எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கால்நடை வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளேயே முழுமையாக நம்பி உள்ளனர். இந்நிலையில், பருவ மழை மாற்றங்களினால் ஏற்படும் தீவன தட்டுப்பாட்டோடு நோய் பரவலையும் வேதனையுடன் சந்தித்து வருகின்றனர். கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களினால் உற்பத்தி திறன் வெகுவாக குறைவதோடு சில சமயம் கால்நடைகளேயே இழக்கவும் நேரிடுகிறது. கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களில் கோமாரி நோயின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.
கோமாரி நோய் கால்க்காணை வாய்க்காணை என்றும், கால்சப்பை வாய்சப்பை என்றும் வேறு சில பெயர்களால் அழைக்கபடுவதுண்டு. இந்நோய் “பிக்கார்னா வைரஸ்” என்னும் நச்சுயிரியால் உண்டாகிறது. இந்நோய்க் கிருமியில் 7 வகைகள் உள்ளன. அவற்றுள்; நம்நாட்டில் 4 வகைகளும், 60 க்கும் மேற்பட்ட உட்பிரிவு வகைகளும் உண்டு. ஒவ்வொன்றும் நோய் ஏற்படுத்தும் விதத்தில் வேறுபட்டவை. மேலும்,இந்நச்சுயிர் கிருமி மாறிவரும் தட்ப வெப்ப நிலையை தாங்கி அதிக நாட்கள் உயிருடன் வாழும் குணமுடையது.
நோய் பரவல் மற்றும் அறிகுறிகள் : மாடுகள், எருமைகள், ஆடுகள் மற்றும் பன்றிகள் போன்ற கால்நடைகள் இந்நோயால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இந்நோய்க் கிருமி நோயுற்ற கால்நடைகளிலிருந்து மற்றொன்றிற்கு அதே இனத்திலிருந்தோ அல்லது வேறு இனத்திலிருந்தோ நேரடியாகவும் அல்லது இக்கிருமி கலந்த தண்ணீர், உணவு மற்றும் உபகரணங்கள் மூலமாகவும் அல்லது காற்றின் மூலமாகவும் பரவக்கூடியது.
நோய் கண்ட மாடுகள் குணமான பிறகு இக்கிருமிகளை ஒரு வருடத்திற்கு மேலாக தமக்குள் தக்கவைத்து கிருமிகளை வெளிப்படுத்தும். அதேபோல் ஆடுகள் ஆறு மாதத்திற்கும், பன்றிகள் ஒரு மாதத்திற்கும் கிருமிகளை தக்கவைத்து வெளிப்படுத்தும்.
இந்நோய் கண்ட மாடுகள் கீழ்கண்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும்: அதிக காய்ச்சலுடன் சோர்வுற்று, சரிவர தீவனம் எடுக்காமல் இருக்கும் உதடுகளின் உட்புறம்,ஈறுகள், மேல்தாடை, நாக்கு, கன்னங்களின் உட்புறம் ஆகிய இடங்களில் கொப்புளங்கள் ஏற்பட்டு பின்பு உடைந்து புண்கள் உண்டாகும்.
வாயிலிருந்து சளி போன்ற நுரையுடன் கூடிய உமிழ்நீர் ஒழுகிக் கொண்டேயிருக்கும். அசை போடுவது போன்று வாயை அசைத்து ‘சப்’‘சப்’ என்ற சத்தம் எழுப்பும். கால்களில் வீக்கம் ஏற்பட்டு, சூடு அதிகமாகி, குளம்புகளுக்கிடையேயும்,குளம்பிற்கு மேலுள்ள தோலிலும் கொப்புளங்கள் தோன்றுகின்றன. பாதிக்கப்பட்ட கால்நடைகள் நொண்டும்.பின்பு கொப்புளங்கள் உடைந்து புண்கள் உண்டாகும். புண்களில் ஈக்கள் உட்கார்வதன் மூலம் புழுக்கள் வைக்கலாம்.
மாடுகளில் மடியிலும், காம்புகளிலும்கொப்புளங்கள் தோன்றும். இதனால் பால் குறைவதுடன் மடிவீக்கமும் ஏற்படும். இந்நோய் கண்ட கறவை மாடுகளிலிருந்து பாலினைக் குடிக்கும் கன்றுகள் தீவிர இதய தசை அழற்சியினால் இறந்துவிடும். நோயுற்ற பசுக்களில் சினை பிடிப்பது சிரமமாக இருக்கும். சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படும்.
இந்நோய் மாடுகளில் அதிகம் உயிர்ச்சேதம் ஏற்படுத்தாவிட்டாலும், உற்பத்தி திறன் மற்றும் உழைக்கும் சக்தியைக் குறைத்து விடுவதால் அதிக பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும்.நோயுற்றகால்நடைகளில் நாளமில்லா சுரப்பிகளில் மாற்றம் ஏற்படுவதால் தோல் உலர்ந்து சொறசொறப்பாகவும், உரோமங்கள் உதிர்வும் காணப்படும்.
