Idhayam Matrimony

தமிழ் வருடங்கள் அறுபது

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2017      வாழ்வியல் பூமி
Image Unavailable

Source: provided

பெரும்பாலும் ஆண்டுகளை எண்களாலேயே குறிப்பிடுகின்றோம். ஆனால் தமிழ் ஆண்டுகள் அறுபதும், அறுபது பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

 தமிழ் வருடங்களின் கதை: அறுபது தமிழ் வருடங்கள் எப்படி உருவாகின என்பதற்கு ஒரு அழகான புனை கதை முன் வைக்கப்படுகிறது. அந்தக் கதையின் சுருக்கம் இது.

ஒருமுறை நாரத முனிவர் மோகத்தால் தாக்கப்பட்டார். கிருஷ்ணனிடம் போய் அவருடைய அறுபது ஆயிரம் காதலிகளில் ஒருவரையாவது தனக்கு தரக்கூடாதா? ஏன்று வேண்டியுள்ளார். உடனே கிருஷ்ணர் என்னை தன் மனதில் வைக்காத ஏதே னும் ஒரு பெண்ணை எடுத்துக் கொள் என்றார். அப்படிப்பட்ட பெண்ணைத் தேடி அலைந்தும் நாரதரால் காண முடியவில்லை. அதனால் நாரதர், கிருஷ்ணனிடமே வந்து, நானும் ஒரு பெண்ணாகி, உங்களோடு இருந்து விடுகிறேன் எனச் சொல்ல கிருஷ்ணர் நாரதரை ஒரு பெண்ணாக மாற்றி, அவருடன் அறுபது வருடம் வாழ்ந்து அறுபது பிள்ளைகளைப் பெற்றார். அது தான் : அறுபது தமிழ் ஆண்டுகள் ஆகும்.

 (சென்னையில் கிருஷ்ணாம்பேட்டையில் வாழ்ந்த ஆ.சிங்காரவேலு முதலியார் (1855-1931) அபிதான சிந்தாமணி எனும் இலக்கிய கதைக் களஞ்சிய நூலை 1910 -ல் வெளியிட்டார். அவரது மகன் 1934இல் இரண்டாம் பதிப்பு வெளியிட்ட போது இந்தக் கதை சேர்க்கப்பட்டுள்ளது)
நாரத புராணத்தில் வரும் கதை: தேவி பாகவதம் மற்றும் நாரத புராணத்தில் : அறுபது வருடங்களை நாரதருடன் தொடர்புபடுத்தி, சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது.

 ஒரு முறை கிருஷ்ணர், நாரதரைத் தன் ரதத்தில் ஏற்றிக் கொண்டு சென்றார். வழியிலே நீரோடை ஒன்றைக் கண்ட நாரதர், நீர் அருந்தச் சென்றார். முதலில் குளித்து விட்டு, நீரை அருந்துமாறு கிருஷ்ணர் கூறினார். ஆனால் இந்த கட்டளை யைப் புறக்கணித்து விட்டு நாரதர் குளிக்காமலேயே நீரை அருந்தினார்.  என்ன ஆச்சரியம் உடனே அவர் ஒரு அழகிய பெண்ணாக ஆகிவிட்டார். அங்கே கிருஷ்ண ரும்  இல்லை ரதமும் இல்லை. நாட்டிலே சுற்றி அலைந்த பெண் உருவிலான நாரதர், ரிஷி ஒருவரின் ஆசிரமத்தை அடைந்தார். சமாதியிலிருந்து மீண்ட ரிஷி, தன் எதிரே அழகிய பெண் நிற்பதைக் கண்டார். தன்னை சிஷ்யையாக ஏற்றுக்கொள்ளுமாறு அவள் வேண்டவே, அவளையே மணந்தார். அந்தப் பெண்ணும் அறுபது பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். ஒரு நாள் அறுபது பிள்ளைகளும், கணவனான ரிஷியும் இறந்து விட்டனர். துக்கம் தாளாமல் கதறி அழுத பெண், ஈமக்கிரியைகளைக் கூட செய்ய முடியாத அளவில் மிகவும் சோர்ந்து போனாள். அதிபயங்கரப் பசி அவளை வாட்டியது.

 பக்கத்திலிருந்த மாமரத்தின் கனியைப் பறிக்க, கையை உயர்த்தினாள். ஆனால், அது எட்டவில்லை. வேறு வழியின்றித் தன் கணவன் மற்றும் அறுபது பிள்ளைகளின் பிணத்தை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி, மேலே ஏறிக் கனியைப் பறித்தாள். அப்போது அங்கே வந்த மறையவர் ஒருவர், கணவன் பிள்ளைகள் இறந்த தீட்டைப் போக்காமல் சாப்பிடுவது தவறு என்று அறிவுறுத்தி முதலில் குளிக்குமாறு கூறினார். அதைக் கேட்ட பெண் கையில் மாங்கனியைத் தூக்கிப் பிடித்தவாறே குளித்தாள். பெண் உரு நீங்கிப் பழையபடி வளையல் மட்டும் மாங்கனியோடு அப்படியே இருந்தது. மறையவர், கிருஷ்ணனாக மாறினார். கிருஷ்ண னின் கட்டளைப்படி, மீண்டும் நீரில் இறங்கிக் குளித்த நாரதர், முழு உருவத்தைப் பெற்றார். அவர், கையில் இருந்த மாங்கனி, வீணையாக மாறியது. கிருஷ்ணர், நாரதரை நோக்கி, உங்களுடன் வாழ்ந்த ரிஷி வேறு யாரும் இல்லை. அவரே கால புருஷன். அறுபது பிள்ளைகளும். புpரபவ, விபவ முதலான அறுபது வருடங்கள். என்று கூறினார்.

