எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வான்கோழிகள் இறைச்சிக்காக வளர்க்கப்படும் பறவையாகும். வான்கோழி இறைச்சியானது மிருதுவாகவும், சுவை மிக்கதாகவும் உள்ளதால் மக்கள் இதைப் பெருமளவில் விரும்பி உட்கொள்ளுகின்றனர். தமிழ்நாட்டில் வான்கோழி இறைச்சியின் தேவையும் அதற்கான உற்பத்தியும் நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகின்றன.
இருப்பினும் தேவைக்கேற்ப வான்கோழி இறைச்சி மிகவும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மேலும் வான்கோழிகள் விரைவில் வளர்ச்சி பெறுவதாலும், குறைந்த தீவனம் உட்கொண்டு அதிக எடை கூடுவதாலும் இது மிகவும் இலாபகரமான தொழிலாக விளங்குகிறது. தற்போது நமது நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் வான்கோழிகள் கிராமப்பகுதிகளில் வீட்டின் புறக்கடைகளில் ஆங்காங்கே வளர்க்கப்படுகின்றன. வான்கோழிகளை பண்ணை முறைகளிலும் வளர்க்கலாம்.
வான்கோழி இனங்கள் : வான்கோழியின் தாயகம் தென் அமெரிக்காவாகும். 15ம் நூற்றாண்டுக்கு பிறகு ஐரோப்பா மற்றும் மற்ற நாடுகளில் வளர்க்க தொடங்கினர். வான்கோழிகள் பெருமளவில் வளர்க்கப்படுவது ஆஸ்திரேலியாவாகும். வான்கோழிகளை பலவகை இனங்கள் என்று சொல்லாமல் வகைகள் என்றே குறிப்பிடுகிறார்கள். அவற்றில் குறிப்பிடத்தக்க வகையான வான்கோழிகள் உண்டு.
1. ஹாலந்து வெள்ளை
2. பார்பான் சிவப்பு
3. நார்கான்செட்
4. பிரான்ஸ்
5. பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை
6. ஸ்லேட்
7. நார்போக்
வான்கோழி வளர்ப்பின் நன்மைகள்
• வான்கோழிகள் மற்ற கோழி இனங்களை காட்டிலும் மிக விரைவாக வளர்ச்சி பெறும்.
• குறைந்த தீவனம் உட்கொண்டு குறைந்த நாட்களில் அதிக எடை கூடும்.
• வான்கோழி இறைச்சியானது மிருதுவாகவும், சுவைமிக்கதாகவும் இருக்கும்.
• வான்கோழி முட்டைகள் சுமார் 65 முதல் 70 கிராம் வரை எடை கொண்டதாக இருக்கும்.
• ஒரு வான்கோழி ஒவ்வொரு மாதமும் 10 முதல் 12 முட்டைகள் வரை இடும்.
• வான்கோழிகளை வீட்டின் புறக்கடைகளிலும் வளர்க்கலாம், பண்ணை முறைகளிலும் வளர்க்கலாம்.
வான்கோழி வளர்ப்பு முறை : அகன்ற மார்புடைய பிரான்ஸ், அகன்ற மார்புடைய வெள்ளை மற்றும் பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை போன்ற இனங்கள் நமது பகுதிகளுக்கு மிகவும் ஏற்ற வகைகளாக கருதப்படுகின்றன. வான்கோழிகளை கீழ்கண்ட முறைகளில் வளர்க்கலாம்.
1. ஆழ்கூள முறை
2. புறக்கடை வளர்ப்பு
3. மேய்ச்சலுடன் கொட்டகை வளர்ப்பு
ஆழ்கூள முறை : கொட்டகைகள் நல்ல காற்றோட்டமான இடங்களில் அமைக்கப்பட்டு தரை சிமெண்டால் அமைக்கப்படவேண்டும். ஆழ்கூள முறையில் காகிதம், மரத்தூள், நிலக்கடலை தோல், நெல் உமி போன்றவைகளை சிமெண்ட் தரையின் 5 முதல் 6 அங்குல உயரத்திற்கு பரப்ப வேண்டும். ஒரு ஆண் வான்கோழிக்கு சுமார் 5 சதுர அடி இடவசதியும் ஒரு பெண் வான்கோழிக்கு 4 சதுர அடி இடவசதியும் தேவைப்படும். வளர்ந்த வான்கோழிகளுக்கு தனி கொட்டகையும், குஞ்சுகள் வளர்ப்பதற்கு தனிகொட்டகையும் அமைத்திட வேண்டும். இம்முறையில் குறைந்தது 200 வான்கோழிகள் கொண்ட பண்ணையாக இருந்தால் மிகுந்த இலாபமுடையதாக அமையும்.
