வகித்தது. கொடி போல் படரக்கூடிய மூலிகை. மூலிகையைப் பொடித்து, கசாயம் செய்து குடித்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மை இதற்கு உண்டு. பசியைத் தூண்டும். சாதாரண வைரஸ் காய்ச்சல் உள்பட அனைத்துக் காய்ச்சல்களையும் குணமாக்ககூடியது. வருமுன் தடுக்கவும் செய்யும்.
பிரண்டை : தொட்டியில் வளர்த்தால் அழகாகப் படர்ந்து நிற்கும். தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிரண்டையின் தண்டை துவையல் அரைத்துச் சாப்பிடலாம். இதில் கால்சியம் அதிகம் இருப்பதால், வாரத்துக்கு இரண்டு நாட்கள் சாபிட்டு வந்தால், எலும்புகளும், பற்களும் வலிமை பெறும். மூட்டுவலிக்கு மிகவும் நல்லது. தீராத வயிற்றுப்புண், வயிற்று வலியைப் போக்கும். செரியாமை நோயைக் குணப்படுத்தும். உதடு, நாவில் ஏற்படும் புண்ணை விரைவாகக் குணப்படுத்தும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, உடல் வலியை சுகப்படுத்தும்.
திப்பிலிக்கொடி : திப்பிலி எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம்எடுத்து தேனுடன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டுவந்தால், இருமல், தொண்டைக் கமறல், பசியின்மை, தாது இழப்பு ஆகியவை குணமாகும். இரைப்பை, கல்லீரல் வலுப்பெறும். தேமல் நோய் மறையும். திப்பிலிப் பொடி, கடுக்காய் பொடியை சம அளவில் கலந்து இலந்தைப்பழ அளவுக்கு இரண்டு வேளையாக மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இளைப்பு நோய் இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போகும்.
ஓமவல்லி : கற்பூரவள்ளி என்றும் அழைக்கப்படும். வீட்டுத் தொட்டியில் வளர்க்க எட்டு மாதங்கள் ஆகும். இலை கசப்பு சுவையும் காரத்தன்மையும் கொண்டது. இதன் இலை மற்றும் தண்டுப்பகுதி இருமல், சளி, ஜலதோஷத்துக்கு முக்கியமான மருந்து. இதன் இலையைச் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து கொடுத்தால், குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சீதள இருமல் நோய் தீரும். இலைச் சாறை நெற்றியில் பத்து போட்டால், தலைவலி நீங்கும். குழந்தைகளின் அஜீரண வாந்தி நீக்கும். கண் அழற்சிக்கும் உகந்தது. மனக் கோளாறை சரிசெய்யும் மருந்திலும் இந்த மூலிகை பயன்படுத்தப்படுகிறது. இலையைக்கொண்டு பஜ்ஜி சுட்டுச் சாப்பிடலாம்.
துளசி : வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகளில் துளசி முக்கியமானது. இதன் இலைகளில் இரண்டை நாள் தோறும் சாப்பிட்டுவந்தால், குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகள் வாழ்நாள் முழுவதும் வராது. கிருமிநாசினி. துளசி இலையைப் போட்டு ஊறவைத்த தண்ணீரை தொடர்ந்து பருகி வந்தால், சர்க்கரை நோய் நம்மை நெருங்காது. குளிக்கும் நீரில் முந்தைய நாளே போட்டுக் குளித்தால், உடலில் வியர்வை நாற்றம் ஏற்படாது. மன இறுக்கம், ஞாபக சக்தி இன்மை, நரம்புக் கோளாறு, ஆஸ்துமா, இருமல் மற்றும் தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி துளசிக்கு உண்டு.
தூதுவளை : இதன் இலை, பூ, காய், வேர் என அனைத்துமே மருத்துவக் குணம்கொண்டது. தூதுவளை இலையைப் பறித்து வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால், உடலுக்கு வலுவை கூட்டும். இருமல், சளி நீங்கும். ஆண்மை சக்தியை அதிகரிக்கும். வாதப் பித்தத்தைச் சரிப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தி பலப்படும். தூதுவளையை நன்றாக அரைத்துத் தோசை மாவுடன் கலந்து அடை போலச் செய்து சாப்பிட்டால், ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். காது மந்தம், நமைச்சல், வயிறு மந்தம் போன்ற பிரச்னைகளுக்குச் சிறந்த மருந்து.
