முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீனிவாசன் நல்ல நண்பர்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2025      சினிமா
Rajini 2023 07 31

சென்னை, ஸ்ரீனிவாசன் எனது நல்ல நண்பர் என்று நடிகர் ரஜினிகாந்த் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகின் பிரபல நடிகரும், இயக்குநருமான நடிகர் ஸ்ரீனிவாசன் உடல் நலம் பாதித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு (வயது 69). கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மட்டனூர் அருகே உள்ள பாட்டியம் பகுதியில் 1956-ம் ஆண்டு பிறந்த ஸ்ரீனிவாசன், 1977-ம் ஆண்டு "மணி முழக்கம்" என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமா துறையில் நுழைந்தார். பள்ளி ஆசிரியர் மற்றும் இல்லத்தரசியின் மகனான இவர் பொருளாதாரம் இளங்கலை பட்டதாரி ஆவார்.

சினிமா துறைக்கு வருவதற்கு முன்பாக சென்னையில் உள்ள தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் முறையான திரைப்பட பயிற்சி பெற்றவர். அவர் நடித்த முதல் படத்திலேயே தனது தனிப்பட்ட நடிப்பின் மூலமாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். அதன்பிறகு மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்த இவர், மலையாள சினிமாவின் மதிக்கப்படும் நடிகர்களில் ஒருவரானார். 225 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீனிவாசன், சமூகத்தில் நடக்கும் விஷயங்களை தனது காமெடி வாயிலாக வெளிப்படுத்தி ரசிகர்களால் கவரப்பட்டவர்.

மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமாக்களிலும் நடித்துள்ள அவர், தனது நகைக்சுவை நடிப்பால் தமிழக ரசிகர்களையும் கவர்ந்தவர். திரைப்பட துறையில் நடிப்பு மட்டுமின்றி, பல படங்களில் இயக்குனராகவும் இருந்துள்ளார். மேலும் திரைக்கதை எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவர் இயக்கிய பல படங்கள் மாநில மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது. தமிழில் வெளியான "லேசா லேசா" படத்தில் இவர் நடித்த நகைச்சுவை கதாப்பாத்திரம் யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும். அவரது முக பாவணை மற்றும் நகைச்சுவை பேச்சு, அந்த படத்தில் இறுதிவரை ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருக்கும். பாரதிராஜாவின் "ரெட்டச்சுழி" படத்திலும் நடித்திருக்கும் அவர் அப்போதே தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தனது தனித்துவமான நகைக்சுவை நடிப்பின் மூலம் மலையாள மற்றும் தமிழ் திரையுலகில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஸ்ரீனிவாசன், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்தார். அவர் உதயம்பேரூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து சிகிச்சை பெற்றார். டயாலிசிஸ் சிகிச்சைக்காக அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று வந்த படி இருந்துள்ளார். இந்தநிலையில் அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து திரிபுனித்துராவில் உள்ள தாலுகா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஸ்ரீனிவாசன் நேற்று காலை 8.30 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது மறைவு மலையாள திரையுலகினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஸ்ரீனிவாசனின் மறைவு குறித்து கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ஆடியோவில், "எனது நல்ல நண்பர் ஸ்ரீனிவாசன் இனி இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியாக இருந்தது. நான் படித்த திரைப்படக் கல்லூரியில் அவர் என் வகுப்புத் தோழர். அவர் ஒரு சிறந்த நடிகர் மற்றும் மிகவும் நல்ல மனிதர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து