புறக்கடை வளர்ப்பு : இம்முறையில் வான்கோழிகளை பகல் வேளைகளில் வீட்டுப்புற தோட்டத்தில் அல்லது வயல்வெளிகளில் மேயவிட்டு பிற இரவு வேளைகளில் மட்டும் கொட்டகைகளில் அல்லது கூண்டுகளில் அடைத்து வளர்க்கலாம். வீடுகளில் இருக்கும் தானியங்கள், சமையல் அறை கழிவுகள், எஞ்சிய சமைத்த உணவு போன்றவை வான்கோழிகளுக்கு உணவாக அமைகின்றன. மேலும் தோட்டங்களில் உள்ள கீரைகள், பூச்சிகள், வண்டுகள், களைகளும் போதுமான அளவு கிடைக்கின்றன.
இனவிருத்தி பராமரிப்பு : வான்கோழி பண்ணைகளில் இனவிருத்திக்காக தேவைப்படும் ஆண் மற்றும் பெண் கோழிகளை தேர்வு செய்வதில் மிகவும் கவனம் தேவை. இனவிருத்திக்காக தேர்வு செய்யப்படும் ஆண் வான்கோழிகள் துரிதமாக வளர கூடியதாகவும், அகன்ற மார்புடனும் இருக்கவேண்டும். பொதுவாக 12 வார வயதிற்குள் அனைத்து ஆண் வான்கோழிகளை விடவும் அதிக எடை அடையக்கூடிய திறன் இருக்க வேண்டும். இறகுகள் வேகமாக வளரக்கூடிய தன்மையுடனும், வால் இறகுகள் நீளமாகவும், 16 முதல் 20 வார வயது அடையும் சமயத்தில் தோகை விரித்து ஆடவும் வேண்டும்.
அதே போல் தேர்ந்து எடுக்கப்படும் பெண் வான்கோழிகள் 12 வார வயது அடையும் சமயத்தில் 2 முதல் 2.5 கிலோ எடை மட்டுமே அடைய வேண்டும். மேலும் பெண் வான்கோழிகள் அதிக எண்ணிக்கையில் தொடர்ந்து முட்டையிடும் திறன் உடையதாகவும், அடைக்காக்கும் தன்மையில்லாமலும், வேகமாக வளரும் திறன் கொண்டதாகவும் இருக்கவேண்டும். இனவிருத்திக்காக வான்கோழிகளை அவற்றின் தாய் தந்தையாரின் பாரம்பரியம் அறிந்து வாங்கி வளர்ப்பது நல்லது.
வீட்டின் புறக்கடைகளில் வளர்க்கப்படும் வான்கோழிகளை நான்கு பெண்கோழிகளுக்கு ஒரு ஆண் கோழி வீதம் சேர்;த்துவிடவேண்டும். பொதுவாக வான்கோழிகளை 6 முதல் 7 மாத வயதில் முட்டையிட தொடங்கிவிடுகின்றன. வான்கோழி முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொறிக்கும் தன்மையுடையது. இதனுடைய அடைக்காலம் 28 நாட்களாகும். வான்கோழிகள் முட்டையிடும் போது முட்டைகளை தினமும் சேகரித்து சேமித்து வைக்க வேண்டும்.
வான்கோழிகள் அடையிருக்கும் இடத்தில் தினமும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும். முட்டையிடும் பருவத்தில் அடைபடுக்கவிடாமல் முட்டையிடவைத்தால் ஆண்டு ஒன்றிக்கு 80 முதல் 100 முட்டைகள் இடும். வான்கோழி முட்டைகளை நாட்டுகோழிகளிலும் அடைவைத்து பொறிக்கலாம். ஒரு கோழியில் சுமார் 8 முதல் 10 வான்கோழி முட்டைகளை வைக்கலாம். முட்டைகளை இயந்திரங்களில் வைத்தும் பொறிக்கலாம். ஒரே சமயத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான முட்டைகளை அடைக்காப்பானில் (ஐnஉரடியவழச) வைத்து 29 நாட்களில் குஞ்சுகளை வெளியே எடுத்துவிடலாம்.
