எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் இத்தாலியில் நடக்கிறது.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும், இந்திய கிரிக்கெட்டின் 3 நிலை அணிகளிலும் கேப்டனாக இருப்பவருமான விராட்கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை நீண்ட காலமாக காதலித்து வருகிறார். இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்த படங்களை அவர்களே வெளியிட்டு இருந்தனர். தொடக்கத்தில் அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பின்னர் மீண்டும் ஒன்றாக இணைந்தனர்.
இந்திய அணி, தற்போது இலங்கை அணியுடனான தொடர்களில் விளையாடி வருகிறது. இத்தொடரில் அணியின் தலைவரான கோலி தனிப்பட்ட காரணங்கள் காரணமாக தனக்கு விடுப்பு வழங்கும்படி கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டு இருந்தார்.
இந்த நிலையில் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்களது திருமணம் டிசம்பர் 2-வது வாரத்தில் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடைறும் எனகூறப்பட்டது. இந்த திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள் கிறார்கள். திருமணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.டிசம்பர் 21 ம் தேதி மும்பையில் நடைபெறும் வரவேற்புக்கு இந்த ஜோடி அனைத்து நண்பர்களை அழைக்கும்.
அனுஷ்காவின் திருமண ஆடைகளை ஆடை வடிவமைப்பாளரான சப்பாசிச்சி முகர்ஜி வடிவமைத்து உள்ளார். கடந்த வாரம் அனுஷ்கா சர்மாவின் வீட்டிற்கு அவர் வந்து சென்று உள்ளார்.திருமணம் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறுகிறது. ஆனால் இது குறித்து இருவர் தரப்பில் இருந்தும் அதிகாரபூர்வமான தகவல் இல்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