தடுப்பு முறைகள் : கோமாரி நோய் வராமல் தடுக்க கன்றுகளுக்கு 8 வார வயதில் முதல் தடுப்பூசியும், 12 வார வயதில் இரண்டாவது தடுப்பூசியும், 16 வார வயதில் மூன்றாவது தடுப்பூசியும் போட வேண்டும். பிறகு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும். நோய் கிளர்ச்சி காணும் இடங்களில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என வருடத்திற்கு மூன்று முறைதடுப்பூசி போட வேண்டும். பொதுவாக மழைக்காலத்திற்கு முன்பும் கோடைக் காலத்திற்கு முன்பும் தடுப்பூசி போட வேண்டும்.
நல்ல ஆரோக்கியமான கால்நடைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போட வேண்டும். நோய் கண்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போட கூடாது. முதிர்ந்த சினையுடனும், கன்று ஈனும் தறுவாயில் உள்ள கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடலாம். கால்நடைகள் பராமரிக்கும் கொட்டகைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
நோய் கண்ட கால்நடைகள் பராமரிப்பு : நோயுற்ற கால்நடைகளை மற்ற ஆரோக்கியமான கால்நடைகளிலிருந்து பிரித்து சுத்தமான பகுதிகளில் வைத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
வாய் மற்றும் கால் புண்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் அல்லது படிகார கரைசலைக் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும். போரிக்ஆசிட் பவுடர் மற்றும் கிளிசரின் கலவையை வாய் புண்களில் தடவலாம். நாக்குப் புண் இருப்பதால் சரியாக சாப்பிட இயலாத கால்நடைகளுக்கு கம்பு அல்லது கேழ்வரகு கஞ்சியில் குளுக்கோஸ் பவுடர் கலந்து கொடுக்கலாம்.
கால் குளம்புகளில் உள்ள புண்களில் சில சமயம் ஈக்கள் மூலம் புழுக்கள் வைக்கலாம். புண்களில் டர்பென்டைன் ஆயில் இடுவதன் மூலம் புழுக்களை இறக்கச் செய்து வெளியே எடுத்து விடலாம் பிறகு புண்கள் ஆறுவதற்கு ஆன்டிசெப்டிக் பவுடரும்,ஈக்கள் உட்காராமல் தடுக்க வேப்பெண்ணையோ அல்லது ஆயின்மென்டோ தடவ வேண்டும். கால்நடை மருத்துவரின் உதவியுடன் முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
கோமாரி நோய் கண்ட மாடுகளின் பாலை கன்றுகளுக்கு ஊட்ட விடக்கூடாது. பாலைக் காய்ச்சிய பின்னரே கொடுக்க வேண்டும். நோயுற்ற கால்நடைகளை பராமரிக்கும் இடங்களில், இடத்தை சுத்தம் செய்து கிருமி நாசினி மருந்தை தெளிக்க வேண்டும். நோயுற்ற மாடுகளுக்கு பசுந்தீவனம் மற்றும் உலர்ந்த தீவனம் அளிக்கும் போது மீதமாகும் தீவனத்தை மற்ற மாடுகளுக்கு அளிக்க கூடாது. அவற்றினை எரித்து விட வேண்டும்.
நோயுற்ற கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. நோய் கிளர்ச்சியுற்ற காலங்களில் கால்நடைகளை சந்தைகளில் வாங்குவதையோ, விற்பதையோ தவிர்க்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஒவ்வொரு வருடமும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வருடத்திற்கு இரண்டு முறை அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக தடுப்புசி போடப்பட்டு வருகிறது. அனைத்து கால்நடைப் பண்ணையாளர்களும் தங்கள் கால்நடைகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகவும்.
நோய் வந்தபின் கால்நடைகளின் உற்பத்தி குறைவு, மலட்டுத்தன்மை மற்றும் இறப்பு போன்றவற்றால் ஏற்படும் இழப்பைத் தவிர்க்கும் பொருட்டு காலத்தே தடுப்பூசி போடுவோம், நோய் வருமுன் காத்து வளமோடு வாழ்வோம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்கள் அல்லது கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களைத் தொடர்புக் கொண்டு விவரங்கள் அறியலாம்.
தொடர்புக்கு - கால்நடை மருத்துவத் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு – 614 625.
தொகுப்பு - மரு.மு.வீரசெல்வம், மரு.கோ.ஜெயலட்சுமி, மரு.சோ.யோN கஷ்பிரியா, மரு.மா.வெங்கடேசன், மரு.ம.சிவகுமார், மரு.ப.செல்வராஜ்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.90 ஆயிரத்திற்கு கீழ் சரிவு
05 Nov 2025சென்னை, தங்கம் விலை நேற்றும் சரிவை சந்தித்துள்ளது.
-
சின்சினாட்டி மேயர் தேர்தல்: ஜே.டி.வான்ஸ் சகோதரரை தோற்கடித்தார் அஃப்தாப்
05 Nov 2025சின்சினாட்டி, அமெரிக்காவின் சின்சினாட்டி மேயர் தேர்தலில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் சகோதரர் கோரி போமனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஃப்தாப் புரேவல் தோற்கடித்துள்ளார்.
