முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்க்ரெட் அட்வுட், பெர்னார்டைன் எவாரிஸ்டோவுக்கு புக்கர் விருது

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : 2019-ம் ஆண்டுக்கான புக்கர் விருது கனடா எழுத்தாளர் மார்க்ரெட் அட்வுட், இங்கிலாந்து எழுத்தாளர் பெர்னார்டைன் எவாரிஸ்டோ ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.

கடந்த 1969-ம் ஆண்டு புக்கர் விருது உருவாக்கப்பட்டபின் விருது பெறும் முதல் கறுப்பின பெண் எழுத்தாளர் எவாரிஸ்டோ என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக புக்கர் விருது ஒரு எழுத்தாளருக்கு மட்டுமே வழங்கப்படும். ஆனால், அந்த விதிமுறைகளை உடைத்த நடுவர்கள் புக்கர் பரிசை இரு எழுத்தாளர்களுக்கு வழங்கியுள்ளனர். இதற்கு முன் கடந்த 1974, 1997 ஆகிய ஆண்டுகளில் புக்கர் விருதுக்கு இருவரை நடுவர்கள் தேர்வு செய்து பகிர்ந்தளித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புக்கர் விருதின் விதிமுறைப்படி விருதை கண்டிப்பாக பிரித்து வழங்குதல் கூடாது. ஆனால், விருது பெற்ற இரு எழுத்தாளர்களையும் நாங்கள் பிரித்துப் பார்க்க முடியாது என்று நடுவர்கள் விதிமுறைகளைத் தள்ளிவைத்து இருவருக்கும் விருதையும், பரிசுப் பணத்தையும் பிரித்துக் கொடுப்பதாக அறிவித்தனர். அதன்படி, 79 வயதான மார்க்ரெட் அட்வுட் எழுதிய 'தி டெஸ்டாமென்ட்,  எவாரிஸ்டோ எழுதிய 'கேர்ள் உமென் அதர் ஆகிய நூல்கள் புக்கர் விருது பெற்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து