முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைவா படத்தை ரிலீஸ் செய்வதற்காக விஜய் காத்திருந்தார்: நடிகர் ரஞ்சித் தாக்கு

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Ranjith 2025-08-30

Source: provided

சென்னை : தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21 ஆம் தேதி மதுரையில் நடபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய், மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுகவை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி மற்றும் மு.க ஸ்டாலினையும் காட்டமாக விமர்சித்து பேசியிருந்தார். விஜய்யின் பேச்சு அரசியல் நாகரீகத்துடன் இல்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், நடிகர் ரஞ்சித்தும் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். ரஞ்சித் பேசுகையில், “சமீபத்தில் மதுரை மாநாட்டில் பேசிய விஜய், நான் உச்சத்தில் இருக்கும் போது வந்தவன். பிழைப்பு தேடி வரவில்லை என பேசியிருக்கிறார். விஜய், யார சொல்றாரு எம்ஜிஆரையா, ஜெயலலிதாவையா இல்ல அன்பு அண்ணன் விஜயகாந்தையா, இல்ல கமல் ஹாசனையா?. எனக்கு என்னமோ கமல்ஹாசன நேரடியாக சொல்ல முடியாமல் இப்படி சொல்லிருயிருப்பார் என்று நினைக்கிறன்.

பிழைப்பு தேடி அரசியல் செய்றவர் என்பது அவருக்குத்தான் சரியா இருக்கும். விஜய் சொடக்கு போட்டு மோடி ஜீ-னு சொல்கிறார். 2014 ஏப்ரல் 16-ல் கொடிசியாவில் மோடி முன்பு பூனை மாதிரி பம்மிட்டு உட்கார்ந்து இருந்திங்களே... அன்னைக்கு எதுக்கு வந்து பார்த்தீங்க, கச்சத்தீவ மீட்கவா? தலைவா படம் ஓடணும்னு வந்து பார்த்தீங்க. பழச எல்லாம் மறந்துட்டீங்களா? என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து