முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் கை காட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் பேச்சு

சனிக்கிழமை, 24 ஜனவரி 2026      தமிழகம்      அரசியல்
Senkotaiyan- 2025-09-05

சென்னை, தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் ஹீரோ விஜய் என்று தெரிவித்துள்ள செங்கோட்டையன், விஜய் கை காட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கட்சியில் இருந்த 500 பேர் நேற்று த.வெ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சி பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய செங்கொட்டையன் தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் ஹீரோ விஜய் தான் என கூறினார். மேலுல் அவர் பேசியதாவது:-

நேற்றைய தினம் பா.ஜ.க. நிகழ்ச்சி நடைபெற்றது. 1000 ரூபாய் வழங்கிய பின்புதான் கூட்டம். கூட்டத்திலே கர ஓசை கிடையாது. ஆனால் நான் இங்கே வருகிறபோது தான் பார்த்தேன். நீங்கள் அடிக்கின்ற விசிலை பார்க்கும்போது ஒரு ரூபாய் கூட சிந்தாமல் சிதராமல் நீங்களே செலவு செய்து வந்துள்ளீர்கள். யாரைப் பற்றியும் நீங்கள் கவலைப்படவில்லை, நீங்களே செலவு செய்து நீங்களே இங்கு வருகிறீர்கள். 

1000 ரூபாயும் கொடுத்து பிரியாணியும் கொடுத்து அதற்குப் பிறகு தூங்கிக்கொண்டிருக்கும் கூட்டத்தை நேற்று முன்தினம் நான் பார்த்தேன். அதற்கும் இதற்கும் உள்ள வேறுபாடுகள் இதுதான். விஜய் கை காட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர். அதனை யாராலும் மாற்றிக் காட்ட முடியாது. திரைப்படத்தில் அவர் ஹீரோ. எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் அரசில் ஹீரோவாகவும் அவர்தான் வரப்போகிறார். அதனை யாராலும் மாற்ற முடியாது.

பணம் இல்லாமலேயே வெற்றிபெறக்கூடிய இயக்கம் தான் நம்முடைய தளபதி இயக்கம். எங்கே சென்று கேட்டாலும் அவருக்குத்தான் ஓட்டு. நேற்றைய பா.ஜ.க. 5 லட்சம் பேர் வருவார்கள் என்று சொன்னார்கள், ஆனால் 60 ஆயிரம் சேர் தான் போட்டார்கள். 10 ஆயிரம் சேர் காலி. 20 ஆயிரம் பேர் தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஒருத்தரும் கை தட்டவில்லை. எல்லோருக்கும் எல்லா பதவிகளும் கிடைக்கும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும். எல்லோரும் எல்லாம் பெற வேண்டும். எல்லோரும் பொருளாதாரத்தில் உயர வேண்டும். சமநிலை தமிழ்நாட்டில் உருவாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து