வான்கோழி குஞ்சுகள் பராமரிப்பு : கோழிகள் மூலமாக குஞ்சுகள் பொறித்து இருந்தால் தாய் கோழிகளே தம் குஞ்சுகளுக்கு தீவனத்தை பொறுக்கி எடுத்துக் கொள்வதை கற்றுக்கொடுத்துவிடும். இயந்திரங்களின் மூலம் குஞ்சுகள் பொறிக்கும் போது குஞ்சுகளை அடைக்காப்பான் அமைத்து பாராமரிக்க வேண்டும்.
அடைக்காப்பானை ஆங்கிலத்தில் புரூடர் (டீசழழனநச) என்று அழைக்கிறோம். இளம் குஞ்சுகள் பொறித்திலிருந்து 3 வார வயதுவரை அதன் உடல் வெப்பத்தை சீராக பாராமரிக்க ஏதுவாக செயற்கை வெப்பம் விளக்குகள் மூலமாக அளிக்கப்படவேண்டும்.
இதற்காக 1½ அடி உயரத்திற்கு அட்டைகளினாலோ அல்லது துருபிடிக்காத தகட்டினாலோ 6 அடி விட்டத்திற்கு மட்டமாக அமைக்கப்பட வேண்டும். 6 அடி அடைக்காப்பானின் நடுவில் 2 அடி உயரத்தில் 100 வால்ட் மின் விளக்குகள் பொறுத்தி எரியவிடவேண்டும். தரையில் சிறிதளவு நெல் அல்லது கடலை உமியை பரப்பிவிட்டு அதன் மேல் செய்தித்தாள்களை பரப்பி அதன் மேல் குஞ்சுகளை விடலாம். தினமும் செய்தித்தாள்கள் அசுத்தமாகிவிடுவதால் தினமும் தாள்களை மாற்றவேண்டும்.
திறந்த தட்டுகளில் நான்கு இடங்களில் தீவனம் வைத்திடவேண்டும். தண்ணீர் குவளைகளில் சுடவைத்து ஆரவைத்த குடிநீரை வைக்க வேண்டும். 6 அடி விட்டம் உள்ள அடைக்காப்பானுள் 100 லிருந்து 150 குஞ்சுகள் வரை வளர்க்கலாம். குஞ்சுகளுக்கு நாளொன்றுக்கு 5 அல்லது 6 முறை சிறிது சிறிதாக தீவனம் அளிக்கப்பட வேண்டும்.
அடிக்கடி தண்ணீரை மாற்றி வைக்க வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு அடைக்காப்பானை பிரித்துவிட்டு பெரிய இடத்தில் ஒரு குஞ்சுக்கு 0.5 சதுர அடி வீதம் இடவசதி அளித்து வளர்க்கலாம். வான்கோழி குஞ்சுகள் 3 வயதிலிருந்து சுமார் 5 வார வயதை அடையும் வரை படிப்படியாக இடவசதியை அதிகரித்து 1 சதுர அடி இடவசதியும் அதற்கு பின் 8 வார வயது அடையும் சமயத்தில் 2 சதுர அடியும் 12 வார வயது அடையும் சமயத்தில் 3 சதுர அடியும் கொடுக்க வேண்டும். புறக்கடைகளில் வளர்க்கும் வான்கோழிகளுக்கு இரவில் தங்குவதற்கு வயதிற்குயேற்றார்போல் 1 முதல் 3 சதுர அடி இடவசதியளிக்கலாம்.
தீவன பராமரிப்பு : இளகுஞ்சுகளை வளர்ப்பதற்கு நல்ல ஊட்டச்சத்துள்ள தீவனம் அளிக்கப்பட வேண்டும். வான்கோழிகள், இறைச்சி கோழி வளர்வதைவிட துரிதமாக வளர்வதால் அவைகளுக்கு குஞ்சுபொறித்த நாளிலிருந்து 3 வார வயது ஆகும் வரை தீவனத்தில் புரதம் 28 சதவிகிதமும், எரிசக்தி 2800 கிலோ கலோரி (1 கிலோவிற்கு) அடங்கிய தீவனம் அளிக்கப்படவேண்டும். 4 முதல் 8 வாரங்களுக்கு தீவனத்தில் 26 சதவிகிதம் புரதமும் 2900 கிலோ கலோரி (1 கிலோவிற்கு) எரிசக்தி இருக்கும் படி தீவனம் அளிக்கவேண்டும்.