மாயையின் மகிமையை அறிய விரும்பிய நாரதர், காலத்திற்கு உருவம் கிடையாது. ஆனால் அந்த காலமே, மாயைக்கு உருவமாக இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தார். நம் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட அறுபது குண விசே ஷங்களையே அறுபது பிள்ளைகளான வருடங்கள் வெளிப்படுத்துகின்றன.

சுழற்சி முறையில் அறுபது தமிழ் வருடங்கள் : அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களும், சுழற்சி முறையில் அறுபது வருடங்களுக்கு ஒரு முறை வந்து கொண்டே இருக்கும். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்திற்கு செல்லும் வழியில் உள்ள அறுபது படிகட்டுகளிலும் இந்த அறுபது தமிழ் வருடங்களின் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.

தமிழ் ஆண்டுகளுக்கு இணையான ஆங்கில ஆண்டுகள் :

வ. ஆண்டின்   அபிமான    தமிழ் பெயர்

எ. பெயர்   தேவதைகள்  

1. பிரபவ  பிரம்மா  நற்றோன்றல்

2. விபவ  விஷ்ணு  உயர் தோன்றல்

3. சுக்கில  மகேசன்  வெள்ளோளி

4. பிரமோதூத கணேசன்  பேருவகை

5. பிரஜோத்பத்தி கணபன்  மக்கட்செல்வம்

6. ஆங்கில  ஷடானன்  அயல்முனி

7. ஸ்ரீ முக  வல்லீ   திருமுகம்

8. பவ   கௌரீ   தோற்றம்

9. யுவ  ப்ராம்ஹீ  இளமை

10. தாது  மகேஸ்வரி  மாழை

11. ஈஸ்வர  கௌமாரி  ஈச்சுரம்

12. பகுதானிய வைஷ்ணவி  கூலவனம்

13. பிரமாதி  வாராஹி  முன்மை

14. விக்ரம  இந்தி ராணி  நேர் நிரல்

15. விக்ஷி  சாமுண்டி  விளைபயன்

16. சித்ரபானு அரோகன்  ஓவியக்கதிர்

17. சுபானு  பிராஜன்  நற்கதிர்

18. தாரண  படரன்   தாங்கெழில்

19. பார்திப  பதங்கன்  நிலவரையன்

20. விய  ஸ்வர்ணரன்  விரி மாண்பு

21. ஸர்வஜித் ஜ்யோதிஷ்மான் முற்நறிவு

22. ஸர்வதாரி விபாஸன்  முழு நிறைவு

23. விரோதி  கச்யபலி  தீர்பகை

24. விக்ருதி  ரவி   வளமாற்றம்

25. கர  சூரியன்  செய் நேர்த்தி

26. நிந்தன  பானு   நற்குழவி

27. விஜய  ககன்   உயர்வாகை

28. ஜய  பூஷா   வாகை

29. மன்மத  ஹிரண்யகர்பன் காதன்மை

30. துர்முகி  மரீசி   வெம்முகம்

31. ஹேவனம்பி ஆதித்யன்  பொற்றாடை

32. விளம்பி  ஸவிதா  அட்டி

33. விகாரி  அருக்கன்  எழில்மாறல்

34. சார்வாரி  பாஸ்கரன்  வீறியெழல்

35. பிலவ  அக்கினி  கீழறை

36. சுபகிருது  ஜாதவேதன்  நற்செய்கை

37. சோபகிருது ஸஹோஜஸன் மங்கலம்

38. குரோதி  அஜிராபிரபு  பகைக் கேடு

39. விஸ்வாவசு வைஸ்வாநரன் உலக நிறைவு

40. பராபவ  நர்யாபஸன்  அருட்டோற்றம்

41. பிலவங்க பங்க்திராதஸன் நச்சுப்புழை

42. கீலக  விஸர்பி  பிணைவிரகு

43. சௌம்ய  மத்ஸ்ய மூர்த்தி அழகு

44. சாதாரண கூர்மமூர்த்தி  பொதுநிலை

45. விரோதிகிருது வராஹ மூர்த்தி இதல்வீறு

46 .பரிதாபி  நிரசிம்ம மூர்த்தி கழி விரக்கம்

47. பிரமாதீச  வாமன மூர்த்தி நற்றலைமை

48. ஆனந்த  ஸ்ரீ ராமன்  பெருமகிழ்ச்சி

49. ராஷஸ  பரசுராமன்  பெருமறம்

50. நள   பலராமன்  தாமரை

51. பிங்கள  கிருஷ்ணன்  பொன்மை

52. காளயுக்தி கல்கி   கருமை வீச்சு

53. சித்தார்த்தி புத்தர்  முன்னிய முடிதல்

54. ரௌத்ரி  துர்க்கை அழலி

55. துர்மதி  யாதுதானன் கொடுமதி

56. துந்துபி  ஸபரவர் பேரிகை

57. ருத்ரோத்காரி ஹனுமான் ஒடுங்கி

58. ரக்தாக்ஷி சாரதை செம்மை (சரஸ்வதி)

59. குரோதன தாக்ஷாயனி எதிரேற்றம்

60. அக்ஷய  லஷ்மி  வளங்கலன்

உத்தம தமிழ் ஆண்டுகள்: பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோத்பத்தி, ஆங்கிரஸ, ஸ்ரீக முக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்ரம, விக்ஷீ, சித்ர பானு, சுபானு, தாரண, பார்திப, விய,

மத்திம ஆண்டுகள்: ஸர்வஜித், ஸர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துர்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகரி, சார்வாரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ

அதம ஆண்டுகள் : பிலவங்க, கீலக, சௌம்ய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த ராக்ஷஸ, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்ரி, துர்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி, குரோதன, அக்ஷய.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து