எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். முதல்கட்ட கலந்தாய்விற்கு 13 ஆயிரத்து 242 மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கவுன்சிலிங் நேற்று முதல் துவங்கியது. சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற கவுன்சிலிங்கில் சிறப்பு பிரிவினர்அழைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் பிரிவில் உள்ள 122 இடங்களுக்கு 58 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் தகுதியான 20 மாணவர்கள் கவுன்சிலிங்கில் அழைக்கப்பட்டு 5 பேர் தங்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களை தேர்வு செய்துள்ளனர்.
அதேபோல் விளையாட்டு பிரிவினருக்கான 3 இடங்களுக்கு 447 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் அண்ணா பல்கலைக் கழகம் அளித்த பட்டியலில் உள்ள முதல் 10 மாணவர்களில், 6 மாணவர்கள் மட்டுமே தகுதிப்பெற்றனர். அவர்கள் கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 5 இடங்களும், பி.டி.எஸ். படிப்பில் 1 இடமும் உள்ளது. அதற்காக 513 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் தகுதியான 471 பேரில் 60 மாணவர்கள் நேற்று கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர். அவர்களுக்கான 6 இடங்களையும் தேர்வு செய்துள்ளனர். மீதமுள்ள இடங்கள் பொது கவுன்சிலிங்குக்கு கொண்டுச் செல்லப்படும்.
மேலும் இன்று துவங்கும் முதல்கட்ட பொது கவுன்சிலிங் 25-ம் தேதி 1,209 மாணவர்களும், 26-ம் தேதி 1,464 மாணவர்களும், 27-ம் தேதி 1,596 மாணவர்களும், 28-ம் தேதி 2,989 மாணவர்களும், 29-ம் தேதி 4,817 மாணவர்களும், 30-ம் தேதி 1081 மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். 31-ம் தேதி தனியார் மருத்துக் கல்லூரியில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