நொச்சி : கொசுக்கள் அருகில் வராது என்பதால், தமிழக அரசும் இதனை வீடுகளில் வளர்க்கும்படி பரிந்துரைக்கிறது. இலையைச் சூடான நீரில் போட்டு ஆவி பிடித்தால், தலைவலி, காய்ச்சல், சளித்தொல்லை, கை கால் வலி நீங்கும். இரவில் தலையில் வைத்துப் படுத்தால், தலைவலி, தலை நீர், தலை பாரம், நரம்பு வலி, கழுத்து வீக்கம், மூக்கடைப்பு போன்றவை குணமாகும். இதன் சாறை உடலில் இருக்கும் கட்டிகளின் மீது இரவு நேரத்தில் பற்று போட்டுவந்தால், கட்டிகள் மறைந்துவிடும். நொச்சி சாறைத் தேய்த்தால் நரம்பு பிடிப்பு, இடுப்பு வலி நீங்கும். இலைகளை அரைத்து மூட்டுகளில் கட்டினால், நாள்பட்ட மூட்டுவலி தொல்லையில் இருந்து விடுபடலாம்.
எஸ்.பாலமுருகன்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
உதய்பூரில் இன்று நடக்கும் திருமண நிகழ்வில் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகாவை கரம் பிடிக்கிறார்
01 Feb 2026ஐதராபாத், விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி ராஜஸ்தானின் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இன்று திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி தகுதிக்கான ‘டெட்’ தேர்வில் 1.50 லட்சம் பேர் தேர்ச்சி
01 Feb 2026சென்னை, பள்ளி ஆசிரியர் பணித் தகுதிக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு 1.50 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
01 Feb 2026புதுடெல்லி, சி.பி.ஐ. புலன்விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எச்.ராஜாவை நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
01 Feb 2026சென்னை, பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.
-
தைப்பூசத் திருநாள்: இ.பி.எஸ். வாழ்த்து
01 Feb 2026சென்னை, தைப்பூசத் திருநாள் வினைகள் விலகி வெற்றிகள் மலரும் நாள் என எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் இல்லை: பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.பி.,க்கள் கடும் முழக்கம்
01 Feb 2026புதுடெல்லி, பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என தி.மு.க. எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர்.
-
மத்திய பட்ஜெட் 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் உள்ளது: பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்
01 Feb 2026புதுடெல்லி, தொலைநோக்குடன், நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில
-
மத்திய பட்ஜெட்டில் எஸ்.டி.டி.யை அதிகரித்ததால் பங்குச்சந்தைகள் திடீர் வீழ்ச்சி
01 Feb 2026புதுடெல்லி, மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எஸ்.டி.டி.
-
ஜனவரி மாதம் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி..!
01 Feb 2026புதுடெல்லி, கடந்த ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல்(சரக்கு மற்றும் சேவை வரி) ரூ.1.93 லட்சம் கோடியை தாண்டியது.
-
வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு: பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2026டெல்லி, வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.1.27 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
சாமானிய மக்களுக்கு எதுவும் இல்லை: மத்திய பட்ஜெட் குறித்து மம்தா கருத்து
01 Feb 2026டெல்லி, 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களுக்கு விரோதமான பட்ஜெட் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: தைப்பூசத்திற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி
01 Feb 2026புதுடெல்லி, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று தைப்பூசத்தை முன்னிட்டு தமிழில் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு ஜனாதிபதியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
01 Feb 2026டெல்லி, 2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு ஜனாதிபதி திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார்.
-
திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு
01 Feb 2026டெல்லி, மின்சார வாகனங்களை ஊக்குவிக்க லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன் நிதியமைச்சக குழுவினருடன் நிர்மலா சீதாராமன் புகைப்படம்
01 Feb 2026டெல்லி, எதிர்வரும் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட், பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
-
முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்வி வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
வரி தாக்கலின் போது பொய் கணக்கு காட்டினால் 100 சதவீதம் அபராதம்: பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
01 Feb 2026புதுடெல்லி, வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரிசட்டம் நடைமுறைக்கு வரும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி தாக்
-
நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்: மத்திய பட்ஜெட்டிற்கு இ.பி.எஸ். வரவேற்பு
01 Feb 2026சென்னை, 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து சாதனை படைத்துள்ள நிர்மலா சீதாராமனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
-
எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற்றிலும் புறக்கணிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
01 Feb 2026சென்னை, மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற
-
வார ராசிபலன்
01 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
01 Feb 2026- நெல்லையப்பர் கோவிலில் செளந்திரசபா நடனம்.
- வைத்தீசுவரன் கோவிலி செல்வமுத்து குமாரசுவாமி புறப்பாடு.
- திருச்சேறை சாரநாதர் சப்தாவர்ணம்.
- சென்னை சிங்காரவேலவர் தெப்பம்
-
இன்றைய ராசிபலன்
01 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
01 Feb 2026


