முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் பெண்கள் அனுமதி விவகாரம்: மறுஆய்வு மனுக்களை இன்று பரிசீலிக்கிறது சுப்ரீம் கோர்ட்

ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2026      இந்தியா
Supreme-Court 2023-04-06

திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு சுப்ரீம் கோர்ட் இன்று பரிசீலிக்க உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உத்தரவிட்டது. மேலும் ஆலயத் தடை பாலின பாகுபாட்டிற்குச் சமம் என்றும் கூறியது.

இதனை கேரளாவில் ஆளும் இடது சாரி அரசு அமல்படுத்த நடவடிக்கை எடுத்த போது, மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. பக்தர்களும், அரசியல் கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் இன்று (16-ம் தேதி) பரிசீலிக்க உள்ளது. இதே போல் கோவிலின் மத பழக்க வழக்கங்களை எடுத்துக்காட்டும் மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. தலைமை நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு இந்த மனுக்களை விசாரிக்கிறது. அப்போது கேரள அரசும் இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளது.

இதற்கிடையில் 2018-ம் ஆண்டு தீர்ப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்து மொத்தம் 51 பெண்கள் சபரிமலைக்குள் நுழைந்ததாக 2020 ஆம் ஆண்டில் இடதுசாரி அரசாங்கம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. அரசாங்கம் 51 பெண்களின் பெயர்களையும், ஆதார் அட்டை மற்றும் முகவரிகள் உள்ளிட்ட பிற விவரங்களையும் பட்டியலிட்டுள்ளது. பெரும்பாலான பெண்கள் ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் கோவாவைச் சேர்ந்தவர்கள். பெயர்களில் எதுவும் கேரளாவைச் சேர்ந்தவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து