முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனித உடம்பில்தான் எத்தனை வகையான நுண்ணிய கருவிகள்

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      வாழ்வியல் பூமி
Image Unavailable

Source: provided

மதுரை வானொலியில் "சான்றோர் சிந்தனை" எனும் நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆன்மிக சொற்பொழிவாளர் டாக்டர் கே.பி.முத்துசாமி ஆற்றிய உரையை இங்கே காண்போம்.

இறைவன் இவ்வுலகில் உள்ள அனைத்து ஆன்மாக்களும் உய்வு பெறுவதற்காக உயிரை வழங்குகிறான். வினைகளை நீக்கிடப் பிறவிப் பேற்றினை அருளுகிறான். தாயும், தந்தையும் இணையும்போது இறைவனுடைய திருவுள்ளப்படி கரு உருவாகிறது. அந்தக் கரு உயிருடன் கருப்பையில் பலத்த பாதுகாப்புடன் உடம்பினைப் பெற்று குழந்தையாகப் பிறந்து இந்த உலகிற்கு வருகிறது.

இதை மணிவாசகர் போற்றித் திரு அகவலில் சிறப்பாக விளக்குகிறார். அருவ நிலையில் தேவர்களாலும் காண முடியாத திருவடிகளை உயிர்கள் கண்டு வாழ்த்த எளிதாகும்படி சிவப்பரம்பொருள் உருவம் தாங்கி வருகிறார். இறைவனை வணங்கி மகிழப் பக்குவமாக வேண்டிய ஜீவர்கள் கடல் சூழ்ந்த இவ்வுலகில் அவரவர்கள் செய்தவினைகளுக்கு ஏற்ப யானை முதல் எறும்பு வரையுள்ள பல வடிவங்களில் பிறக்கின்றன. பிறகு மனிதப் பிறப்பு எடுக்கும்போது அந்தக் கருவானது கருப்பையில் உள்ள பல கிருமிகளின் தாக்குதலில் இருந்து மீண்டு பிழைத்து வளருகிறது.

ஒருமாதம் பூர்த்தியானதும் தனக்காக என  ஒரு வடிவெடுக்கிறது. இரண்டு மாதம் நிறையும் பொழுது வலுப்பெறுகிறது. மூன்றாம் மாதத்தில் தாயின் கருவில் பெருகும் கொழுப்பு நீரில் புதையுண்டு போகாமல் உயிர் வாழ்கிறது. ஐந்தாவது மாதத்தில் கருக் கலைந்து விடாமல் பாதுகாப்பாக இருக்கிறது. ஆறாவது மாதத்தில் அந்தக் கருவுக்கு எல்லா அவயங்களும் முறையாக அமைகிறது. ஏழு, எட்டு, ஒன்பதாம் மாதத்தில் இயல்பாக ஏற்படும் பல துன்பங்களைக் கடந்து உயிருடன் இருக்கிறது.

பத்தாவது மாதத்தில் தகுதியுடன் கர்ப்பத்தில் வளர்ந்து, பிறக்கும்போது பிரசவ வேதனையில் தாயும் குழந்தையும் துன்பப்பட்டு குழந்தை பிறக்கிறது. கருப்பையில் வளரும் கருவுக்கு இறைவன் அதன் தொப்புள் கொடி மூலமாகத் தாயிடமிருந்து உணவு பெற்று வளரச் செய்கிறான். கருவிலுள்ள குழந்தை தன் இருகரம் கூப்பி இறைவனையே துதித்துக் கொண்டிருக்கிறது. பத்தாவது மாதம் சூதக வாயு அந்தக் குழந்தையை தாயின் வயிற்றிலிருந்து இந்தப் பூவுலகத்தில் வந்து பிறக்குமாறு வெளியேற்றுகிறது. கருப்பையிலிருந்து வெளியே வந்தவுடன் "பிராணன் " என்ற வாயு சுவாசத்தை மேற்கொள்ளச் செய்கிறது. "அபானன்"  என்ற வாயு அந்தக் குழந்தையின் வயிற்றிலிருந்து மலசலங்களை வெளியேற்றுகிறது. இதையே "காட்டு மலம்" என்பார்கள். உடனே அந்தக் குழந்தைக்குப் பசி ஏற்பட்டு "குவா ! குவா" என்று அழ ஆரம்பித்தவுடன் அந்தக் குழந்தையின் உடல் உறுப்புகள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றன. பிறந்த குழந்தையின் அழுகை அதன் தாய்க்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

நற்றமிழ் வல்ல நாவுக்கரசர் கருவறையில் இருந்தபோதே இறை உணர்வுடையவராகத் திகழ்ந்தார். கருவின் உருவமற்ற நிலையிலும் எண்ணிய எண்ணமெல்லாம் இறைவனுடைய திருவடிகளே என்கிறார். உருவமும் பருவமும் அடையும் முன்பே கடவுளையே எப்போதும் நீக்கமற நினைத்தாராம் உருவு கொண்டு இவ்வுலகில் தோன்றிய போதும் இறைவனுடைய புகழைப் பல காலம் பயின்று வந்தார். அதுமட்டுமல்ல இறைவனை மறவாமல் இருக்க புறக்கோலத்திலும் "சிவாய நம" என்று திரு நீற்றினை அணிந்து வந்தார். என்னுடைய பிறவி நீங்க இறைவா தங்களையே அடைக்கலமாக நினைத்து இருக்கும் எனக்கு சிவகதி அருள வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்.

மேலும் தாயின் கருவில் இருந்த காலத்தில் இருந்தே உன் திருவடியை என் மனம் சிந்தித்து வருகிறது. பிறவிக்கடலில் சிக்கித் தவிக்கும் எனக்கு உன்னை விட்டால் வேறு கதி இல்லை. என் மீது இரக்கம் கொண்டு அருள் பாலிக்க வேண்டும் இறைவா! என்று வேண்டுகிறார். "கருவுற்ற நாள் முதலாக உன்பாதமே காண்பதற்கு உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்தழிந்து எய்த் தொழிந்தேன்" என்கிறார்.

இந்த உடம்பை அருமையிலும் அருமையாக ஆக்கித் தந்து, இந்த உடம்புக்குள் எத்தனை எத்தனை வகையான நுண்ணிய கருவிகளையும் படைத்து, நம்மை வாழவைக்கும் இறைவனின் பெருங்கருணையை நினைந்து, நினைந்து, உணர்ந்து, உணர்ந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு நனைந்து நனைந்து, அருளமுதே! நன்னிதியே! ஞான நடத்தரசே! என்னுரிமை நாயகனே என்று இறைவனைப் போற்றி வணங்கி வந்தால் இறைவன் நமக்கு சிவகதி என்னும் பெரும் பேற்றினை அருள்வான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து