-
ரூ.23 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Nov 2025சென்னை, ரூ.23 கோடி செலவில் தரை மற்றும் நான்கு தளங்கள் கொண்ட புதிய மருத்துவக் கட்டிடத்துடன் 225 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை முத
-
ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்பது ஜனநாயகத்தை அழிக்க பா.ஜ.க.வின் புதிய ஆயுதம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டிய
-
அரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்: ஆதாரங்களுடன் ராகுல் குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, அரியாணா மாநில வாக்காளர் பட்டியலில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் பெண் ஒருவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி பல போலி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்று
-
பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட தேர்தல்: ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்
05 Nov 2025பாட்னா, பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
-
14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை: வெற்றி கோப்பையை அறிமுகம் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Nov 2025சென்னை, தமிழகத்தில் வரும் 28-ம் தேதி முதல் நடைபெறும் 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை தொடருக்கான வெற்றி கோப்பையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு 100 சதவீத வெற்றி சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேச்சு
05 Nov 2025சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு 100 சதவீத வெற்றி நிச்சயம் என்று பொதுக்குழுவில் விஜய் பேசினார்.
-
கோவை வன்கொடுமை சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவியை போலீசார் மீட்க தாமதம் ஏன்? எடப்பாடி பழனிசாமி கேள்வி
05 Nov 2025சென்னை, கோவையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியை மீட்க தாமதம் ஏன்..? என்று கோவை போலீசாருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ஸ்மிருதி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதாவுக்கு தலா ரூ.2.25 கோடி மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
05 Nov 2025மும்பை: மகளிர் ஒருநாள் உலக கோப்பை வென்றதற்காக மகாராஷ்டிர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவுக்கு அம்மாநில அரசு தலா ரூ.2.25 கோடி பரிசுத் தொகையை அ
-
கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
05 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்தியது.
-
எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை: கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு
05 Nov 2025சென்னை: எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசினார்.
-
கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு விண்ணப்பம் தமிழக அரசாணை வெளியீடு
05 Nov 2025சென்னை: கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசாணை வெளியிட்டது.
-
எஸ்.ஐ.ஆர் பணிகளில் குழப்பம்: என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு
05 Nov 2025சென்னை: எஸ்.ஐ.ஆர். பணியில் கணக்கீட்டு படிவங்கள் வழங்கவில்லை என்று என்.ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
-
வேலூரில் ரூ.32 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
05 Nov 2025சென்னை, 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.32 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வேலூர் மினி டைடல் பூங்காவினை முதல்வர்
-
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கூட்டணி பற்றி கவலை வேண்டாம்; தானாகவே நடக்கும்: இ.பி.எஸ். பேச்சு
05 Nov 2025சென்னை, கூட்டணி குறித்து கவலை வேண்டாம், அது தானாகவே நடக்கும் என மாவட்டச் செயலாளர்களிடம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு
05 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காரை வழிமறித்து தாக்குதல்: பா.ம.க. இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு
05 Nov 2025சேலம்: காரை வழிமறித்து தாக்குதலை தொடர்ந்து இருதரப்பினர் இடையே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கோவை வன்கொடுமை சம்பவத்தில் கூடுதல் விசாரணை அதிகாரி நியமனம்
05 Nov 2025கோவை, கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
பிலிப்பின்ஸில் கோர தாண்டவம்: கேல்மெகி புயலுக்கு 66 பேர் பலி
05 Nov 2025மணிலா: மத்திய பிலிப்பின்ஸை தாக்கிய டைபூன் டினோ என்றழைக்கப்படும் கேல்மெகி புயல் காரணமாக 66 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-
புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் துவக்கம்
05 Nov 2025புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளது.
-
இந்தியா-அமெரிக்காவின் எதிர்கால உறவுகள் குறித்து டிரம்ப் நம்பிக்கை வெள்ளை மாளிகை தகவல்
05 Nov 2025வாஷிங்டன்: இந்தியா-அமெரிக்காவின் எதிர்கால உறவுகள் குறித்து டிரம்ப் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.
-
போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் - 2 பேர் பலி
05 Nov 2025வாஷிங்டன்: போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
வாக்கு திருட்டு விவகாரம்: ராகுலுக்கு கிரண் ரிஜிஜு பதில்
05 Nov 2025புதுடெல்லி: வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுல்காந்தி பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
-
ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு மீண்டும் லபுஷேனுக்கு வாய்ப்பு
05 Nov 2025பெர்த்: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் மார்ன்ஸ் லபுசேனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


