முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.7 கோடிக்கான கிரேடு பட்டியலில் இருந்து விராட் கோலி, ரோகித்தை நீக்க பி.சி.சி.ஐ. திடீர் முடிவு

புதன்கிழமை, 21 ஜனவரி 2026      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: pti

மும்பை: கோலி, ரோகித்சர்மா இடம்பெற்றுள்ள ஏ பிளஸ் கிரேடை நீக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025-26-ம் ஆண்டுக்கான வீரர்கள் ஊதிய முறையில் இருந்து ஏ பிளஸ் நீக்கப்படுகிறது. 

4 கிரேடுகளாக... 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வீரர்களை ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என 4 கிரேடுகளாக பிரித்து ஒப்பந்தம் செய்து சம்பளம் வழங்கி வருகிறது. ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது. ஏ, பி மற்றும் சி கிரேடுகளுக்கு முறையே ரூ. 5 கோடி, ரூ. 3 கோடி, ரூ.1கோடி அளிக்கப்படுகிறது.

3 வடிவ போட்டி...

டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய 3 வடிவ போட்டிகளில் விளையாடுபவர்கள் மட்டுமே ஏ பிளஸ் கிரேடில் இருப்பார்கள். சீனியர் வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள். 20 ஓவர், டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர்.

ஊதிய முறையில்... 

இந்த நிலையில் கோலி, ரோகித்சர்மா இடம்பெற்றுள்ள ஏ பிளஸ் கிரேடை நீக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025-26-ம் ஆண்டுக்கான வீரர்கள் ஊதிய முறையில் இருந்து ஏ பிளஸ் நீக்கப்படுகிறது. ஏ, பி மற்றும் சி என 3 கிரேடுகளே இனி இடம் பெறும். கோலி, ரோகித்சர்மாவுடன் ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா ஆகியோரும் 'ஏ' பிளஸ் கிரேடில் இடம்பெற்றுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து