சட்டசபை இடைத்தேர்தல்: போட்டியிட விருப்பமனு அளித்த அ.தி.மு.க.வினரிடம் நாளை நேர்காணல் - இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2019      அரசியல்
eps ops 21-09-2018

சென்னை, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு செய்தவர்களுக்கு நாளை நேர்காணல் நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:-

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 18.4.2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி, விருப்ப மனு அளித்துள்ள அ.தி.மு.க.வினருக்கான நேர்காணல், தலைமைக் கழகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும்.

விருப்ப மனு...

சட்டமன்றத் தொகுதிகள் - பெரம்பூர், திருப்போரூர், பூந்தமல்லி (தனி), சோளிங்கர், நிலக்கோட்டை (தனி), குடியாத்தம் (தனி), ஆம்பூர்,  ஓசூர்,  பாப்பிரெட்டிபட்டி, விளாத்திகுளம், அரூர் (தனி), தஞ்சாவூர், ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), சாத்தூர், மானாமதுரை (தனி), பரமக்குடி (தனி) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களாகப் போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு கோரி, தங்கள் பெயரில் விருப்ப மனு அளித்துள்ள அ.தி.மு.க.வினர் அனைவரும், 17ம் தேதி (நாளை) காலை 9.30 மணிக்கு, விருப்ப மனுக் கட்டண ரசீதுடன் தவறாமல் அதிமுக தலைமைக் கழகத்திற்கு வருகை தந்து, நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து