முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 ஆயிரம் சிறிய கோவில்களுக்கு பூஜை பொருட்கள்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்

புதன்கிழமை, 10 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் மிக சிறிய கோவில்களுக்கு 2½ கோடி ரூபாய் செலவில் பித்தளையால் ஆன பூஜைப் பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உலோகத் திருமேனி பாதுகாப்பு மையம் மற்றும் திருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளிக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருவண்ணாமலை மாவட்ட இசைப் பள்ளிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

ஆன்மீகத்தின் அடித்தளமே தல வழிபாடாகும். அத்தலங்களின் அடித்தளம் திருக்கோயில் அமைப்பிலும், அதன் வழிப்பாட்டு முறைகளிலுமே உள்ளது. அதனால், அதன் மாட்சிமையைப் பேணிப் பாதுகாக்கும் பொருட்டு, திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்வது, அன்றாட பூஜைகள் தங்கு தடையின்றி நடப்பதை உறுதி செய்வது, ஆக்கிரமிப்பில் உள்ள திருக்கோயில்களின் சொத்துக்களை மீட்டு அவற்றின் வருவாயைப் பெருக்குவது, பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது போன்ற பணிகளை புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் – கும்பகோணம் வட்டம், திருவலஞ்சுழி, அருள்மிகு கபர்தீஸ்வரர் திருக்கோயிலில் 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உலோகத் திருமேனி பாதுகாப்பு மையம்; கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் திருவாரூர் நகரத்தில் 315 சதுர மீட்டர் பரப்பளவில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கான என மொத்தம் 1 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கோயில் கட்டடங்கள் மற்றும் இசைப்பள்ளி கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.மேலும், கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் திருவண்ணாமலை – சமுத்திரம் கிராமத்தில் 0.20.5 ஹெக்டேர் நிலப்பரப்பில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.கிராமப்புறங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள திருக்கோயில்கள் உள்ளிட்ட 10,000 சிறு சிறு திருக்கோயில்களுக்கு முறையான பூஜை செய்திட ஏதுவாக, பித்தளைத் தாம்பாளம், தூபக்கால், மணி, கார்த்திகை விளக்கு மற்றும் தொங்கு விளக்கு ஆகியவை 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் வாங்கி வழங்கப்படும் என்று புரட்சித் தலைவி அம்மா 12.8.2014 அன்று சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி, அம்மா, பூஜை செய்ய வசதி இல்லாத 10,000 சிறு சிறு திருக்கோயில்களுக்கு பூஜைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தினை 15.9.2015 அன்று துவக்கி வைத்து, திருக்கோயில் பூசாரிகளுக்கு பூஜை பொருட்களை வழங்கினார்.அத்திட்டத்தினை விரிவுப்படுத்தி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள மேலும் 10,000 மிகச் சிறிய திருக்கோயில்களுக்கு 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் பித்தளையாலான தாம்பாளம், தூபக்கால், மணி, கார்த்திகை விளக்கு, தொங்கும் விளக்கு போன்ற பூஜைக்கு தேவையான பொருட்களை, திருக்கோயில் பூசாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வழங்கினார். மேலும், திண்டுக்கல் மாவட்டம், பழனி – அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆண்டுக்கு 11 லட்சம் ரூபாய் செலவில் தினமும் சாயரட்சை பூஜைக்கு பின் 2000 சேவார்த்திகளுக்கு 20 கிராம் அளவில் தொன்னையில் பஞ்சாமிர்தம் வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, கலை மற்றும் பண்பாடுத் துறை ஆணையர் ஏ. ராமலிங்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மா.வீர சண்முகமணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago