முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளுர் 108 ப்ரத்யங்கராதேவி ஆலயத்தில் மிளகாய் யாகம்: ஆயிரகணக்கில் பக்தர்கள் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2018      வேலூர்
Image Unavailable

அரக்கோணம் அருகே பள்ளுர் கிராமத்தில் 108உயர ஸ்ரீமஹா ப்ரத்யங்கராதேவி ஆலயத்தில் நாட்டு மக்கள் நலம் கருதி மிளகாய் (நிகம்பலா) யாகம் சிறப்புடன் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் ஆயிரகணக்கில் பக்தாகள்; பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர். இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், பள்ளுர் வருவாய் கிராமத்தில் 108அடி உயரத்திலான ஸ்ரீமஹா ப்ரத்யங்கராதேவி ஆலயம் உள்ளது.

மிளகாய் யாகம்

இந்த ஆலயத்தில் 108அடி உயரம் கொண்ட கூடிய ஸ்ரீமஹா ப்ரத்யங்கராதேவி அம்மன் சிலை கிழே 108 தெய்வ சிலைகளும் அமைய சிறப்பு பெற்றது. தமிழகத்தில் எங்குமில்லாத வகையில் அமைந்த இந்த ஆலயத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்று பிற்பகல் 2மணியளவில் தொடங்கி மாலை 5மணி வரையில் மிளகாய் (நிகம்பலா) யாகம் நடைபெறும். அப்போது பக்தர்கள் அம்மனை வேண்டி அவரவர் வசதிக்கு எற்ப மிளகாயை யாககுண்டத்தில் போட்டு தங்கள் பிராத்தனைகளை நிறைவு செய்;வார்கள்.

இந்த யாகத்தில் பங்கு கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடாக போன்ற அண்டை மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் வருவதை காணலாம். இதற்காக ஆலய நிர்வாக அறங்காவலர் எம்கே.மணி முதலியார் மற்றும் அவரது சகோதரர்களும், கிராம இளைஞர் அணியினரும்; சிறப்பான ஏற்பாடுகளில் ஈடுபடுவார்கள். இந்த ஆலயமானது அரக்கோணம் காஞ்சிபுரம் நெடுஞ்சாலைகளுக்கு நடுவே (பள்ளுர்) அமைய பெற்று இருப்பத்துடன்; பிரசித்தி பெற்ற வராஹி அம்மன் ஆலயமும் அமைய பெற்ளு இருப்பதால் தடையில்லாத பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து வசதிகளும் அமைந்த சரித்திர முக்கியத்துவம் மிக்க ஆன்மிக (பூமி;யாகும்) தளமாகும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து