முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவுதம் காம்பீரை நீக்கிவிட்டு இந்திய டெஸ்ட் அணிக்கு மட்டும் புதிய பயிற்சியாளரை நியமிக்கிறது பி.சி.சி.ஐ.?

ஞாயிற்றுக்கிழமை, 28 டிசம்பர் 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

மும்பை, இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு வி.வி.எஸ். லக்ஷ்மணை கொண்டு வர பி.சி.சி.ஐ. ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தொடர் தோல்வி...

தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் பொறுப்பேற்றதிலிருந்தே டிரஸ்ஸிங் ரூம் உட்பட இந்திய அணியில் ஒரு குழப்பம் நிலவி வருகிறது. இதுபோட்டிகளிலும் வெளிபடுகிறது. மேலும் கவுதம் காம்பீரின் அணித்தேர்வு குறித்தும் ஒவ்வொரு போட்டியிலும் கேள்வி எழுகிறது. ஐசிசி மற்றும் ஏசிசி போட்டிகளில் கவுதம் காம்பீரின் தேர்வுகள் கைக்கொடுத்தாலும், சேனா நாடுகளுக்கு எதிராக 10 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது. குறிப்பாக சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் ஒயிட்வாஷ் ஆனபிறகு இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக கவுதம் காம்பீரின் எதிர்காலம் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

வி.வி.எஸ்.லக்ஷ்மண்....

இந்நிலையில் டெஸ்ட் அணிக்கு மட்டும் புது பயிற்சியாளரை கொண்டுவர, பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் சிலர் வி.வி.எஸ்.லக்ஷ்மணை அணுகியதாக தகவல் வெளியாகி உள்ளது. 2027 ஒருநாள் உலகக் கோப்பை முடியும் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக காம்பீர் நியமிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் ஐந்து வாரங்களில் தொடங்க இருக்கும் டி-20 உலகக் கோப்பையில் இந்தியாவின் செயல்திறனைப் பொறுத்து அதை மீண்டும் பரிசீலிக்க வாய்ப்புகளும் உள்ளன. 

டி20 உலகக் கோப்பை....

இந்தியா டி20 உலகக் கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டால் அல்லது குறைந்தபட்சம் இறுதிப் போட்டியை எட்டினால், அவர் தடையின்றி தனது பணியைத் தொடர்வார். இருப்பினும், காம்பீர் டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றியைத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரம் டெஸ்ட் அணிக்கு பயிற்சியளிக்க லக்ஷ்மண் ஆர்வம் காட்டவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஆஸி.,க்கு எதிராக....

இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 2026 இல் இலங்கைக்கும், அக்டோபர்-நவம்பர் 2026 இல் நியூசிலாந்திற்கும் தலா இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக வெளிநாடு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இதைத் தொடர்ந்து, ஜனவரி-பிப்ரவரி 2027-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) சொந்த மண்ணில் விளையாடுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து