முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்தில் புதிய அரசு நாளை பதவியேற்கிறது: இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2026      உலகம்
Tariq-Rahman-2026-02-15

டாக்கா, வங்கதேச புதிய பிரதமராக பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்கும் விழாவில் இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வங்கதேச தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சிப்பீடத்தில் அரியணையேற உள்ள வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) அமைச்சரவை பதவியேற்பு விழா நாளை (பிப். 17-ல்) வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. வங்கதேச புதிய பிரதமராக மறைந்த முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகனும் பிஎன்பி தலைவருமான தாரிக் ரஹ்மான் பதவியேற்கவுள்ளார். இவ்விழா வங்கதேச நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 17) பிற்பகல் நடைபெறும் என்று பிஎன்பி கட்சி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவுக்கு இந்தியா உள்பட சீனா, சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான், ஐக்கிய அரபு ஆமீரகம், கத்தார், மலேசியா, புரூனே, இலங்கை, நேபாளம், மாலத்தீவு, பூடான் ஆகிய 13 நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நாடுகளின் தலைவர்கள் இவ்விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், பிரதமர் மோடி வங்கதேசம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியாவுக்கு திங்கள்கிழமை(பிப். 16) வருகை தரும் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரான், மும்பையில் செவ்வாய்க்கிழமை(பிப். 17) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்வுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, இரு தலைவர்களும் தில்லியில் இந்தியாவின் தலைமையில் நடைபெறும் ஏ.ஐ. 2026 உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிப். 17-இல் நடைபெறும் வங்கதேச அரசு பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதில் என்பதில் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில் இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து