முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் வழக்கு திரைத்துறை வளர்ச்சியை அழித்துவிட்டது: விடுதலைக்கு பிறகு நடிகர் திலீப் பேட்டி

திங்கட்கிழமை, 8 டிசம்பர் 2025      சினிமா
Dileep-1-2025-12-08

திருவனந்தபுரம், என் மீதான பாலியல் வழக்கு என் திரைத்துறை வளர்ச்சியை அழித்துவிட்டது என நடிகர் திலீப் வேதனை தெரிவித்துள்ளார். 

கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு காரில் வீட்டுக்குச் சென்ற போது, நடிகையை ஒரு கும்பல் கடத்தி ஓடும் காரில் பாலியல் தொல்லை கொடுத்து அதனை விடியோ பதிவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து கேரள காவல்துறை விசாரணை நடத்தி, நடிகர் திலீப்பின் தூண்டுதலின் பேரிலேயே இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.இதில், நடிகையின் கார் ஓட்டுநர், உதவியாளர்களும் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். 8 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் விசாரணைக்குப் பிறகு நேற்று எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிபதி ஹனி எம். வர்கீஸ் தீர்ப்பளித்தார். அதில், திலீப்பிற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுவித்தார்.

வழக்கில் ஏ1 முதல் ஏ6 வரையிலான குற்றம்சாட்டப்பட்ட வர்களை குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 8-வது நபரான நடிகர் திலீப்பை விடுவித்துள்ளார். இந்த தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த நடிகர் திலீப் கூறியதாவது; எனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என் மீதான பாலியல் வழக்கு என் திரைத்துறை வளர்ச்சியை அழித்துவிட்டது. எனக்காக வாதிட்ட வழக்கறிஞர்கள், ஆதரவாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து