வளரும் பருவத்தில் வான்கோழிகளுக்கு புரத்தின் தேவை படிப்படியாக குறைகிறது. அதே சமயத்தில் எரிசக்தியின் தேவை படிப்படியாக அதிகரிக்கிறது. எனவே 8 முதல் 14 வாரங்களில் வளரும் வான்கோழிகளின் தீவனத்தில் 25 சதவிகிதம் புரதமும், 3000 கிலோ கலோரி (1 கிலோவிற்கு) எரிசக்தியும் இருக்கவேண்டும். முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகளின் (14 முதல் 28 வாரம்) தீவனத்தில் 14 சதவிகிதம் புரதமும், 3200 கிலோ கலோரி (1 கிலோவிற்கு) எரிசக்தியும் அளிக்கப்பட வேண்டும். சுமார் 30 வார வயதில் வான்கோழிகள் முட்டையிட ஆராம்பிக்கின்றன.
முட்டையிடும் கோழிகளுக்கு 14 சதவிகிதம் புரதமும் 2900 கிலோ கலோரி (1 கிலோவிற்கு) எரிசக்தியும் அடங்கிய தீவனம் அளிக்கப்பட வேண்டும். முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகளுக்கும் முட்டையிடும் கோழிகளுக்கும் கிளிஞ்சல் தூள் 1 சதவிகிதம் சேர்த்து கொடுக்கவேண்டும். வான்கோழிகளின் தீவனத்தில் வைட்டமின் ஏ, பி2, டி3, கே கலவை 100 கிலோவில் சுமார் 50 கிராம் கலக்கப்பட வேண்டும்.
இத்துடன் கால்சியம், பாஸ்பரஸ் கலவை சேர்க்கப்பட வேண்டும். தினமும் பசுங்கீரைகளும், புற்களும் சிறுதுண்டுகளாக அளிக்கப்படவேண்டும். வான்கோழிகளின் தீவனம் அளித்தலில் வான்கோழி எடை, முட்டை உற்பத்தி மற்றும் மொத்த செலவு ஆகியவற்றை மனதில் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் தீவனம் தயாரித்து அளிக்கவேண்டும்.
கால்நடை வளர்ப்போர்கள் மேற்கூறிய இனவிருத்தி மற்றும் தீவன முறைகளை கையாண்டு வான்கோழி வளர்ப்பில் சிறந்த வருமானம் ஈட்ட வேண்டுகிறோம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகலாம்.
தொடர்புக்கு: கால்நடை மருத்தவத் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு – 614 625
தொகுப்பு: மரு.மு.வீரசெல்வம், மரு.சோ.யோகேஷ்பிரியா, மரு.கோ.ஜெயலட்சுமி, மரு.சு.கிருஷ்ணகுமார், மரு.ம.சிவகுமார், மரு.மா.வெங்கடேசன் மற்றும் முனைவர் ப. செல்வராஜ்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 12 months 4 days ago |
-
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
30 Aug 2025தென்காசி : குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-08-2025.
30 Aug 2025 -
உ.பி.யை விட தமிழக முதல்வர் பின்தங்குகிறார் - நயினார்
30 Aug 2025சென்னை : உ.பியை விட தமிழ முதல்வர் பின் தங்கிகியுள்ளார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி
30 Aug 2025காஷ்மீர் : ஜம்மு - காஷ்மீரின் ரியாசியில் நிலச்சரிவு காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
-
கொச்சி: வங்கி ஊழியர்கள் நூதன போராட்டம்
30 Aug 2025கொச்சி : கேரள மாநிலம் கொச்சியில் வங்கி ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
ஒரு குவிண்டால் நெல் கொள்முதல் ரூ. 2 ஆயிரம் உயர்வு - அமைச்சர் அறிவிப்பு
30 Aug 2025சென்னை : ஒரு குவிண்டால் நெல் கொள்முதல் ரூ. 2 ஆயிரதது 500 உயர்ந்துள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
சீனா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
30 Aug 2025பீஜிங், சீனா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
-
மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் எம்.பி. 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
30 Aug 2025திருவள்ளூா் : தமிழக மாணவா்களுக்கு கல்வித் தொகையை வழங்காததை கண்டித்தும், நிதி அளிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்
-
அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைந்தால் 2026 தேர்தலில் வெற்றி நிச்சயம் - சசிகலா
30 Aug 2025சென்னை : அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைந்தால் 2026 தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
-
கால்நடை பல்கலை. உடன் இணைந்து தேசிய திறந்தநிலை தொழிற்கல்வி படிப்பு அறிமுகம்
30 Aug 2025சென்னை : தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து 4 புதிய தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகம் செய்துள்ளன.
