முக்கிய செய்திகள்

மக்காச்சோளப் பயிரை தாக்கும் படை புழுவை கட்டுப்படுத்தும் விதம்: உதவி இயக்குனர் அமலா விளக்கம்

சனிக்கிழமை, 1 டிசம்பர் 2018      வேளாண் பூமி
Maize

Source: provided

தேனி மாவட்டம், போடிநாயகக்கனூர் பகுதிகளில் மக்காசோள பயரை தாக்கும் படைபுழு குறித்தும், அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் போடிநாயக்கனூர் வேளாண்மை உதவி இயக்குநர் அமலா விளக்கமளித்துள்ளார்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டாரத்தில்  மக்காச்சோளம் அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது படைபுழுவின் தாக்கம் அதிகமாக தென்படுகிறது. இந்த புழுவானது துளையிடும் வகையைச் சேர்ந்ததால்  இதன் பாதிப்பு மிகவும் அதிகம் ஆகும்.

இந்த புழுவின் தலையில்  ஆங்கில எழுத்தான (லு) வடிவ குறியிருக்கும் இதன் மூலமாக இப்புழுவினை எளிதாக அடையாளம் காணலாம். இப்புழுவானது இளம் செடிகளில் இலையுறைகளையும் முதிர்ந்த செடிகளில் கதிரின் நூலிலைகளையும்  அதிகம் சேதப்படுத்தும். இரவு நேரங்களில் சேதத்தை விளைவிக்கும்.

மூன்று முதல் ஆறு நிலை புழுக்கள் இலையுறையுனுள் சென்று பாதிப்பை உண்டாக்கும், இதனால் இலைகள் விரிவடையும் போது அதில் வரிசையாகத் துளைகள் தென்படும். இளம் செடிகளில் நுனிக்குருத்து சேதமடைந்தால் பக்க இலைகள் மற்றும் கதிர்கள் தோன்றும். ஒரு இலையுறையுனுள் இரண்டு அல்லது மூன்று புழுக்கள் மட்டும் இருக்கும். உருவத்தில் பெரியதாக இருக்கும் புழு சிறிய புழுக்களை தின்று விடும். கதிர் உருவானதற்க்கு பின்பு பாதிப்பு தோன்றினால் கதிரின் மேலுள்ள உறைகளை சேதப்படுத்தி  கதிரை சேதப்படுத்தும்.

படைப்புழுவினை கட்டுபடுத்தும் விதமான மேலாண்மை துறைகளின் விபரம்:

1. உழவு செய்வதன் மூலம் மண்ணிலுள்ள கூட்டுபுழுக்களை அழிக்க இயலும்.

2. பயிரில் அதிக அளவு தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும்

3. விதை நேர்த்தி செய்வதன் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே தவிர்க்க இயலும்.

4. காலம் தாழ்த்தி பயிர்செய்வதை தவிர்க்க வேண்டும்.

5. முதல் மழையை உபயோகித்து மக்காச்சோளவிதைகளை நடுவது படைப்புழுவின் பாதிப்பை குறைக்க இயலும்.

6. வயலை சுற்றியும் பயறு வகை மரப்பயிர்கள் அல்லது ஆண்டு முழுவதும் பூக்கும் தாவரங்களைத் தடுப்பு பயிராக பயிரிடலாம்.

7. வேலிமசாலை செடியினை சோளத்தில் ஊடுபயிராக பயிரிடலாம். வேலிமசாலில் இருந்து வெளிவரும் திரவங்கள் படைப்புழுவிற்க்கு உகந்தது அல்ல.

8. குறுகிய கால மக்காச்சோள இரகங்களை பயிரிட வேண்டும்.

9. பாதிப்புஅதிகம் வரும் போது  பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஓன்றை பயன்படுத்த வேண்டும்.

10. பேசில்லஸ் துரிஞ்சான்ஸிஸ் 2.0 மி./ 1லி

11. ஸ்பைனோசேட் 05.மி/ 1லி

12. குளோரோ ஆண்டிரிநில்ப்ரோலா  -0.3மி/1லி

13. இன்டாக்சாகார்ப் -1.மி/1லி

14. இமமெக்டின் பென்தோயேட்    -0.4கி/1லி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து