முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் வரிக்குறைப்பு எதிரொலி: இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்: மத்திய நிதியமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 3 பெப்ரவரி 2026      இந்தியா
Nirmala 2024-12-07

டெல்லி, அமெரிக்காவின் வரிக்குறைப்பு காரணமாக இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த வரிக்குறைப்பால் உலகின் மிகப்பெரிய இரு ஜனநாயக நாடுகளும் பலனடையும் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்திருந்தார். இதனால், இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

அதேவேளை, இந்தியாவுக்கான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குறைத்துள்ளார். இந்நிலையில், இந்தியா மீதான வரியை அமெரிக்கா குறைத்துள்ளதற்கு மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், இந்தியாவில் உற்பத்தை செய்யப்படும் பொட்ருகளுக்கு நல்ல செய்தி. அமெரிக்க சந்தையில் இந்திய பொருட்கள் மீதான வரி விதிப்பு 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரிக்குறைப்பால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடி, டொனால்ட் ட்ரம்ப்பிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வரிக்குறைப்பால் உலகின் மிகப்பெரிய இரு ஜனநாயக நாடுகளும் பலனடையும் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து