-
ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் உக்ரைனின் போர்க்கப்பல் மூழ்கியது
30 Aug 2025மாஸ்கோ : உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலை, ட்ரோன் மூலம் ரஷ்யா தகர்த்தது. இதில் உக்ரைன் வீரர் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயம் அடைந்தனர்.
-
ஜப்பானில் எரிமலை வெடித்தால் என்ன நடக்கும் ஏ.ஐ. வீடியோ வெளியிட்ட அரசு
30 Aug 2025டோக்கியோ : ஜப்பானில் எரிமலை வெடித்தால் என்ன நடக்கும் என்று ஏ.ஐ. வீடியோ வெளியிட்டுள்ளது.
-
தலைவா படத்தை ரிலீஸ் செய்வதற்காக விஜய் காத்திருந்தார்: நடிகர் ரஞ்சித் தாக்கு
30 Aug 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21 ஆம் தேதி மதுரையில் நடபெற்றது.
-
ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து: சாம்பியன் பட்டத்தை பெற்றது இந்திய அணி
30 Aug 2025திம்பு : 7-வது ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) பூட்டான் தலைநகர் திம்பில் நேற்று தொடங்கியது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 51 மாத கால ஆட்சியில் இதுவரை மொத்தம் 1.85 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு தகவல்
30 Aug 2025சென்னை, முதல்வரின் 51 மாத கால ஆட்சியில் இதுவரை மொத்தம் 1.85 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 44 ஆயிரத்து 777 கோடியே 83 லட்சம் ரூபாய் வழங்கப்
-
2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
30 Aug 2025சென்னை : 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஏ.ஐ. துறையில் கால் பதிக்கும் முகேஷ் அம்பானி நிறுவனம்
30 Aug 2025புதுடெல்லி : அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் ஏ.ஐ.
-
மூப்பனார் நினைவுநாள்: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் மரியாதை
30 Aug 2025சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும் தமாகா நிறுவனருமான ஜி.கே.
-
தெரு நாய்களை விரட்ட மாணவர்கள் கண்டுபிடித்த 'மந்திரக்கோல்'- தேசிய அங்கீகாரம் கிடைத்தது
30 Aug 2025திருவனந்தபுரம் : கேரளா, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தெருநாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது.
-
ஜப்பானில் புல்லெட் ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி
30 Aug 2025டோக்கியோ, பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் ஜப்பான் நாட்டுக்கு சென்றார்.
-
அமெரிக்கா 50 சதவீதம் வரியால் பாதிக்கப்படும் ஏற்றுமதி துறைகளை பாதுகாத்திட புதிய கொள்கை வகுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
30 Aug 2025சென்னை, அமெரிக்கா 50 சதவீதம் வரியால் பாதிக்கப்படும் ஏற்றுமதி துறைகளை பாதுகாத்திட புதிய கொள்கை வகுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.
-
இந்தியாவில் இருந்து நிலக்கடலை இறக்குமதியை இந்தோனேசியா நிறுத்தியது
30 Aug 2025இந்தோனேசியா : இந்தியாவில் இருந்து நிலக்கடலை இறக்குமதியை நிறுத்தியது இந்தோனேசியா நிறுத்தியுள்ளது.
-
திருத்தணி அருகே சீமான் தலைமையில் மரங்களின் மாநாடு
30 Aug 2025திருத்தணி : நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரங்களோடு பேசுவோம், மரங்களுக்காகப் பேசுவோம் என்ற தலைப்பில் திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் மரங்களி
-
ஸ்ரீசாந்தின் விவகாரம் மனைவி ஆவேசம்
30 Aug 2025டெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது.
-
பிராட்மேன் தொப்பி ரூ. 2.53 கோடிக்கு ஏலம்
30 Aug 2025கான்பெரா : பிராட்மேன் பயன்படுத்திய தொப்பி ரூ. 2.53 கோடிக்கு ஏலம் போனது.