முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவராத்திரி பண்டிகை 9 நாட்களும் இறைச்சி கடைகளை மூட சிவசேனா மிரட்டல்

வியாழக்கிழமை, 30 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

சண்டிகார்  - ஹரியாணாவின் குருகிராமில் ஏராளமான இறைச்சி கடைகள் உரிய உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. இந்நிலையில் நவராத்திரி பண்டிகையின்போது 9 நாட்களும், பிரதி செவ்வாய்க் கிழமை தோறும் இறைச்சி கடைகளை மூடும்படி 200-க்கும் மேற்பட்ட சிவசேனா தொண்டர்கள் திரண்டு வந்து உரிமையாளர்களை மிரட்டியுள்ளனர்.  மேலும் கே.எப்.சி போன்ற அசைவ உணவகங்களையும் மூடும்படி அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பீதியடைந்த சில உரிமையாளர்கள் தங்களது கடைகளை மூடிவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து குருகிராம் சிவசேனா தலைவர் கவுதம் சைனி கூறும்போது, ‘‘கடந்த  2 நாட்களுக்கு முன்பு  பாலம் விஹாரில் சேனா தொண்டர்கள் ஒன்று திரண்டு அங்கு இயங்கி வந்த இறைச்சி கடைகளை மூடும்படி வலியுறுத்தினர். மேலும் அசைவ உணவகங்களையும் மூடும்படி கேட்டுக் கொண்டோம்’’ என்றார்.  அதே சமயம் மிரட்டல் விடுத்து கடைகளை மூடச் சொல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என குருகிராம் போலீஸ் இணை ஆணையர் மணிஷ் சேகல் எச்சரித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago