முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் 2 வினாடிகளில் 700 கி.மீ. வேகம் சீன ஆராய்சியாளர்கள் புதிய உலக சாதனை..!

ஞாயிற்றுக்கிழமை, 28 டிசம்பர் 2025      உலகம்
China-Train-2025-12-28

பெய்ஜிங், சீன ஆராய்சியாளர்கள் 2 நொடியில் மணிக்கு 700 கிலோ மீட்டர் வேகம் எட்டக்கூடிய சோதனை வாகனத்தை இயக்கி உலக சாதனை படைத்துள்ளனர். ஒரு டன் எடை கொண்ட இந்த வாகனம் மீக்கடத்தும் மின்காந்த உந்துவிசை அமைப்பைப் பயன்படுத்தி 400 மீட்டர் நீளமுள்ள காந்த மிதவை தண்டவாளத்தில் இயக்கப்பட்டது. இந்த சோதனையில் வாகனம் இலக்கை அடைந்தவுடன் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.

சீனா மாக்லேவ் தொழில்நுட்பத்தில் உருவாக்கிய ரயில் 2 விநாடிகளில் மணிக்கு 700கி.மீ. வேகத்தில் சென்று உலக சாதனை படைத்துள்ளது. சீனாவில் அதிவேக ரயில்கள் மணிக்கு 217கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. மேலும் நீண்ட சுரங்கப் பாதைகளில் கூட 5ஜி இணைப்பை ஆதரிக்கின்றன. நீண்ட தூர வணிக பயணிகள் விமானத்திற்கான சராசரி பயண வேகம் மணிக்கு 547 முதல் 575 மைல் வரை இருக்கும்.

இந்நிலையில் சீனா மாக்லேவ் தொழில்நுட்பத்தில் உருவாக்கிய ரயிலை சோதனை செய்தது. இந்த சோதனையின்போது ரயில் இரண்டு வினாடிகளில் மணிக்கு 700கி.மீ. வேகத்தில் வெற்றிகரமாக சோதனை செய்தது. மாக்லேவ் ரயில் 400மீட்டர் காந்த லெவிட்டேஷன் சோதனைப் பாதையில் சோதிக்கப்பட்டது.

பின்னர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. ரயிலின் சோதனை வேகமானது ஒரு புதிய மைல்கல்லை அமைத்து உலகின் அதிவேக மீக்கடத்தி மின்சார மாக்லேவ் ரயிலாக ஆனது. இந்த ரயிலின் சோதனை ஓட்ட வீடியோ காட்சியை சீனாவின் அரசு தொலைக்காட்சி கடந்த வியாழன்று ஒளிபரப்பியது. அதிவேக மாக்லேவ் தொழில்நுட்பத்தில் சீனா உலக உயர்மட்டத்தில் நுழைவதை இந்த சோதனை சமிக்ஜை செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து